காகிசோ ரபாடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காகிசோ ரபாடா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை வேகம்
பங்குவேகப் பந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 323)5 நவம்பர் 2015 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 114)10 சூலை 2015 எ வங்காளதேசம்
இ20ப அறிமுகம் (தொப்பி 62)5 நவம்பர் 2014 எ ஆத்திரேலியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013/14கடெங்
2014/15–presentலயன்ஸ்
2016கென்ட் (squad no. 52)
2017–தற்போதுடெல்லி கேபிடல்ஸ் (squad no. 10)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 37 75 19 55
ஓட்டங்கள் 507 259 5 708
மட்டையாட்ட சராசரி 11.79 16.18 2.50 12.00
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 34 31 5* 48*
வீசிய பந்துகள் 6,830 3,842 422 10,358
வீழ்த்தல்கள் 176 117 25 243
பந்துவீச்சு சராசரி 21.77 27.34 23.40 22.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 1 0 11
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4 0 0 5
சிறந்த பந்துவீச்சு 7/112 6/16 3/30 9/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
21/– 22/– 2/– 26/–
மூலம்: ESPNcricinfo, 6 சூலை 2019

காகிசோ ரபாடா (Kagiso Rabada) என்பவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக நவம்பர் 2014இல் வரையிட்ட நிறைவுகள் போட்டிகளிலும் நவம்பர் 2015இல் தேர்வுப் போட்டிகளிலும் அறிமுகமானார். சனவரி 2018இல் ஐசிசியின் தேர்வு மற்றும் ஒருநாள் ஆகிய இரு தரவரிசைகளிலும் முதலிடம் பிடித்தார். சூலை 2018இல் 150 மட்டையாளர்களை வீழ்த்திய இளம் பந்துவீச்சாளர் (23 வயது) என்ற சாதனையைப் படைத்தார். ஆகத்து 2018இல் இவரை உலகின் சிறந்த இளம் வீரர் என்று விஸ்டன் அறிவித்தது.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் மூலம் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[1]

2015 ஆம் ஆண்டு சூலை 10 ஆம் நாளில் நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.[2] அப்போட்டியில் 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 மட்டையாளர்களை வீழ்த்தினார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் அறிமுக போட்டியில் மும்முறை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.[3][4]

பிறகு 2015 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியின் மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.[5]

2018ஆம் ஆண்டு அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 52 லீழ்த்தல்களுடன் முதலிடம் பிடித்தார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காகிசோ_ரபாடா&oldid=3006938" இருந்து மீள்விக்கப்பட்டது