ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
வடிவம்தேர்வுத் துடுப்பாட்டம்
முதல் பதிப்பு2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
போட்டித் தொடர் வடிவம்தேர்வுப் போட்டிகள்
மொத்த அணிகள்9
தற்போதைய வாகையாளர்நியூசிலாந்து நியூசிலாந்து
அதிகமுறை வெற்றிகள்நியூசிலாந்து நியூசிலாந்து (1)
அதிகபட்ச ஓட்டங்கள் மார்னஸ் லபுஷேன் (1675)
அதிகபட்ச வீழ்த்தல்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் (71)

ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (ICC World Test Championship) என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நடத்தப்படும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். இதன் முதல் தொடர் 2019-21 ஆண்டுகளில் நடைப்பெற்றது.

முதலில் இந்தத் தொடரை 2013 வாகையாளர் கோப்பைக்குப் பதிலாக நடத்த ஐசிசி திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. பின் சூன், 2017 இல் மீண்டும் இந்தத் தொடரை நடத்தும் முயற்சியும் கைவிடப்பட்டது. தற்போது இதன் முதல் தொடர் ஆகஸ்ட் 2019 முதல் சூன் 2021 வரை நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 9 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் முடிவுக்கு ஏற்றவாறு புள்ளிகள் வழங்கப்படும். இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.[1][2]

வரலாறு[தொகு]

ஆண்டு நடத்தும் நாடு இறுதிப் போட்டி
வெற்றியாளர் இரண்டாமிடம் முடிவு நிகழ்விடம்
2019-21 பல்வேறு நாடுகள்  நியூசிலாந்து  இந்தியா நியூசிலாந்து 8 இழப்புகளால் வெற்றி பெற்றது சவுதாம்ப்டன் , இங்கிலாந்து [3]
2021–23 பல்வேறு நாடுகள்
TBD

பங்கேற்ற அணிகள்[தொகு]

2019-2021 தொடர்:-[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்ற மொத்தமுள்ள 12 அணிகளில் முதல் ஒன்பது இடங்களைப் பிடிக்கும் அணிகள் இந்தத் தொடரில் விளையாடும் தகுதியைப் பெறும்.

அணிகள் பெற்ற தரவரிசை[தொகு]

2019-2023 தொடர் :-[தொகு]

அணிகள் தொடர்கள்
2019-2021 2021-2023
 ஆப்கானித்தான்
 ஆத்திரேலியா மூன்றாமிடம் TBD
 வங்காளதேசம் ஒன்பதாமிடம் TBD
 இங்கிலாந்து நான்காமிடம் TBD
 இந்தியா இரண்டாமிடம் TBD
 அயர்லாந்து
 நியூசிலாந்து வெற்றியாளர் TBD
 பாக்கித்தான் ஆறாமிடம் TBD
 தென்னாப்பிரிக்கா ஐந்தாமிடம் TBD
 இலங்கை ஏழாமிடம் TBD
 மேற்கிந்தியத் தீவுகள் எட்டாமிடம் TBD
 சிம்பாப்வே

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. No Champions Trophy after 2013 Cricinfo. Retrieved 17 April 2012
  2. ICC presidency term to be cut to a year Cricinfo. Retrieved 17 April 2012
  3. "New Zealand crowned World Test Champions after thrilling final day" (en).

வெளியிணைப்புகள்[தொகு]

ஐசிசி அதிகாரப்பூர்வ வலைத்தளம்