உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பதுஅ உலக இருபது20 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி)
வடிவம்பன்னாட்டு இருபது20
முதல் பதிப்பு2007
கடைசிப் பதிப்பு2026
அடுத்த பதிப்பு2028
போட்டித் தொடர் வடிவம்முதல்நிலைச் சுற்று
சிறப்பு 10/12
தொடர்-சுழல் முறை
மொத்த அணிகள்20
தற்போதைய வாகையாளர் இந்தியா (மூன்றாவது முறை)
அதிகமுறை வெற்றிகள் இந்தியா (3 முறை)
அதிகபட்ச ஓட்டங்கள்இந்தியா விராட் கோலி (1,292)[1]
அதிகபட்ச வீழ்த்தல்கள்வங்காளதேசம் சகீப் அல் அசன் (50)[2]

ஐசிசி இருபது20 உலகக்கிண்ணம் (ICC T20 World Cup) என்பது பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) நடத்தும் இந்தத் தொடரில் தற்போது 16 அணிகள் பங்கேற்றுள்ளன, இதில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் தரவரிசையில் இருக்கும் முதல் பத்து அணிகளும், இருபது20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆறு அணிகளும் அடங்கும். அனைத்து போட்டிகளும் இருபது20 வகையில் விளையாடப்படுகின்றன.

இந்நிகழ்வு பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். எனினும் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருந்த தொடரைக் கைவிடுவதாக ஐசிசி அறிவித்தது. தற்போது 4 ஆண்டுகள் கழித்த பிறகு 2020ஆம் ஆண்டு இருபது20 உலக்கிண்ணத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 முறையும் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் வென்று உலக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

முடிவுகள்

[தொகு]
ஆண்டு நிகழ்விடம் இறுதிப்போட்டி நிகழ்விடம் இறுதிப்போட்டி
வெற்றி இரண்டாமிடம் வித்தியாசம்
2007  தென்னாப்பிரிக்கா ஜோகானஸ்பேர்க்  இந்தியா
157/5 (20 நிறைவுகள்)
 பாக்கித்தான்
152 all out (19.4 நிறைவுகள்)
5 ஓட்டங்கள்
ஆட்டவிபரம்
2009  இங்கிலாந்து இலண்டன்  பாக்கித்தான்
139/2 (18.4 நிறைவுகள்)
 இலங்கை
138/6 (20 நிறைவுகள்)
8 இலக்குகள்
ஆட்டவிபரம்
2010  மேற்கிந்தியத் தீவுகள் பிரிஜ்டவுண்  இங்கிலாந்து
148/3 (17 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
147/6 (20 நிறைவுகள்)
7 இலக்குகள்
ஆட்டவிபரம்
2012  இலங்கை கொழும்பு  மேற்கிந்தியத் தீவுகள்
137/6 (20 நிறைவுகள்)
 இலங்கை
101/10 (18.4 நிறைவுகள்)
36 ஓட்டங்கள்
ஆட்டவிபரம்
2014  வங்காளதேசம் டாக்கா  இலங்கை
134/4 (17.5 நிறைவுகள்)
 இந்தியா
130/4 (20 நிறைவுகள்)
6 இலக்குகள்
ஆட்டவிபரம்
2016  இந்தியா கொல்கத்தா  மேற்கிந்தியத் தீவுகள்
161/6 (19.4 நிறைவுகள்)
 இங்கிலாந்து
155/9 (20 நிறைவுகள்)
4 இலக்குகள்
ஆட்டவிபரம்
2021  ஐக்கிய அரபு அமீரகம்
 ஓமான்
துபாய்  ஆத்திரேலியா
173/2 (18.5 நிறைவுகள்)
 நியூசிலாந்து
172/4 (20 நிறைவுகள்)
8 இலக்குகள்

ஆட்டவிபரம்

2022  ஆத்திரேலியா மெல்போர்ன்  இங்கிலாந்து
138/5 (19 நிறைவுகள்)
 பாக்கித்தான்
137/8 (20 நிறைவுகள்)
5 இலக்குகள்
ஆட்டவிபரம்
2024  ஐக்கிய அமெரிக்கா
 மேற்கிந்தியத் தீவுகள்
பிரிஜ்டவுண்  இந்தியா
176/7 (20 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
169/7 (20 நிறைவுகள்)
7 ஓட்டங்கள்
ஆட்டவிபரம்
2026  இந்தியா
 இலங்கை
அகமதாபாத்  இந்தியா
255/5 (20 நிறைவுகள்)
 நியூசிலாந்து
159 (19 நிறைவுகள்)
96 ஓட்டங்கள்
ஆட்டவிபரம்

மேற்கோள்கள்

[தொகு]