அமெரிக்க துடுப்பாட்ட சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்காக்களின் துடுப்பாட்ட சங்கம்
தலைமையகம்டோரண்டோ, ஒண்டாரியோ, கனடா
உறுப்பினர்கள்
18 அங்கத்தினர் நாடுகள்
வலைத்தளம்அலுவல்முறை தளம்

அமெரிக்கத் துடுப்பாட்ட சங்கம் (Americas Cricket Association) வட, தென் அமெரிக்காக்கள் மற்றும் கரிபியன் நாடுகளில் துடுப்பாட்டப் போட்டிகளை மேற்பார்வையிடும் ஓர் பன்னாட்டு அமைப்பாகும். இது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் வழிநடத்தலில் இயங்குகிறது. பதினெட்டு அங்கத்தினர் நாடுகளைக் கொண்ட இச்சங்கம் இவ்வலயத்தில் துடுப்பாட்டத்தின் வளர்ச்சி, சந்தைப்படுத்துதல் மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பேற்கிறது.

அமெரிக்கத் துடுப்பாட்ட சங்கம் உலகக்கிண்ணத்திற்கு தகுநிலை போட்டிகளில் பங்கேற்க வகை செய்யும் முதன்மை பன்னாட்டுப் போட்டிகளான பதுஅ அமெரிக்காக்களின் வாகையாளர் போட்டிகளை நடத்துகிறது. இவ்வலயத்தில் முதன்முறையாக கரீபியன் தீவுகளில் 2007 உலகக்கிண்ணம் நடைபெற்றது.

அமெரிக்கத் துடுப்பாட்ட சங்க அங்கத்தினர் நாடுகள்[1][தொகு]

முழுமையான தேர்வு நிலை

துணை அங்கத்தினர் நிலை

இணை நிலை அங்கத்தினர்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-06-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-01-22 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]