2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 ஐசிசி ஆண்கள் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
2023 ICC Men's Cricket World Cup
அதிகாரபூர்வ சின்னம்
நாட்கள்5 அக்டோபர் – 19 நவம்பர் 2023
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் (ப.ஒ.நா)
போட்டித் தொடர் வடிவம்சுழல்-முறையும், ஒற்றை வெளியேற்றமும்
நடத்துனர்(கள்)இந்தியா இந்தியா
வாகையாளர் ஆத்திரேலியா (6-ஆம் தடவை)
இரண்டாமவர் இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்10
மொத்த போட்டிகள்48
தொடர் நாயகன் விராட் கோலி
அதிக ஓட்டங்கள் விராட் கோலி (765)
அதிக வீழ்த்தல்கள் முகம்மது சமி (24)
அலுவல்முறை வலைத்தளம்இணையதளம்
2019
2027

2023 ஐசிசி ஆண்கள் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2023 ICC Men's Cricket World Cup) என்பது துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் 13-ஆவது பதிப்பாகும், இது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இத்தொடரை 2023 அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியா பொறுப்பேற்று நடத்தியது. ஆத்திரேலியா இத்தொடரில் வெற்றியீட்டியது.[1]

இத்தொடர் 2023 பெப்ரவரி, மார்ச்சில் நடத்தப்படுவதாக இருந்து, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பின்போடப்பட்டது. இங்கிலாந்து அணி 2019 பதிப்பில் நியூசிலாந்தை இறுதிப்போட்டியில் வென்று நடப்பு வாகையாளராகப் போட்டியிட்டது. மொத்தம் 10 தேசிய அணிகள் 2023 தொடரில் போட்டியிட்டன. முதல்தடவையாக இந்தியா தனித்து உலகக்கிண்ணப்போட்டியை இம்முறை நடத்தியது. முன்னதாக இந்தியத் துணைக்கண்டத்தின் ஏனைய நாடுகளுடன் இணைந்து 1987, 1996, 2011 போட்டிகளை நடத்தியிருந்தது.

இறுதிப்போட்டி 2023 நவம்பர் 19 அன்று அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் விளையாடப்பட்டது. ஆத்திரேலிய அணி ஆறாவது தடவையாக உலகக்கிண்னத்தைக் கைப்பறியது. இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மும்பை வான்கேடே அரங்கம், கொல்கத்தா ஈடம் கார்டன்சு ஆகியவற்றில் நடைபெற்றன.

2023 உலகக்கிண்ண தொடக்கநிலைப் போட்டிகளின் இறுதிப் புள்ளிப் பட்டியலில் முதல் ஏழு இடங்களைப் பிடித்த அணிகள், புரவலர்களான பாக்கித்தானுடன், அடுத்த 2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்துக்குத் தகுதி பெற்றன.

நிகழிடங்கள்

இத்தொடர் இந்தியாவின் 10 வெவ்வேறு நகரங்களில் உள்ள 10 துடுப்பாட்ட அரங்குகளில் நடைபெற்றது. முதல் இறுதிப்போட்டி மும்பையிலுள்ள வான்கடே அரங்கிலும், இரண்டாவது அரையிறுதிப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் அரங்கிலும் நடைபெற்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி நடைபெற்றது.[2]

அகமதாபாத் பெங்களூரு சென்னை டெல்லி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம் எம். சின்னசுவாமி அரங்கம் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்
கொள்ளளவு: 132,000[3] கொள்ளளவு: 40,000[4] கொள்ளளவு: 50,000[5] கொள்ளளவு: 41,842[6]
போட்டிகள்: 5 (இறுதிப்போட்டி உட்பட) போட்டிகள்: 5 போட்டிகள்: 5 போட்டிகள்: 5
Narendra Modi Stadium
M. A. Chidambaram Stadium
Arun Jaitley Stadium
தரம்சாலா ஐதராபாத்
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 23,000[7] கொள்ளளவு: 55,000[8]
போட்டிகள்: 5 போட்டிகள்: 3
கொல்கத்தா லக்னோ மும்பை புனே
ஈடன் கார்டன்ஸ் எக்கானா துடுப்பாட்ட அரங்கம் வான்கேடே அரங்கம் மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம்
கொள்ளளவு: 66,000[9] கொள்ளளவு: 50,000[10] கொள்ளளவு: 32,000[11] கொள்ளளவு: 37,406
போட்டிகள்: 5 (அரையிறுதிப்போட்டி உட்பட) போட்டிகள்: 5 போட்டிகள்: 5 (அரையிறுதிப்போட்டி உட்பட) போட்டிகள்: 5

போட்டி அதிகாரிகள்

ஐசிசி 2023 செப்டம்பர் 8 அன்று தொடருக்கான 20 போட்டி அதிகாரிகளை அறிவித்தது.[12][13]

கள நடுவர்கள்

ஆத்திரேலியா

வங்காளதேசம்

இங்கிலாந்து

இந்தியா

நியூசிலாந்து

பாக்கித்தான்

தென்னாப்பிரிக்கா

இலங்கை

மேற்கிந்தியத் தீவுகள்

நடுவர்கள்

குழுநிலைப் போட்டிகள்

அக்டோபர் 5ஆம் தேதி உலகக்கிண்ணத்தின் தொடக்கப் போட்டிக்கு 100 நாட்கள் முன்பு 27 சூன் 2023 அன்று மும்பையில் நடந்த நிகழ்வில் போட்டி அட்டவணையை ஐசிசி அறிவித்தது.[2]

புள்ளிப்பட்டியல்

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  இந்தியா 9 9 0 0 18 2.570 அரையிறுதிக்குத் தகுதி, அத்துடன்
2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்திற்குத் தகுதி
2  தென்னாப்பிரிக்கா 9 7 2 0 14 1.261
3  ஆத்திரேலியா 9 7 2 0 14 0.841
4  நியூசிலாந்து 9 5 4 0 10 0.743
5  பாக்கித்தான் 9 4 5 0 8 −0.199 2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்திற்குத் தகுதி[a]
6  ஆப்கானித்தான் 9 4 5 0 8 −0.336
7  இங்கிலாந்து 9 3 6 0 6 −0.572
8  வங்காளதேசம் 9 2 7 0 4 −1.087
9  இலங்கை 9 2 7 0 4 −1.419
10  நெதர்லாந்து 9 2 7 0 4 −1.825
மூலம்: ICC
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள்; 2) வெற்றிகள்; 3) நிகர ஓட்ட விகிதம்; 4) சம புள்ளிகள் பெற்ற அணிகளுக்கிடையே நடந்த போட்டிகளின் முடிவுகள்; 5) தொடருக்கு முந்தைய வரிசைப்பாடு
குறிப்புகள்:
 1. பாக்கித்தான் புரவலராக 2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்திற்குத் தானாகவே தகுதி பெற்றது.
குழுநிலைப் போட்டிகள்
5 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
282/9 (50 நிறைவுகள்)
 நியூசிலாந்து
283/1 (36.2 நிறைவுகள்)
ஜோ ரூட் 77 (86)
மாட் என்றி 3/48 (10 நிறைவுகள்)
டேவன் கான்வே 152* (121)
சாம் கரன் 1/47 (6 நிறைவுகள்)
நியூசிலாந்து 9 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: இரச்சின் இரவீந்திரா (நியூ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இங்கிலாந்தின் அனைத்து வீரர்களும் இரட்டை எண்ணிக்கை ஓட்டங்களை எடுத்தமை பன்னாட்டு ஒருநாள் போட்டியொன்றில் ஒரு அணியின் அனைத்து வீரர்களும் இரட்டை எண்ணிக்கை ஓட்டங்களைப் பெற்ற முதல் சந்தர்ப்பமாக அமைந்தது.[14]
 • இரச்சின் இரவீந்திரா (நியூ) தனது முதலாவது ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[15]
 • டேவன் கான்வே, இரச்சின் இரவீந்திரா இணைந்து நியூசிலாந்துக்காக பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 2வது இலக்கிற்கு அதிகபட்ச இணைப்போட்டங்களை எடுத்தனர்.[16]

6 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
286 (49 நிறைவுகள்)
 நெதர்லாந்து
205 (41 நிறைவுகள்)
சவூத் சக்கீல் 68 (52)
பாசு டெ லீட் 4/62 (9 நிறைவுகள்)
பாசு டெ லீட் 67 (68)
ஆரிசு ரவூஃப் 3/43 (9 நிறைவுகள்)
பாக்கித்தான் 81 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாது
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ)
ஆட்ட நாயகன்: சவூத் சக்கீல் (பாக்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

7 அக்டோபர் 2023
10:30
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
156 (37.2 நிறைவுகள்)
 வங்காளதேசம்
158/4 (34.4 நிறைவுகள்)
வங்காளதேசம் 6 இலக்குகளால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: மெஹதி ஹசன் (வங்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • ரகுமானுல்லா குர்பாசு ஆப்கானித்தானின் மிக விரைவான போட்டியாளரானார் (27 இன்னிங்சுகள்).[17]

7 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
428/5 (50 நிறைவுகள்)
 இலங்கை
326 (44.5 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 102 ஓட்டங்களால் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), சரஃபுதுல்லா (வங்)
ஆட்ட நாயகன்: எய்டென் மார்க்ரம் (தெஆ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • தென்னாப்பிரிக்காவின் 428/5 உலகக்கிண்ண வரலாற்றில் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையாகும்.[18]
 • எய்டென் மார்க்ரம் (தெஆ) எடுத்த சதம் உலகக்கிண்ண வரலாற்றில் மிக விரைவானதாகும் (49 பந்துகள்).[19]
 • இந்தப் போட்டியில் எடுக்கப்பட்ட 754 ஓட்டங்களே உலகக்கிண்ண வரலாற்றில் அதிகபட்ச மொத்த ஓட்டங்களாகும்.[20]

8 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்ட விவரம்
ஆத்திரேலியா 
199 (49.3 நிறைவுகள்)
 இந்தியா
201/4 (41.2 நிறைவுகள்)
இந்தியா 6 இலக்குகளால் வெற்றி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்)
ஆட்ட நாயகன்: கே. எல். ராகுல் (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

9 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
322/7 (50 நிறைவுகள்)
 நெதர்லாந்து
223 (46.3 நிறைவுகள்)
வில் யங் 70 (80)
ரால்ப் வான் டெர் மெர்வ் 2/56 (9 நிறைவுகள்)
கொலின் ஏக்கர்மேன் 69 (73)
மிட்செல் சான்ட்னர் 5/59 (10 நிறைவுகள்)
நியூசிலாந்து 99 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாது
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: மிட்செல் சான்ட்னர் (நியூ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • சீபிரேன்ட் எங்கெல்பிரெக்ட் (நெத) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

10 அக்டோபர் 2023
10:30
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
364/9 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
227 (48.2 நிறைவுகள்)
டேவிட் மலான் 140 (107)
மகதி அசன் 4/71 (8 நிறைவுகள்)
லிதன் தாஸ் 76 (66)
ரீசு தொப்லி 4/43 (10 நிறைவுகள்)
இங்கிலாந்து 137 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: டேவிட் மலான் (இங்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஜோனி பேர்ஸ்டோ (இங்) தனது 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[21]
 • ஜோ ரூட் (இங்) இங்கிலாந்தின் அதிக ஓட்டங்களை எடுத்த வீரரானார்.[22]

10 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
344/9 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
345/4 (48.2 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 122 (77)
அசன் அலி 4/71 (10 நிறைவுகள்)
பாக்கித்தான் 6 இலக்குகளால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாது
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: முகம்மது ரிஸ்வான் (பாக்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • சதீர சமரவிக்ரம (இல) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[23]
 • இமாம்-உல்-ஹக் (பாக்) தனது 3,000-ஆவது பன்னாட்டு ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[24]
 • அப்துல்லா சாதிக் (பாக்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் சதத்தைப் பெற்றார்.[25]
 • துடுப்பாட்ட உலகக்கிண்ண வரலாற்றில் அதிக வெற்றிகரமான ஓட்டத் துரத்தல் ஆகும்.[26]
 • 1998-இல் ஆத்திரேலியாவுக்கு எதிராக பாக்கித்தானுக்கும், 2013-இல் ஆத்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்கும் பிறகு ஒருநாள் பன்னாட்டுப் போட்டி ஒன்றில் நான்கு சதங்கள் அடிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.[27]

11 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
272/8 (50 நிறைவுகள்)
 இந்தியா
273/2 (35 நிறைவுகள்)
ரோகித் சர்மா 131 (84)
ரசீத் கான் 2/57 (8 நிறைவுகள்)
இந்தியா 8 இலக்குகளால் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)

12 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்ட விவரம்
தென்னாப்பிரிக்கா 
311/7 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
177 (40.5 நிறைவுகள்)
தென்னாபிரிக்கா 134 ஓட்டங்களால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், லக்னோ
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (தெஆ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

13 அக்டோபர் 2023
14:00
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
245/9 (50 நிறைவுகள்)
 நியூசிலாந்து
248/2 (42.5 நிறைவுகள்)
நியூசிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
மு. அ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: லொக்கி பெர்கசன் (நியூ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • டிரென்ட் போல்ட் (நியூ) போட்டிகளின் அடிப்படையில் (107) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 200 இலக்குகளை மிக வேகமாக எடுத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஆனார். இது ஒட்டுமொத்தமாக மூன்றாவதாகும்.[30]

14 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
191 (42.5 நிறைவுகள்)
 இந்தியா
192/3 (30.3 நிறைவுகள்)
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: ஜஸ்பிரித் பும்ரா (இந்)
 • நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

15 அக்டோபர் 2023
14:00
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
284 (49.5 நிறைவுகள்)
 இங்கிலாந்து
215 (40.3 நிறைவுகள்)
ஆரி புரூக் 66 (61)
ரஷீத் கான் 3/37 (9.3 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 69 ஓட்டங்களால் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: சரஃபுதுல்லா (வங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: முஜீப் உர் ரகுமான் (ஆப்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • முகம்மது நபி, ரஹ்மத் ஷா (ஆப்) இருவரும் முறையே தமது 150-ஆவது, 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.[31]
 • பன்னாட்டு துடுப்பாட்ட வரலாற்றில் இங்கிலாந்தின் ஆப்கானித்தானுடனான முதலாவது தோல்வி இதுவாகும்.[32]

16 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
209 (43.3 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
215/5 (35.2 நிறைவுகள்)
குசல் பெரேரா 78 (82)
ஆடம் சம்பா 4/47 (8 நிறைவுகள்)
ஆத்திரேலியா 5 இலக்குகளால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், இலக்னோ
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: ஆடம் சம்பா (ஆத்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

17 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
245/8 (43 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
207 (42.5 நிறைவுகள்)
இசுக்கொட் எட்வர்ட்சு 78* (69)
மார்கோ ஜான்சன் 2/27 (8 நிறைவுகள்)
டேவிட் மில்லர் 43 (52)
லோகன் வான் பீக் 3/60 (8.5 நிறைவுகள்)
நெதர்லாந்து 38 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: இசுக்கொட் எட்வர்ட்சு (நெத)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக ஆட்டம் அணிக்கு 43 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.

18 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
288/6 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
139 (34.4 நிறைவுகள்)
கிளென் பிலிப்சு 71 (80)
நவீன்-உல்-ஹக் 2/48 (8 நிறைவுகள்)
ரஹ்மத் ஷா 36 (62)
லொக்கி பெர்கசன் 3/19 (7 நிறைவுகள்)
நியூசிலாந்து 149 ஓட்டங்களால் வெற்றி
மு. அ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: சோயல் வில்சன் (மேஇ), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிளென் பிலிப்சு (நியூ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • மிட்செல் சான்ட்னர் (நியூ) தனது 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[33]

19 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
256/8 (50 நிறைவுகள்)
 இந்தியா
261/3 (41.3 நிறைவுகள்)
லிதன் தாஸ் 66 (82)
ரவீந்திர ஜடேஜா 2/38 (10 நிறைவுகள்)
விராட் கோலி 103* (97)
மெஹதி ஹசன் 2/47 (10 நிறைவுகள்)
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

20 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
367/9 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
305 (45.3 நிறைவுகள்)
இமாம்-உல்-ஹக் 70 (71)
ஆடம் சம்பா 4/53 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 62 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: டேவிட் வார்னர் (ஆத்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஆடம் சம்பா (ஆத்) தனது 150-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[34]

21 அக்டோபர் 2023
10:30
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
262 (49.4 நிறைவுகள்)
 இலங்கை
263/5 (48.2 நிறைவுகள்)
சதீர சமரவிக்ரம 91* (107)
ஆரியன் தட் 3/44 (10 நிறைவுகள்)
இலங்கை 5 இலக்குகளால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், இலக்னோ
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: சதீர சமரவிக்ரம (இல)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

21 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
399/7 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
170 (22 நிறைவுகள்)
ஏய்ன்றிச் கிளாசென் 109 (67)
இரீசு தொப்லி 3/88 (8.5 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 229 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: ஏய்ன்றிச் கிளாசென் (தெஆ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இங்கிலாந்து அணி 229 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஒரு நாள் பன்னாட்டு அரங்கில் அவர்களின் மிகப்பெரிய தோல்வியை (ஓட்டங்கள் அடிப்படையில்) சந்தித்தது.

22 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
273 (50 நிறைவுகள்)
 இந்தியா
274/6 (48 நிறைவுகள்)
இந்தியா 4 இலக்குகளால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), ஏட்ரியன் ஓல்சுடொக் (தெ.ஆ)
ஆட்ட நாயகன்: முகம்மது சமி (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • சுப்மன் கில் (இந்) தனது 2,000-ஆவது பன்னாட்டு ஒருநாள் ஓட்டைத்தை எடுத்தார். இது இன்னிங்க்சு வாரியாக (38) அதிவிரைவான சாதனை ஆகும்.[35]

23 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
282/7 (50 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
286/2 (49 நிறைவுகள்)
பாபர் அசாம் 74 (92)
நூர் அகமது 3/49 (10 நிறைவுகள்)
இப்ராகிம் சத்ரன் 87 (113)
அசன் அலி 1/44 (10 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 8 இலக்குகளால் வெற்றி
மு. அ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: இப்ராகிம் சத்ரன் (ஆப்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் ஆப்கானித்தானுக்கெதிரான பாக்கித்தானின் முதலாவது தோல்வி இதுவாகும்.[36]

24 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
382/5 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
233 (46.4 நிறைவுகள்)
குவின்டன் டி கொக் 174 (140)
அசன் மகமுட் 2/67 (6 நிறைவுகள்)
தென்னாபிரிக்கா 149 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: அலெக்ஸ் வார்ப் (இங்), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: குவின்டன் டி கொக் (தெஆ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

25 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
399/8 (50 நிறைவுகள்)
 நெதர்லாந்து
90 (21 நிறைவுகள்)
கிளென் மாக்சுவெல் 106 (44)
லோகன் வான் பீக் 4/74 (10 நிறைவுகள்)
விக்ரம்சித் சிங் 25 (25)
ஆடம் சம்பா 4/8 (3 நிறைவுகள்)
ஆத்திரேலியா 309 ஓட்டங்களால் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), சரஃபுதுல்லா (வங்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ஆத்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • கிளென் மாக்சுவெல் (ஆசி) உலகக்கோப்பை வரலாற்றில் எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் (40) விரைவான சதத்தை எடுத்து எய்டன் மார்க்ரத்தின் சாதனையை முறியடித்தார்.[37]
 • பாஸ் டி லீட் (நெத) பன்னாட்டு ஒருநாள் போட்டி ஒன்றில் அதிகபட்ச ஓட்டங்களைக் (115) கொடுத்த பந்துவீச்சாளரானார்.[38]
 • 2015 இல் ஆப்கானித்தானுக்கு எதிராக 275 ஓட்ட வேறுபாட்டில் பெற்ற வெற்றியை முறியடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் ஓட்டங்களின் அடிப்படையில் (309) ஆத்திரேலியாவின் அதிகபட்ச வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.[39]

26 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
156 (33.2 நிறைவுகள்)
 இலங்கை
160/2 (25.4 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 43 (73)
லகிரு குமார 3/35 (7 நிறைவுகள்)
இலங்கை 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ)
ஆட்ட நாயகன்: லகிரு குமார (இல)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

27 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
பாக்கித்தான் 
270 (46.4 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
271/9 (47.2 நிறைவுகள்)
தென்னாப்பிரிக்கா 1 இலக்கால் வெற்றி
மு. அ. சிதம்பரம் அரங்கம், சென்னை
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: தப்ரைசு சம்சி (தெஆ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் உசாமா மீர் (பாக்) சதாப் கானுக்குப் பதிலாக மாற்றப்பட்டார்.[40]

28 அக்டோபர் 2023
10:30
ஆட்ஃப்டவிபரம்
ஆத்திரேலியா 
388 (49.2 நிறைவுகள்)
 நியூசிலாந்து
383/9 (50 நிறைவுகள்)
ஆத்திரேலியா 5 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), சரஃபுதுல்லா (வங்)
ஆட்ட நாயகன்: திராவிசு கெட் (ஆசி)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இந்தப் போட்டியில் 771 ஓட்டங்கள் அடித்ததே உலகக் கோப்பைப் போட்டியில் அதிகபட்ச ஓட்டத் தொகையாகும். இது 2023 உலகக்கிண்ண தென்னாப்பிரிக்கா-இலங்கை போட்டியின் 754 ஓட்டங்களை விஞ்சியது.[41]
 • இது ஆத்திரேலியாவின் 100-ஆவது உலகக்கோப்பைப் போட்டியாகும்.

28 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
229 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
142 (42.2 நிறைவுகள்)
இசுக்காட் எட்வர்ட்சு 68 (89)
முசுத்தாபிசூர் ரகுமான் 2/36 (10 நிறைவுகள்)
மெகதி அசன் 35 (40)
பவுல் வான் மீக்கெரன் 4/23 (7.2 நிறைவுகள்)
நெதர்லாந்து 87 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: சோயல் வில்சன் (மேஇ), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: பவுல் வான் மீக்கெரன் (நெத)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

29 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
229/9 (50 நிறைவுகள்)
 இங்கிலாந்து
129 (34.5 நிறைவுகள்)
ரோகித் சர்மா 87 (101)
டேவிட் வில்லி 3/45 (10 நிறைவுகள்)
இந்தியா 100 ஓட்டங்களால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், இலக்னோ
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

30 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
241 (49.3 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
242/3 (45.2 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 46 (60)
பசல்கக் பரூக்கி 4/34 (10 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 7 இலக்குகளால் வெற்றி
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: பசல்கக் பரூக்கி (ஆப்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • ரசீத் கான் (ஆப்) தனது 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[42]

31 அக்டோபர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
204 (45.1 நிறைவுகள்)
 பாக்கித்தான்
205/3 (32.3 நிறைவுகள்)
பக்கார் சமான் 81 (74)
மெகதி அசன் 3/60 (9 நிறைவுகள்)
பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: பக்கார் சமான் (பாக்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • சகீன் அஃப்ரிடி (பாக்), மெகதி அசன் (வங்) இருவரும் தமது 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினர்.[43][44]
 • இப்போட்டியின் முடிவை அடுத்து வங்காளதேசம் அரையிறுதிக்குத் தகுதிபெறத் தவறியது.

1 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
357/4 (50 நிறைவுகள்)
 நியூசிலாந்து
167 (35.3 நிறைவுகள்)
தென்னாபிரிக்கா 190 ஓட்டங்களால் வெற்றி
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: ராசி வான் டெர் டசென் (தெஆ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

2 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
357/8 (50 நிறைவுகள்)
 இலங்கை
55 (19.4 நிறைவுகள்)
கசுன் ராஜித 14 (17)
முகம்மது சமி 5/18 (5 நிறைவுகள்)
இந்தியா 302 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: முகம்மது சமி (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • தில்சான் மதுசங்க (இல) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் ஐ-வீழ்த்தலைப் பெற்றார்.[45]
 • முகம்மது சமி உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக இலக்குகளை (44) வீழ்த்தி சாதனை படைத்தார்.[46]
 • உலகக்கோப்பைப் போட்டிகளில் ஓட்டங்களின் அடிப்படையில் இந்தியாவின் அதியுயர் வெற்றி இதுவாகும்.[47][48][49]
 • இப்போட்டி முடிவை அடுத்து இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[50]

3 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
நெதர்லாந்து 
179 (46.3 நிறைவுகள்)
 ஆப்கானித்தான்
181/3 (31.3 நிறைவுகள்)
அசுமதுல்லா சகிதி 56* (64)
சக்கீப் சுல்பிக்கார் 1/25 (3 நிறைவுகள்)
ஆப்கானித்தான் 7 இலக்குகளால் வெற்றி
எக்கானா துடுப்பாட்ட அரங்கம், இலக்னோ
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்), சரஃபுதுல்லா (வங்)
ஆட்ட நாயகன்: முகம்மது நபி (ஆப்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • முஜீப் உர் ரகுமான் (ஆப்) தனது 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[51]

4 நவம்பர் 2023
10:30
ஆட்டவிபரம்
நியூசிலாந்து 
401/6 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
200/1 (25.3 நிறைவுகள்)
இரச்சின் இரவீந்திரா 108 (94)
முகம்மது வசீம் 3/60 (10 நிறைவுகள்)
பக்கர் சமான் 126* (81)
டிம் சௌத்தி 1/27 (5 நிறைவுகள்)
பாக்கித்தான் 21 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: பக்கர் சமான் (பாக்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக ஆட்டம் முழுமையாக இடம்பெறவில்லை.
 • பன்னாட்டு ஒருநாள் வரலாற்றில் நியூசிலாந்தின் 401/6 மூன்றாவது அதிக தோல்வியடைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும்.[52]
 • இவ்வாட்ட முடிவை அடுத்து தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.[53]

4 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா 
286 (49.3 நிறைவுகள்)
 இங்கிலாந்து
253 (48.1 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 64 (90)
ஆடம் சம்பா 3/21 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 33 ஓட்டங்களால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), கிறிஸ் கஃப்பனி (நியூ)
ஆட்ட நாயகன்: ஆடம் சம்பா (ஆசி)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து இங்கிலாந்து அரையிறுதியில் விளையாடும் தகுதியை இழந்தது.[54]

5 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
326/5 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
83 (27.1 நிறைவுகள்)
விராட் கோலி 101* (121)
கேசவ் மகராச் 1/30 (10 நிறைவுகள்)
இந்தியா 243 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), பவுல் ரைபல் (ஆசி)
ஆட்ட நாயகன்: விராட் கோலி (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி (இந்) பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டத்தில் அதிக சதங்கள் (49) அடித்த சச்சின் தெண்டுல்கருடன் இணைகிறார். மேலும் முதல் முறையாக ஒரு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 500 ஓட்டங்களைக் கடந்தார்.[55]
 • தென்னாப்பிரிக்காவின் 83 உலகக் கோப்பைகளில் அவர்களின் மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும், இது 2007-இல் ஆத்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் எடுத்த 149 ஐ விடக் குறைவு.[56]
 • தென்னாப்பிரிக்காவின் 243 ஓட்டங்களாலான தோல்வி, ஓட்டங்களின் அடிப்படையில் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் அவர்களின் மிகக் கடுமையான தோல்வியாகும், இது 2002-இல் பாக்கித்தானிடம் பெற்ற 182 ஓட்டத் தோல்வியை முறியடித்தது.[57]

6 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
279 (49.3 நிறைவுகள்)
 வங்காளதேசம்
282/7 (41.1 நிறைவுகள்)
வங்காளதேசம் 3 இலக்குகளால் வெற்றி
அருண் ஜேட்லி விளையாட்டரங்கம், தில்லி
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: சகீப் அல் அசன் (வங்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • அஞ்செலோ மத்தியூஸ் (இல) பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் "நேரக்கடத்தல்" (timed-out) காரணமாக ஆட்டமிழந்த முதலாவது வீரர் ஆனார்.[58]
 • இவ்வாட்ட முடிவை அடுத்து இலங்கை அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.[59]

7 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
291/5 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
293/7 (46.5 நிறைவுகள்)
ஆத்திரேலியா 3 இலக்குகளால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: மைக்கல் கோ (இங்), அலெக்ஸ் வார்ப் (இங்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ஆசி)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இப்ராகிம் சத்ரன் (ஆப்) உலகக்கோப்பைப் போட்டியொன்றில் சதம் அடித்த முதலாவது ஆப்கன் வீரர் ஆனார்.[60]
 • 202-ஓட்ட கிளென் மாக்சுவெல், பாட் கம்மின்ஸ் (ஆசி) இடையேயான 202 ஓட்டங்கள் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச 8-வது இலக்கு இணையாட்டம் ஆகும்.
 • கிளென் மாக்சுவெல் (ஆசி) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆத்திரேலிய வீரர் ஆனார்.[61]
 • கிளென் மாக்சுவெல் (ஆசி) பன்னாட்டு ஒருநாள் பாட்டிகளில் இரண்டாவதாக மட்டையாடி செய்த அதிகபட்ச தனிநபர் சாதனையையும் (201) செய்தார்.[62]
 • இவ்வாட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[63]

8 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
339/9 (50 நிறைவுகள்)
 நெதர்லாந்து
179 (37.2 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 108 (84)
பாஸ் டி லீட் 3/74 (10 நிறைவுகள்)
தேசா நிதமானுரு 41* (34)
மொயீன் அலி 3/42 (8.2 நிறைவுகள்)
இங்கிலாந்து 160 ஓட்டங்களால் வெற்றி
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே
நடுவர்கள்: அசான் ராசா (பாக்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: பென் ஸ்டோக்ஸ் (இங்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இந்த ஆட்டத்தின் முடிவையடுத்து நெதர்லாந்து அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.[64]

9 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
171 (46.4 நிறைவுகள்)
 நியூசிலாந்து
172/5 (23.2 நிறைவுகள்)
நியூசிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: டிரென்ட் போல்ட் (நியூசி)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • டிரென்ட் போல்ட் (நியூ) அனைத்து பன்னாட்டுத் துடுப்பான்ன வடிவங்களிலும் நியூசிலாந்துக்காக 600 இலக்குகளை வீழ்த்திய 3-ஆவது பந்துவீச்சாளராகவும், உலகக்கிண்ணத்தில் நியூசிலாந்துக்காக 50 இலக்குகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளராகவும் ஆனார்.[65]
 • மிட்செல் சான்ட்னர் (நியூ) ஒரு உலகக்கிண்ணப் பதிப்பில் நியூசிலாந்து வீரரால் அதிக இலக்குகளை வீழ்த்திய டேனியல் வெட்டோரியின் சாதனையை சமன் செய்தார்.[66]

10 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆப்கானித்தான் 
244 (50 நிறைவுகள்)
 தென்னாப்பிரிக்கா
247/5 (47.3 நிறைவுகள்)
தென்னாபிரிக்கா 5 இலக்குகளால் வெற்றி
நரேந்திர மோடி விளையாட்டரங்கம், அகமதாபாது
நடுவர்கள்: கிறிசு பிரவுண் (நியூ), நிதின் மேனன் (இந்)
ஆட்ட நாயகன்: ராசி வான் டெர் டசென் (தெஆ)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஏய்ன்றிச் கிளாசென், காகிசோ ரபாடா (தெஆ) இருவரும் தமது 50-ஆவது, 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.[67]
 • இப்போட்டியின் முடிவை அடுத்து ஆப்கானித்தான் அரையிறுதியில் விளையாடும் தகுதியை இழந்தது.[68]

11 நவம்பர் 2023
10:30
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
306/8 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
307/2 (44.4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), அசான் ராசா (பாக்)
ஆட்ட நாயகன்: மிட்செல் மார்ஷ் (ஆசி)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • உலகக்கிண்ணத்தில் ஆத்திரேலியா 300 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாகத் துரத்தியது இதுவே முதல் முறை.[69]

11 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இங்கிலாந்து 
337/9 (50 நிறைவுகள்)
 பாக்கித்தான்
244 (43.3 நிறைவுகள்)
இங்கிலாந்து 93 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: டேவிட் வில்லி (இங்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • டேவிட் வில்லி (இங்) தனது 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[70]
 • இவ்வாட்ட முடிவை அடுத்து நியூசிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றது, பாக்கித்தான் வெளியேற்றப்பட்டது.[71]

12 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
410/4 (50 நிறைவுகள்)
 நெதர்லாந்து
250 (47.5 நிறைவுகள்)
சிரேயாஸ் ஐயர் 128* (94)
பாஸ் டி லீட் 2/82 (10 நிறைவுகள்)
இந்தியா 160 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), மைக்கல் கோ (இங்)
ஆட்ட நாயகன்: சிரேயாஸ் ஐயர் (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

வெளியேற்ற நிலைப் போட்டிகள்

தகுதி

புரவலர், இந்தியா, புரவலன், இந்தியா, இலங்கைக்கு எதிராக 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் அணியாகும், இது உலகக் கோப்பையில் ஏழாவது தொடர் வெற்றியாகும்.[72] நவம்பர் 5 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் அரங்கில் தென்னாப்பிரிக்காவை 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டியாளர்களில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது, 8 போட்டிகளில் 16 புள்ளிகளைக் குவித்தது.[73]

நவம்பர் 4 அன்று பாக்கித்தான் அணி நியூசிலாந்தைத் தோற்கடித்த பிறகு, தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இரண்டாவது அணி ஆனது; இருப்பினும், அந்த வெற்றியின் மூலம், பாக்கித்தான் அரையிறுதி நிலையை அடையும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தது.[74]

நவம்பர் 7 அன்று ஆப்கானித்தானைத் தோற்கடித்து, தென்னாப்பிரிக்காவுடன் சமமான புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டு அரையிறுதிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது அணியாக ஆத்திரேலியா ஆனது, மேலும் அவர்கள் அரையிறுதியில் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவார்கள்.[75]

நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து இந்தியாவை எதிர்கொண்டது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாக்கித்தான் தோல்வியடைந்த பிறகு அவர்களது இடம் உறுதி செய்யப்பட்டது.[76]

  அரையிறுதிகள் இறுதி
                 
1   இந்தியா 397/4 (50 நிறைவுகள்)  
4   நியூசிலாந்து 327 (48.5 நிறைவுகள்)  
    SFW1   இந்தியா 240 (50 நிறைவுகள்)
  SFW2   ஆத்திரேலியா 241/4 (43 நிறைவுகள்)
2   தென்னாப்பிரிக்கா 212 (49.4 நிறைவுகள்)
3   ஆத்திரேலியா 215/7 (47.2 நிறைவுகள்)  

அரையிறுதி

15 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
397/4 (50 நிறைவுகள்)
 நியூசிலாந்து
327 (48.5 நிறைவுகள்)
விராட் கோலி 117 (113)
டிம் சௌத்தி 3/100 (10 நிறைவுகள்)
தரில் மிட்செல் 134 (119)
முகம்மது சமி 7/57 (9.5 நிறைவுகள்)
இந்தியா 70 ஓட்டங்களால் வெற்றி
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: முகம்மது சமி (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • முகம்மது சமி, குல்தீப் யாதவ் (இந்) இருவரும் தமது 100-ஆவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.[77]
 • விராட் கோலி (இந்) தனது 50-ஆவது பன்னாட்டு ஒருநாள் சதத்தைப் பெற்று, தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.[78]
 • விராட் கோலி (இந்) 2003 உலகக்கிண்ணப் போட்டிகளில் அமைக்கப்பட்ட ஒரே உலகக்கிண்ணப் பதிப்பில் அதிக ஓட்டங்கள் எடுத்த தெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்தார்.
 • முகம்மது சமி 7 இலக்குகளை வீழ்த்தி, பன்னாட்டு ஒருநாள் போட்டி ஒன்றில் 7 இலக்குகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் ஆனார், மேலும் உலகக்கிண்ண வரலாற்றில் 17 போட்டிகளில் 50 இலக்குகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்று, 19 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடித்தார்.[79]
 • இவ்வாட்ட முடிவை அடுத்து, இந்தியா 1983, 2003, 2011 இற்குப் பிறகு நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

16 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
தென்னாப்பிரிக்கா 
212 (49.4 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
215/7 (47.2 நிறைவுகள்)
ஆத்திரேலியா 3 இலக்குகளால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்), நிதின் மேனன் (இந்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • இவ்வாட்ட முடிவை அடுத்து, ஆத்திரேலியா 1987, 1996, 1999, 2003, 2007, 2015 இற்கு அடுத்ததாக ஏழாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
 • குவின்டன் டி கொக் (தெஆ) தனது கடைசிப் பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[80]

இறுதி

19 நவம்பர் 2023
14:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா 
240 (50 நிறைவுகள்)
 ஆத்திரேலியா
241/4 (43 நிறைவுகள்)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஆத்திரேலியா ஆறாவது தடவையாக உலகக்கிண்ணத்தை வென்றது.[81]

நிறைவு விழா

நிறைவு விழாவையொட்டி, பிரமாண்டமான வாணவேடிக்கைகளுடன் ஆளில்லா வானூர்தி நிகழ்ச்சியும் இடம்பெற்றது. பின்னர், ஆத்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லசு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் செயலர் ஜெய் ஷா ஆகியோர் உலகக்கிண்ணத்தை ஆத்திரேலிய அணியின் தலைவர் பாட் கம்மின்சிடம் வழங்கினர்.[82][83]

ஒளிபரப்பு உரிமம்

இசுடார் இசுபோர்ட்சு ஒளிபரப்பு உரிமங்களைப் பெற்றது, டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் உள்ளூரில் போட்டிகளை ஆங்கிலம் மற்றும் எட்டுப் பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பியது.[84] செல்லிட சாதனங்களில் சந்தாத் தேவையில்லாமல் அனைத்துப் போட்டிகளும் உள்நாட்டில் ஒளிபரப்புச் செய்யப்பட்டன.[85][86][85][87] ஏனைய நாடுகளும் பிராந்தியங்களும் போட்டிக்கான அதிகாரப்பூர்வ உள்ளூர் ஒளிபரப்பாளர்களைக் கொண்டிருந்தன.[88]

பரிசுப் பணம்

2019 மற்றும் 2015 போட்டிகளைப் போலவே செலுத்தும் தொகையுடன், ஐசிசி இந்த போட்டிக்காக $10 மில்லியன் பரிசுத் தொகையை ஒதுக்கியது. வெற்றிபெற்ற அணிக்கு $4,000,000, இரண்டாம் அணிக்கு $2,000,000, தோல்வியடைந்த அரையிறுதிக்கு $1,600,000. முதனிலைக் கட்டத்தைக் கடக்காத அணிகள் $100,000, ஒவ்வொரு முதனிலைக் கட்டப் போட்டியின் வெற்றியாளரும் $40,000 பெற்றார்கள்.[89][90]

புள்ளிவிவர சிறப்புக் கூறுகள்

அதிக ஓட்டங்கள்

ஓட்டங்கள் ஆட்டவீரர் இன். கூ.ஓ சரா ஓ.வி 100 50 4கள் 6கள்
765 விராட் கோலி 11 117 95.62 90.31 3 6 68 9
597 ரோகித் சர்மா 11 131 54.27 125.94 1 3 66 31
594 குவின்டன் டி கொக் 10 174 59.40 107.02 4 0 57 21
578 இரச்சின் இரவீந்திரா 10 123* 64.22 106.44 3 2 55 17
552 தரில் மிட்செல் 10 134 69.00 111.06 2 2 48 22
 • மூலம்: கிரிக்கின்ஃபோ[91]

அதிக இலக்குகள்

இலக்குகள் ஆட்டவீரர் இன். சரா. சிக். சி.ஆ.ப அ.வி 5 இ
24 முகம்மது சமி 7 10.70 5.26 7/57 12.20 3
23 ஆடம் சம்பா 11 22.39 5.36 4/8 25.04 0
21 தில்சான் மதுசங்க 9 25.00 6.70 5/80 22.38 1
20 ஜஸ்பிரித் பும்ரா 11 18.65 4.06 4/39 27.55 0
செரால்டு கோட்சீ 8 19.80 6.23 4/44 19.05 0
 • மூலம்: கிரிக்கின்ஃபோ[92]

மேற்கோள்கள்

 1. "Awesome Australia beat India to win the ICC Men's Cricket World Cup". Cricket World Cup. பார்க்கப்பட்ட நாள் 19 November 2023.
 2. 2.0 2.1 "Match schedule announced for the ICC Men's Cricket World Cup 2023". www.icc-cricket.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
 3. "Narendra Modi Stadium | India | Cricket Grounds | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
 4. "M. Chinnaswamy Stadium | India | Cricket Grounds | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
 5. "M. A. Chidambaram Stadium | India | Cricket Grounds | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
 6. "Arun Jaitley Stadium | Cricket Grounds | BCCI". www.bcci.tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-28.
 7. "Himachal Pradesh Cricket Association Stadium | India | Cricket Grounds | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
 8. "Rajiv Gandhi International Cricket Stadium | Cricket Grounds | BCCI". www.bcci.tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-28.
 9. "Eden Gardens | India | Cricket Grounds | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
 10. "Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium | India | Cricket Grounds | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
 11. "Wankhede Stadium | India | Cricket Grounds | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.
 12. "Match officials for the ICC Men's Cricket World Cup 2023 named". International Cricket Council. 8 September 2023. பார்க்கப்பட்ட நாள் 8 September 2023.
 13. "Dharmasena and Menon to take charge of ICC Men's Cricket World Cup 2023 opener" (in en). www.icc-cricket.com. https://www.icc-cricket.com/media-releases/3697650. 
 14. "England set unique ODI batting record in World Cup 2023 opener". geo.tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 October 2023.
 15. "ENG v NZ: 23-year-old Rachin Ravindra hits hundred in spectacular World Cup debut". India Today. பார்க்கப்பட்ட நாள் 5 October 2023.
 16. "ENG vs NZ: Conway-Ravindra record fourth-highest World Cup partnership with 273-run stand". Spotstar. பார்க்கப்பட்ட நாள் 5 October 2023.
 17. "Mehidy, with a little help from Shakib and Shanto, takes Bangladesh past Afghanistan" (in en). ESPNcricinfo. 7 October 2023. https://www.espncricinfo.com/series/icc-cricket-world-cup-2023-24-1367856/afghanistan-vs-bangladesh-3rd-match-1384394/match-report. 
 18. https://sportstar.thehindu.com/cricket/icc-cricket-world-cup/highest-team-totals-scores-australia-south-africa-india-icc-odi-world-cup-batting-records/article67392625.ece/amp/
 19. "Fastest ODI World Cup hundreds: Markram breaks record with 49-ball century in SA vs SL WC 2023 match". SportStar. பார்க்கப்பட்ட நாள் 7 October 2023.
 20. "SA vs SL: South Africa-Sri Lanka records highest aggregate in a World Cup match with 754 runs in Delhi". SportStar. பார்க்கப்பட்ட நாள் 7 October 2023.
 21. "Bairstow, England cricket's 'great servant' who always comes back very strong". ESPNcricinfo (in ஆங்கிலம்). 9 October 2023. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
 22. "ENG vs BAN: Joe Root becomes England's highest run-scorer in ODI World Cup, surpasses Graham Gooch". Sportstar (in ஆங்கிலம்). 10 October 2023. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
 23. "SL vs PAK: Sadeera Samarawickrama hits his maiden World Cup hundred to deflate Pakistan". India Today. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
 24. "PAK vs SL, ODI World Cup: Imam-ul-Haq surpasses Babar Azam's record to reach 3000 runs". Spotstar. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
 25. "SL vs PAK: Abdullah Shafique shines on World Cup debut, hits maiden ODI hundred in high pressure chase". India Today. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
 26. "ODI World Cup 2023: Pakistan completes highest run chase in WC history". SportStar. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
 27. "Most hundreds in an innings". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
 28. "Rohit Sharma breaks Chris Gayle's record for most sixes in international cricket with 554th maximum". Spotstar. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
 29. "Rohit Sharma breaks Sachin's record for most centuries in World Cup history". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 11 October 2023.
 30. "World Cup 2023: Trent Boult becomes the 3rd fastest bowler to complete 200 ODI wickets". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 October 2023.
 31. "ODI World Cup 2023, Match 13, ENG vs AFG Stats Review: Gurbaz's power-hitting, Rashid's brilliance and other stats". Crictracker. பார்க்கப்பட்ட நாள் 15 October 2023.
 32. "ENG vs AFG: Aghanistan produce biggest upset of World Cup 2023 with 69-run win over defending champions England". India Today. பார்க்கப்பட்ட நாள் 15 October 2023.
 33. "New Zealand vs Afghanistan highlights, World Cup 2023: Santner and Phillips guide NZ to massive 149-run win over AFGs". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 19 October 2023.
 34. "Stoinis, Zampa come up clutch to down Pakistan". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 21 October 2023.
 35. "World Cup 2023: Shubman Gill becomes fastest batter to 2000 ODI runs, breaks Hashim Amla's 12-year-old record". India Today. பார்க்கப்பட்ட நாள் 22 October 2023.
 36. "PAK vs AFG, World Cup 2023: Afghanistan chase down 283 to register first-ever ODI win over Pakistan". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 October 2023.
 37. "AUS vs NED: Glenn Maxwell breaks Aiden Markram's record for fastest ODI World Cup hundred". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
 38. "Bas de Leede sets record for most runs conceded in ODI innings during World Cup 2023 match vs Australia". Sportstar (in ஆங்கிலம்). 25 October 2023. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
 39. "AUS vs NED: Australia registers biggest victory in ODI World Cup history, beats Netherlands by 309 runs". SportStar. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
 40. "Pakistan bring in Usama Mir named as concussion sub for Shadab Khan". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.
 41. "AUS vs NZ: Australia vs New Zealand records highest aggregate in World Cup match with 771 runs in Dharamsala". SportStar. பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
 42. "AFG vs SL, World Cup 2023: Rashid Khan relishes 'great achievement' of completing 100-ODI landmark". India Today. பார்க்கப்பட்ட நாள் 30 October 2023.
 43. "PAK vs BAN: Shaheen Afridi becomes fastest Pakistan bowler to 100 ODI wickets". Spotstar. பார்க்கப்பட்ட நாள் 31 October 2023.
 44. "Semifinal hopes finally over for Tigers with Pakistan loss". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 31 October 2023.
 45. "India vs Sri Lanka: Dilshan Madushanka becomes 4th Sri Lanka bowler to pick a 5-wicket haul in ODI World Cups". India Today. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
 46. "Mohammed Shami becomes India’s leading wicket taker in World Cup history with fifer vs Sri Lanka" (in en). The Indian Express. 2 November 2023. https://indianexpress.com/article/sports/cricket-world-cup/mohammed-shami-becomes-indias-leading-wicket-taker-in-world-cup-with-fifer-vs-sri-lanka-9010973/#:~:text=Mohammed%20Shami%20became%20the%20leading,at%20the%20Wankhede%20on%20Thursday.. 
 47. "Kohli, Siraj shine as India break record for largest win margin by runs, beat Sri Lanka by 317 in 3rd ODI". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
 48. "Stats from India's record win: Shami makes history as Kohli climbs all-time list". ICC. பார்க்கப்பட்ட நாள் 3 November 2023.
 49. "Records for ODI Matches". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 November 2023.
 50. "India become first team to qualify for 2023 World Cup semi-finals with unbeaten 7/7 record". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2 November 2023. https://www.hindustantimes.com/cricket/india-become-first-team-to-qualify-for-2023-world-cup-semi-finals-with-unbeaten-7-7-record-101698934227925.html. 
 51. "Mujeeb gets to 100 | CWC23". ICC Cricket World Cup. பார்க்கப்பட்ட நாள் 3 November 2023.
 52. Thiraviam, Buvanesh. "The Highest Ten ODI Totals in Losing Cause". CricIndeed. பார்க்கப்பட்ட நாள் 4 November 2023.
 53. "World Cup 2023: South Africa join India as 2nd team to qualify for semi-finals as Pakistan beat New Zealand". Today India. பார்க்கப்பட்ட நாள் 4 November 2023.
 54. "Cricket World Cup 2023: England's defence ended by Australia defeat". BBC Sport. 4 November 2023. பார்க்கப்பட்ட நாள் 4 November 2023.
 55. "Kohli on equalling Tendulkar's record of 49 ODI hundreds: "It's stuff of dreams"". ESPN Cricinfo. 5 November 2023. பார்க்கப்பட்ட நாள் 5 November 2023.
 56. "Virat Kohli's zenith, South Africa's nadir". Cricbuzz (in ஆங்கிலம்). 5 November 2023. பார்க்கப்பட்ட நாள் 6 November 2023.
 57. "Kohli equals Tendulkar milestone with World Cup ton, India crush South Africa". SuperSport (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 November 2023.
 58. "Angelo Mathews Becomes First To Be 'Timed Out' In International Cricket". The Times of India. 6 November 2023. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
 59. "Bangladesh vs Sri Lanka, World Cup Highlights: BAN pull off dramatic win, SL knocked out". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 6 November 2023.
 60. "AUS vs AFG: Ibrahim Zadran becomes first Afghanistan batter to hit World Cup hundred" (in en). India Today. https://www.indiatoday.in/sports/cricket/story/ibrahim-zadran-becomes-first-afghanistan-batter-to-hit-hundred-in-world-cup-2459342-2023-11-07. 
 61. "Glenn Maxwell hits iconic double century, pulls off a Kapil Dev to deny Afghanistan the greatest World Cup upset ever". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 7 November 2023.
 62. "Maxwell records highest individual score in a run chase, slams double century during AUS vs AFG, World Cup 2023 match". SportStar. பார்க்கப்பட்ட நாள் 7 November 2023.
 63. "Australia vs Afghanistan: Glenn Maxwell's 'Superhuman' innings helps Australia beat Afghanistan by three wickets". Mint. பார்க்கப்பட்ட நாள் 7 November 2023.
 64. "England vs Netherlands Live Score Updates: ENG vs NED, England defeat Netherlands by 160 runs". Mint. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.
 65. "Trent Boult becomes New Zealand's first bowler to claim 50 wickets in ODI World Cup". The Hindu. 9 November 2023. பார்க்கப்பட்ட நாள் 11 November 2023.
 66. "NZ vs SL: Boult enters 600 wickets club, Santner equals Daniel Vettori's major World Cup record". India TV. 9 November 2023. பார்க்கப்பட்ட நாள் 11 November 2023.
 67. "World Cup: Afghanistan Opt To Bat Against South Africa". The Times of India. 10 November 2023. பார்க்கப்பட்ட நாள் 10 November 2023.
 68. "Afghanistan crashes out of ICC ODI World Cup 2023". SportStar. பார்க்கப்பட்ட நாள் 10 November 2023.
 69. "Mitchell Marsh 177* powers Australia to seventh straight win" (in en). ESPNcricinfo. 11 November 2023. https://www.espncricinfo.com/series/icc-cricket-world-cup-2023-24-1367856/australia-vs-bangladesh-43rd-match-1384434/match-report. 
 70. "England's David Willey retires from international cricket after bowling heroics vs Pakistan: A nice way to finish". India Today. பார்க்கப்பட்ட நாள் 11 November 2023.
 71. "Semi-finalists confirmed for knockout stage of Cricket World Cup". ICC. 11 November 2023. பார்க்கப்பட்ட நாள் 11 November 2023.
 72. "Who are best-placed to join India in the semi-finals?" (in en). ESPNcricinfo. https://www.espncricinfo.com/story/icc-cricket-world-cup-2023-india-in-semi-finals-what-are-australia-pakistan-new-zealand-sri-lankas-chances-1406810. 
 73. "Jadeja razes South Africa for 83 after Kohli scores 49th ODI ton" (in en). ESPNcricinfo. 5 November 2023. https://www.espncricinfo.com/series/icc-cricket-world-cup-2023-24-1367856/india-vs-south-africa-37th-match-1384428/match-report. 
 74. "Fabulous Fakhar pulls off stunning chase to keep Pakistan alive" (in en). ESPNcricinfo. https://www.espncricinfo.com/series/icc-cricket-world-cup-2023-24-1367856/new-zealand-vs-pakistan-35th-match-1384426/match-report. 
 75. Sportstar, Team (7 November 2023). "World Cup 2023: Australia qualifies for semifinals after stunning win over Afghanistan" (in en). Sportstar. https://sportstar.thehindu.com/cricket/icc-cricket-world-cup/news/australia-qualifies-semifinals-icc-world-cup-2023-aus-vs-afg-points-maxwell-200-record-run-chase-mumbai/article67510115.ece. 
 76. "It's official! India set up 2023 World Cup semi-final against New Zealand in 2019 rematch; Pakistan knocked out" (in en). Hindustan Times. 11 November 2023. https://www.hindustantimes.com/cricket/its-official-india-set-up-2023-world-cup-semi-final-against-new-zealand-in-2019-rematch-pakistan-knocked-out-101699709522254.html. 
 77. "World Cup 2023: Mohammed Shami plays 100th ODI in high-voltage semi-final against New Zealand". India Today. 15 November 2023. பார்க்கப்பட்ட நாள் 15 November 2023.
 78. "Sensational Virat Kohli Surpasses Sachin Tendulkar With Record-Breaking 50th ODI Ton". The Times of India. 15 November 2023. பார்க்கப்பட்ட நாள் 15 November 2023.
 79. "Mohammed Shami becomes fastest to 50 wickets in ODI World Cup history". Times of India. 15 November 2023. பார்க்கப்பட்ட நாள் 15 November 2023.
 80. "De Kock to retire from ODIs after World Cup in India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 September 2023.
 81. "Awesome Australia beat India to win the ICC Men's Cricket World Cup". Cricket World Cup. பார்க்கப்பட்ட நாள் 19 November 2023.
 82. I, Ani (17 November 2023). "PM Modi, Australia's Deputy Prime Minister Richard Marles to attend India-Australia World Cup final". ஹிந்துஸ்தான் டைம்ஸ். Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 19 November 2023.
 83. Malhotra, Sahil (18 November 2023). "Salute from the Skies, Parade of Champions, Drone Show and More… : World Cup Final Set to be a Grand Spectacle". News18. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 18 November 2023.
 84. Banerjee, Krishnendu (4 October 2023). "World Cup LIVE Streaming in 9 languages with 120 commentators on Disney+ Hotstar". Inside Sport. பார்க்கப்பட்ட நாள் 4 October 2023.
 85. 85.0 85.1 Strauss, Will (2023-09-26). "Cricket World Cup 2023: ICC TV to produce vertical feed of all matches in India". SVG Europe (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-06.
 86. Livemint (2023-06-09). "Disney+ Hotstar allows free streaming of ICC World Cup 2023, Asia Cup". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-13.
 87. "Disney+ Hotstar introduces 'MaxView' vertical video streaming for men's cricket world cup 2023". Indian Express. October 4, 2023. பார்க்கப்பட்ட நாள் October 4, 2023.
 88. "Official Broadcasters". www.cricketworldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
 89. Rajput, Tanisha (6 September 2023). "World Cup 2023 Full Squads: Check date, time, teams, venue, schedule and all you need to know". Wi. பார்க்கப்பட்ட நாள் 6 September 2023.
 90. Dutta, Rishab (3 September 2023). "ICC World Cup 2023 Schedule, Teams, Venues, Prize Money, And Broadcast Channel". Sportsganga. பார்க்கப்பட்ட நாள் 6 September 2023.
 91. "2023 World Cup Cricket Batting Records & Stats runs". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 October 2023.
 92. "2023 World Cup Cricket bowling Records & Stats wickets". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.