உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தும் நிசங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தும் நிசங்க
Pathum Nissanka
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பத்தும் நிசங்க சில்வா
பிறப்பு18 மே 1998 (1998-05-18) (அகவை 26)
காலி, இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பங்குதுடுப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 155)21 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 194)10 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப14 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள்
இ20ப அறிமுகம் (தொப்பி 86)3 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி இ20ப7 மார்ச் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2017–2018பதுரெலியா
2019–இன்றுநொண்டசுகிரிப்ட்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப ப20இ மு.த
ஆட்டங்கள் 1 3 3 33
ஓட்டங்கள் 112 42 81 3,445
மட்டையாட்ட சராசரி 112 14.00 27.00 67.54
100கள்/50கள் 1/0 0/0 0/0 13/13
அதியுயர் ஓட்டம் 103 24 39 217
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 0/0 1/– 18/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 24 மார்ச் 2021

பத்தும் நிசங்க (Pathum Nissanka, சிங்களம்: පැතුම් නිස්සංක , பிறப்பு: 18 மே 1998) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் 2021 மார்ச் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார்.[1]

உள்நாட்டுப் போட்டிகள்[தொகு]

பத்தும் தனது முதலாவது பட்டியல் அ போட்டியில் அம்பாந்தோட்டை மாவட்ட அணியில் 2017 மார்ச் 17 இல் விளையாடினார்.[2] முதலாவது இருபது20 போட்டியை பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்காக 2018 இல் விளையாடினார்.[3]

2018 இல், இவர் 2017-18 சூப்பர் 4 மாகாணச் சுற்றிலும்,[4][5] 2018 மாகாண ஒருநாள் தொடரிலும் கண்டி அணியில் விளையாடினார்.[6] தொடர்ந்து, 2019 மாகாண ஒரு-நாள் சுற்றிலும் கண்டி அணிக்காக விளையாடினார்.[7]

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

2019 சனவரியில், பத்தும் இலங்கை-ஏ அணியில் முதல்-தரப் போட்டிகளில் அயர்லாந்து-ஏ அணியுடன் விளையாட சேர்க்கப்பட்டார். இரண்டு ஆட்டங்களில் இவர் 258 ஓட்டங்களை இலங்கை அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார்.[8] 2019 பெப்ரவரியில் இவர் தனது 1,000-வது ம்,உதல்-தர ஓட்டங்களைப் பெற்றார்.[9][10] 2019 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2019 நவம்பரில் விளையாடினார்.[11][12]

2021 பெப்ரவரியில், இலங்கையின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வரையிட்ட நிறைவுகள் அணியில் சேர்க்கப்பட்டார்.[13] தனது முதலாவது பன்னாட்டு இருபது20 (ப20இ) போட்டியில் 2021 மார்ச் 3 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.[14] பின்னர், இலங்கையின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார்.[15] தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை 2021 மார்ச் 10 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார்.[16] தனது முதலாவது தேர்வுப் போட்டியை 2021 மார்ச் 21 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி,[17] ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் 103 ஓட்டங்களை எடுத்து, முதலாவது தேர்வுப் போட்டியில் சதம் எடுத்த நான்காவது இலங்கை வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[18]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Pathum Nissanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 April 2017.
 2. "Districts One Day Tournament, Southern Group: Matara District v Hambantota District at Colombo (Bloomfield), Mar 17, 2017". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 7 April 2017.
 3. "Group D, SLC Twenty-20 Tournament at Katunayake, Feb 24 2018". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1137445.html. 
 4. "Cricket: Mixed opinions on Provincial tournament". Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament. 
 5. "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. 
 6. "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". The Papare. http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/. 
 7. "Squads, Fixtures announced for SLC Provincial 50 Overs Tournament". The Papare. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
 8. "Ireland A tour of Sri Lanka : Most runs in first-class matches". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
 9. "Pathum Nissanka reaches magical 1000 run mark". The Papare. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
 10. "Premier League Tournament Tier A, 2018/19 - Nondescripts Cricket Club: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 February 2019.
 11. "SLC Men's and Women's squads for SAG 2019 announced". The Papare. பார்க்கப்பட்ட நாள் 30 November 2019.
 12. "South Asian Games: Bangladesh secure gold in men's cricket". BD News24. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
 13. "Shanaka named as Sri Lankan T20I captain for West Indies tour". BD Crictime. பார்க்கப்பட்ட நாள் 21 February 2021.
 14. "1st T20I (N), Coolidge, Mar 3 2021, Sri Lanka tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.
 15. "Nissanka earns maiden Test call-up, fit Karunaratne back to lead Sri Lanka for West Indies Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.
 16. "1st ODI, North Sound, Mar 10 2021, Sri Lanka tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
 17. "1st Test, North Sound, Mar 21 - 25 2021, Sri Lanka tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 March 2021.
 18. "Pathum Nissanka slams a Test Century on Debut". Knews. Archived from the original on 21 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 24 March 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தும்_நிசங்க&oldid=3561757" இலிருந்து மீள்விக்கப்பட்டது