லியம் லிவிங்சுடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியம் லிவிங்ஸ்டன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லியம் இசுட்டீவன் லிவிங்ஸ்டன்
பிறப்பு4 ஆகத்து 1993 (1993-08-04) (அகவை 30)
பரோ-இன்-பேர்னசு, கம்பிரீயா, இங்கிலாந்து
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடை
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 709)1 திசம்பர் 2022 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 258)26 மார்ச் 2021 எ. இந்தியா
கடைசி ஒநாப24 சூலை 2022 எ. தென்னாபிரிக்கா
இ20ப அறிமுகம் (தொப்பி 80)23 சூன் 2017 எ. தென்னாபிரிக்கா
கடைசி இ20ப13 நவம்பர் 2022 எ. பாகிஸ்தான்
இ20ப சட்டை எண்23
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–தற்போதுலங்காசயர்
2019கராச்சி கிங்சு
2019–2021ராஜஸ்தான் ராயல்ஸ்
2019கேப் டவுன் பிளிட்சு
2019/20–2020/21பேர்த் ஸ்கோர்ச்சேர்சு
2020, 2022பெசாவர் சால்மி
2021–தற்போதுபர்மிங்காம் பீனிக்சு
2022-தற்போதுபஞ்சாப் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.ப.து முதல் ப.அ
ஆட்டங்கள் 1 12 63 67
ஓட்டங்கள் 16 250 3,085 1,802
மட்டையாட்ட சராசரி 16.00 31.25 38.08 35.33
100கள்/50கள் 0/0 0/1 7/15 1/11
அதியுயர் ஓட்டம் 9 66* 224 129
வீசிய பந்துகள் 150 3,375 1,455
வீழ்த்தல்கள் 6 43 29
பந்துவீச்சு சராசரி 24.16 36.13 44.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/30 6/52 3/51
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 6/– 74/– 31/–
மூலம்: ஈஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ, 5 டிசம்பர் 2022

லியம் இசுட்டீவன் லிவிங்சுடன் (Liam Stephen Livingstone, பிறப்பு: 4 ஆகத்து 1993) ஒரு இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர். லிவிங்ஸ்டன் ஒரு வலது கை மட்டையாளரும் சுழற்பந்து வீச்சாளரும் ஆவார். வலது கை எதிர்ச்சுழல் மற்றும் நேர்ச்சுழல் ஆகிய இரண்டு வகையிலும் பந்து வீசும் திறன் கொண்டவர்.[1] மே 2015 இல் லெய்செஸ்டர்ஷைருக்கு எதிராக லங்காசயர் அணிக்காக தனது இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[2] இன்கிலாந்து துடுப்பாட்டச் சபையின் அறிமுகமான நூறு துடுப்பாட்டப் போட்டியில் அவருக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது வழங்கப்பட்டது.[3] 2022 இருபது20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் விளையாடி இருந்தார்.

தொழில்[தொகு]

19 ஏப்ரல் 2015 அன்று, லிவிங்ஸ்டன் தனது கழக அணியான நான்ட்விச்சிற்காக 138 பந்துகளில் 350 ரன்களை எடுத்தது ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிகளின் வரலாற்றில் அதிக தனிநபர் ஓட்டங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அடுத்து ஊடகங்களின் பார்வையைப் பெற்றார்.[4][5]

லிவிங்ஸ்டன் 2016 பருவகால முதல் ஆட்டத்தில் லங்காஷயர் அணிக்காக முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். 24 ஏப்ரல் 2017 அன்று, 2017 பருவகாலத்தின் முதல் வெற்றிக்கு லங்காஷயரை பதில் தலைவராக இருந்து வழிநடத்திய பிறகு, அவருக்கு கவுண்டி தொப்பி வழங்கப்பட்டது.[6] 30 நவம்பர் 2017 அன்று, ஸ்டீவன் குராஃப்ட்டுக்குப் பதிலாக 2018 பருவகாலத்துக்கான கழக அணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[7]

ஜூன் 2017 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்தின் பன்னாட்டு இருபது20 அணியில் லிவிங்ஸ்டன் இடம்பிடித்தார்.[8] அவர் 23 ஜூன் 2017 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இங்கிலாந்துக்காக பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அறிமுகமானார்.[9] 10 ஜனவரி 2018 அன்று, 2017/18 ஆஷஸ் குளிர்காலத்தின் போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இங்கிலாந்து தேர்வுத் துடுப்பாட்ட அணிக்கு லிவிங்ஸ்டன் தனது முதல் அழைப்பைப் பெற்றார்.

டிசம்பர் 2001 இல், லிவிங்ஸ்டன் 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸால் வாங்கப்பட்டது.[10] [11] செப்டம்பர் 2019 இல், 2019 இம்சான்சி சூப்பர் லீக் போட்டிக்கான கேப் டவுன் பிளிட்ஸ் அணியில் அவர் பெயரிடப்பட்டார். [12]

நவம்பர் 2019 இல், அவர் 2019-20 பிக் பாஷ் லீக் போட்டிக்காக பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் உடன் ஒப்பந்தம் செய்தார்.[13] 2020 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அவர் ராஜஸ்தான் ராயல்ஸால் விடுவிக்கப்பட்டார். [14]

பிப்ரவரி 2021 இல், லிவிங்ஸ்டனை 2021 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு முன்னதாக ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. [15] அடுத்த மாதம், லிவிங்ஸ்டன் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்தின் ஒருநாள் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார். [16] லிவிங்ஸ்டன் 26 மார்ச் 2021 அன்று இங்கிலாந்துக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். இந்தியாவுக்கு எதிரான, [17] இந்தத் தொடரில் 63 சராசரியில் ஓட்டங்களைப் பெற்றார்.

ஜூலை 2021 இல், பாகிஸ்தானுக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரின் தொடக்க ஆட்டத்தில், லிவிங்ஸ்டன் 103 ஓட்டங்களைப் பெற்றுத் தனது முதல் சதத்தை அடித்தார். இதன்மூலம் இங்கிலாந்துக்காக பன்னாட்டு இருபது20 போட்டிகளில் சதம் அடித்த மூன்றாவது நபர் ஆனார். [18] டி20 போட்டிகளில் இங்கிலாந்து மட்டையாளரின் அதிவேக அரைசதம் மற்றும் அதிவேக சதம் முறையே 17 பந்துகள் மற்றும் 42 பந்துகளில் அடித்தார். [19] பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 122 மீட்டர் சிக்சரையும் அடித்தார். [20] செப்டம்பர் 2021 இல், 2021 ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் லிவிங்ஸ்டன் பெயரிடப்பட்டார். [21]

டிசம்பர் 2021 இல், லிவிங்ஸ்டன் தனது லங்காஷயர் உடனான ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்து கையெழுத்திட்டார், அதன் மூலம் அவர் குறைந்தபட்சம் 2024 வரை அந்தக் கழகத்தில் இருப்பார் [22] பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அவர் பஞ்சாப் கிங்ஸால் வாங்கப்பட்டார். [23] அவர் போட்டியின் மிக நீண்ட சிக்ஸரை (117 மீ) அடித்தார். [24]

ஏப்ரல் 2022 இல், அவர் பர்மிங்காம் பீனிக்ஸ் நிறுவனத்தால் 2022 பருவகால நூறு துடுப்பாட்டம் போட்டிக்காக வாங்கப்பட்டார். [25]

ஜூன் 2022 இல், நெதர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒரு நாள் துடுப்பாட்டத்தில் இரண்டாவது அதிவேகமாக அரைச்சதத்தைச் சமன் செய்தார். ஒரு அணியாக, இங்கிலாந்து 498/4 ரன்களை எடுத்தது, இது துடுப்பாட்ட வரலாற்றில் ஒருநாள் பன்னாட்டுப் போட்டியொன்றில் பெறப்பட்ட அதிக ஓட்டங்கள் ஆகும். [26]

செப்டம்பர் 2022 இல், 2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் லிவிங்ஸ்டன் பெயரிடப்பட்டார். இங்கிலாந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற இந்தத் தொடரில் அவர் மொத்தம் 55 ஓட்டங்களை எடுத்ததுடன் 6 போட்டிகளில் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

12 அக்டோபர் 2022 அன்று, லிவிங்ஸ்டோன் 2022-23 இல் பாகிஸ்தானுக்கான இங்கிலாந்தின் சுற்றுப்பயணத்திற்கான தொடரிற்காகத் தனது முதல் தேர்வுப் போட்டி அழைப்பைப் பெற்றார். [27] அதே சுற்றுப்பயணத்தின் முதல் தேர்வுப் போட்டியில், 1 டிசம்பர் 2022 அன்று, லிவிங்ஸ்டன் இங்கிலாந்துக்காக தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார். [28]

மேற்கோள்கள்[தொகு]

  1. Macpherson, Will (2017-03-30). "Liam Livingstone: 'I have always had that confidence that I could make it'". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-30.
  2. "NatWest t20 Blast, North Group: Lancashire v Leicestershire at Manchester, 15 May 2015". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 May 2015.
  3. "Liam Livingstone named the Hundred MVP after stunning exploits with bat and ball". Daily Mirror. 21 August 2021.
  4. McGlashan, Andrew (19 April 2015). "Liam Livingstone: 350 off 138 balls". ESPNcricinfo. https://www.espncricinfo.com/story/liam-livingstone-350-off-138-balls-863829. 
  5. Mehta, Kalika (20 April 2015). "Liam Livingstone scores 350 for Nantwich in 500-run cup win". BBC Sport. https://www.bbc.co.uk/sport/0/cricket/32376031. 
  6. "Liam Livingstone awarded Lancashire Cap". Lancashire County Cricket Club. April 2017. பார்க்கப்பட்ட நாள் 4 August 2020.
  7. "Liam Livingstone named Lancashire Captain".
  8. "Livingstone, Crane in England T20 squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
  9. "South Africa tour of England, 2nd T20I: England v South Africa at Taunton, Jun 23, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
  10. "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  11. "IPL 2019 Auction: Who got whom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
  12. "MSL 2.0 announces its T20 squads". Cricket South Africa. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  13. "Perth Scorchers signs this England all-rounder for the upcoming BBL season".
  14. "Where do the eight franchises stand before the 2020 auction?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
  15. "IPL 2021 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 February 2021.
  16. "Jofra Archer to miss India ODIs and start of IPL season, ECB confirms". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 March 2021.
  17. "2nd ODI (D/N), Pune, Mar 26 2021, England tour of India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 March 2021.
  18. "Pakistan beat England despite Liam Livingstone's record-breaking hundred". Evening Standard. 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
  19. "Liam Livingstone smashes England's fastest T20I hundred". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
  20. "Watch: Liam Livingstone hits 122-metre six vs Pakistan, fans call it 'biggest ever'". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-19. பார்க்கப்பட்ட நாள் 2021-07-20.
  21. "Tymal Mills makes England's T20 World Cup squad, no return for Ben Stokes". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
  22. "Liam Livingstone extends Lancashire stay". Lancashire CCC. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.
  23. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
  24. "WATCH: Liam Livingstone hits jaw-dropping biggest six of IPL 2022 | Cricket News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  25. "The Hundred 2022: latest squads as Draft picks revealed". https://www.bbc.co.uk/sport/cricket/60477088. 
  26. "England register highest-ever ODI score of 498 runs against Netherlands". The Indian Express (in ஆங்கிலம்). 2022-06-17. பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
  27. "ECB announce England squad for Test series in Pakistan: Liam Livingstone, Keaton Jennings and Surrey's Jacks called upon". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 November 2022.
  28. "Liam Livingstone to make his Test debut as England confirm playing XI for first Test against Pakistan". Sportskeeda (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 November 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லியம்_லிவிங்சுடன்&oldid=3756145" இலிருந்து மீள்விக்கப்பட்டது