நூறு (துடுப்பாட்ட போட்டி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூறு என்பது இங்கிலாந்து மற்றும் வேல்சில் உள்ள முக்கிய நகரங்களை மையப்படுத்தி அமைந்துள்ள எட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை உள்ளடக்கிய ஒரு தொழில்முறை 100 பந்து துடுப்பாட்டப் போட்டியாகும். இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் (ஈசிபி) இந்த போட்டியை நடத்துகிறது மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஒரு வருடம் தாமதமாகி, 2021 கோடையில் முதல் முறையாக நடைபெறுகிறது[1].

நூறு (த ஹன்ட்ரட்)
நாடு(கள்) இங்கிலாந்து
 வேல்சு
நிர்வாகி(கள்)இங்கிலாந்து, வேல்ஸ் துடுப்பாட்ட வாரியம்
வடிவம்100 பந்து துடுப்பாட்டம்
முதல் பதிப்பு2021 பருவம்
அடுத்த பதிப்பு2022 பருவம்
போட்டித் தொடர் வடிவம்தொடர் சுழல்முறைப் போட்டி and தொடர் இறுதிகள்
மொத்த அணிகள்8
தற்போதைய வாகையாளர்ஓவல் இன்வின்சிபில்ஸ் (பெண்கள்)
சதர்ன் பிரேவ் (ஆண்கள்)
2021 பருவம்
வலைத்தளம்https://www.thehundred.com

இளைஞர் மற்றும் பலதரப்பட்ட கூட்டங்களை துடுப்பாட்டத்தின்பால் ஈர்ப்பதற்காக இந்த வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது, குறுகிய வடிவமும் ஒவ்வொரு போட்டியும் இரண்டரை மணி நேரம் நீடிக்கும்படியும் அமைந்துள்ளது . பிபிசி போட்டியின் இலவச ஒளிபரப்பைக் காண்பிக்கும், அதே நேரத்தில் பெண்கள் போட்டிகள் மற்றும் சில ஆண்கள் போட்டிகள் ஸ்கை ஸ்போர்ட்ஸின் வலையொளி பதிவுதடத்தில் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படும்[2].

இந்த போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் இரு தரப்பினருக்கும் சமமானதாக இருக்கும், கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் ஒரே நாளில், ஒரே இடத்தில் நடைபெறுகின்றன. ஒரு கடவுச்சீட்டு, ஆண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டுகளுக்கு அணுகலை வழங்கும், அதே நேரத்தில் ஆண்களும் பெண்களும் ஒரே பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள்[3].போட்டிமுறை[தொகு]

19 ஏப்ரல் 2018 அன்று, இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் முதல் முறையாக உள்நாட்டு துடுப்பாட்டக் குழுக்களுக்கு ஒரு புதிய 100 பந்து துடுப்பாட்ட வடிவத்தை முன்மொழிகின்றதாக அறிவித்தது, அதில் பாரம்பரிய ஆறு பந்து நிறைவுகள் அன்றி 10 பந்துகளுடைய நிறைவு இருக்கும். முன்னங்கால் இடைமறிப்பு சட்டத்தை நீக்குவது உள்ளிட்ட பிற மாற்றங்களும் அடங்கும். இந்த திட்டம் குறிப்பிடத்தக்க எதிர்ப்பை ஈர்த்தது, ஆனால் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் இதை ஆதரித்தார். 21 பிப்ரவரி 2019 அன்று, திருத்தப்பட்ட விளையாட்டு நிலைகளை இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியம் உறுதிப்படுத்தியது, அதில் பத்து 10 பந்து நிறைவுகள் இருக்கும், பந்து வீச்சாளர்கள் 5 அல்லது 10 பந்துகளை தொடர்ச்சியாக வீசுவர்.

நூறு பந்து துடுப்பாட்டம் என்பது வரையறுக்கப்பட்ட நிறைவு துடுப்பாட்டத்தின் ஒரு வடிவமாகும், இதில் இரண்டு அணிகளும் தலா 100 பந்துகளைக் கொண்ட ஒரு ஆட்டப்பகுதியில் விளையாடுகின்றன. விளையாட்டுக்கள் சுமார் இரண்டரை மணி நேரம் நீடிக்கும்.

இவ்வடிவ துடுப்பாட்டத்தில்,

 • ஆட்டப்பகுதிக்கு 100 பந்துகள்
 • 10 பந்துகளுக்கு பின் முனையை மாற்றுவர்.
 • பந்துவீச்சாளர் தொடர்ந்து 5 அல்லது 10 பந்துகள் வீசுவர்.
 • ஒவ்வொரு பந்துவீச்சாளரும் ஆட்டத்திற்கு அதிகபட்சமாக 20 பந்துகள் வீசுவர்.
 • பந்துவீசும் அணிக்கு இரண்டரை நிமிட உத்தி இடைவேளை வழங்கப்படுகிறது.
 • ஒவ்வொரு அணிக்கும் 25 பந்துடைய பவர்பிளேயுடன் ஆட்டம் துவங்கும்.
 • பவர்பிளேயின்போது 30 இருமுழ வட்டத்துக்கு வெளியில் 2 களத்தடுப்பு வீரர்கள் நிற்கலாம்.
 • ஐபிஎல் இல் உள்ளதுபோல, அணியினரே இடைவேளையை எடுத்துக்கொள்ளலாம்.
 • ஒரு எளிமையான புள்ளிபலகையும் அறிவிக்கப்பட்டது[4].
 • நோ பாலுக்கு ( பிழை பந்து) 2 ரன்கள் கூடுதலாக வழங்கப்படும் . மேலும் ஃபிரி ஹிட்டும் வழங்கப்படும்.
 • ஒருவேளை ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரத்தை பந்துவீசும் அணி எடுத்துக்கொண்டால், கடைசி 5 பந்துகளில் வெளிவட்டத்தில் 1 களத்தடுப்பு வீரர் குறைவாக இருக்க வேண்டும்.[5]

அணிகள்[தொகு]

நூறு (துடுப்பாட்ட போட்டி) is located in ஐக்கிய இராச்சியம்
பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ்
பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ்
வெல்ஷ் ஃபயர்
வெல்ஷ் ஃபயர்
நார்த்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ்
நார்த்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ்
டிரென்ட் ராக்கெட்ஸ்
டிரென்ட் ராக்கெட்ஸ்
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ்
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ்
இலண்டன் ஸ்பிரிட்
இலண்டன் ஸ்பிரிட்
ஓவல் இன்வின்சிபில்ஸ்
ஓவல் இன்வின்சிபில்ஸ்
சதர்ன் பிரேவ்
சதர்ன் பிரேவ்
இங்கிலாந்து மற்றும் வேல்சில் விளையாட்டு நடைபெறும் இடங்கள்
அணி இடம் ஆண்கள் பயிற்சியாளர் பெண்கள் பயிற்சியாளர் திடல்
பிர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் எட்க்பாஸ்டன் துடுப்பாட்ட திடல், எட்க்பாஸ்டன், பிர்மின்ஹாம் டேனியல் வெட்டோரி பென் சாயர்
இலண்டன் ஸ்பிரிட் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன் ஷேன் வோர்ன் லிசா கெய்ட்லி
மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் பழைய டிராஃபோர்ட் துடுப்பாட்ட திடல், பழைய டிராஃபோர்ட், மான்செஸ்டர் சைமன் கட்டிச் பவுல் ஷா
நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் ஹெடிங்லே துடுப்பாட்டத் திடல், ஹெடிங்லே, லீட்சு டேரன் லீமன் டானியெல் ஹாசெல்
ஓவல் இன்வின்சிபில்ஸ் தி ஓவல்,கென்னிங்டன், இலண்டன் டொம் மூடி லிடியா கிரீன்வே
சதர்ன் பிரேவ் உரோசு பவுல் துடுப்பாட்ட அரங்கம், ஹாம்ஷயர் மகேல ஜயவர்தன சார்லட் எட்வர்ட்சு
டிரெண்ட் ராக்கெட்ஸ் டிரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம் ஆண்டி பிளவர் சேலியன் பிரிக்ஸ்
வெல்ஷ் ஃபயர் சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப் கேரி கிர்ஸ்டன் மேத்யூ மாட்

மேற்கோள்கள்[தொகு]

 1. "நூறு போட்டித்தொடர் 2021க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது". TheHundred.
 2. "நூறு போட்டித்தொடர் வலையொளியில் இலவசமாக ஒளிபரப்பப்படும்". Broadcast Now.
 3. "இருபாலருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் பரிசுத்தொகை". Telegraph UK.
 4. "நூறு போட்டியின் விதிகள்". The Hundred.
 5. "ECB.co.uk - About". www.ecb.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-12.