உள்ளடக்கத்துக்குச் செல்

பிக் பேஷ் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக் பேஷ் லீக்
நாடு(கள்)ஆத்திரேலியா
நிர்வாகி(கள்)ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம்
வடிவம்இருபது 20
முதல் பதிப்பு2011-12
கடைசிப் பதிப்பு2021-22
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை மற்றும் தகுதிநிலைச் சுற்றுகள்
மொத்த அணிகள்8 அணிகள்
தற்போதைய வாகையாளர்பெர்த் ஸ்கோசேர்ஸ்
அதிகமுறை வெற்றிகள்பெர்த் ஸ்கோசேர்ஸ் (4 முறை வெற்றியாளர்)
அதிகபட்ச ஓட்டங்கள்கிறிஸ் லின் (3,005)[1]
அதிகபட்ச வீழ்த்தல்கள்சீன் அபோர்ட் (125)[2]
வலைத்தளம்www.bigbash.com.au

பிக் பாஷ் லீக் (கே.எஃப்.சி பிக் பாஷ் லீக் என்று அலுவல் முறையில் அழைக்கப்படுகிறது ; பெரும்பாலும் பிபிஎல் அல்லது பிக் பாஷ் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது) என்பது ஆத்திரேலிய தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடர் ஆகும்[3].

இதற்கு முன்னால் ஆத்திரேலியாவில் விளையாடப்பட்ட தொழில்முறை இருபது20 தொடரான "கே.எப்.சி இருபது20 பிக் பாஷ்" தொடருக்கு மாற்றாக இத்தொடர் ஆத்திரேலிய துடுப்பாட்ட வாரியத்தால் 2011 இல் நிறுவப்பட்டது. மேலும் ,இத்தொடர் முன்னர் பங்கேற்ற ஆறு மாநில அணிகளுக்குப் பதிலாக எட்டு நகரங்கள் அடிப்படையிலான அணிகளைக் கொண்டது.

இத்தொடருக்கு, துரித உணவு விற்பனை நிறுவனமான கே.எஃப்.சி தொடக்கத்தில் இருந்து நிதியுதவி அளித்து வருகிறது .பிபிஎல் 11 (2021/22) தொடரின் இறுதிப்போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கோசேர்ஸ் அணி வாகை சூடியது.

பிபிஎல் போட்டிகள் ஆத்திரேலியாவில் கோடைக்காலத்தில் (டிசம்பர், ஜனவரி, மற்றும் பிப்ரவரி மாதங்கள்) விளையாடப்படுகிறது.

போட்டியில் பங்கேற்ற எட்டு அணிகளில் ஆறு அணிகள் ஒரு முறையாவது பட்டத்தை வென்றுள்ளன. பெர்த் ஸ்கோசேர்ஸ் அணி இத்தொடரின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாகும். சிட்னி சிக்சர்ஸ் அணி மூன்று முறை பட்டத்தை வென்றுள்ளது. அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ், பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய நான்கு அணிகள் பட்டத்தை தலா ஒருமுறை வென்ற மற்ற நான்கு அணிகள் ஆகும்.

தொடர் அமைப்பு[தொகு]

குழுநிலைச் சுற்று[தொகு]

முதல் பதிப்பைத் தவிர, 2017-18 பதிப்பு வரை இத்தொடரின் குழுநிலைச் சுற்றுகளில் 32 ஆட்டங்கள் இடம்பெறும்[4].

2018-19 பதிப்பு முதல், 56 ஆட்டங்கள் கொண்ட தொடராக பிபிஎல் மாற்றப்பட்டது. அதாவது, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 ஆட்டங்கள் ஆட வேண்டும்.

தகுதிநிலைச் சுற்று[தொகு]

பிபிஎல் குழுநிலைச்சுற்றுகள் நடக்கும் முறை

2011-12 பதிப்பு முதல் 2018-19 பதிப்பு வரை , தகுதிநிலைச் சுற்றுகளில் புள்ளிபட்டியலில் முதல் 4 இடம் பிடித்த அணிகள் விளையாடும்.

தகுதிநிலைச் சுற்றின் அமைப்பில் பல மாற்றங்கள் 2019-20 பதிப்பின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. [5] அதன்படி குழுநிலைச்சுற்றில் முதல் 5 இடங்கள் பிடித்த அணிகள் தகுதிநிலைச் சுற்றில் நுழையும். தகுதிநிலைச் சுற்றில் உள்ள போட்டிகள்[6] :-

போட்டி பெயர் பங்கேற்பவர்கள்
எலிமினேட்டர் புள்ளிப்பட்டியலில் 4வது மற்றும் 5வது இடம் பிடித்த அணிகள்
நாக் அவுட் எலிமினேட்டரில் வென்ற அணி மற்றும் 3வது இடம் பிடித்த அணி
குவாலிபையர் புள்ளிபட்டியலில் 1வது மற்றும் 2வது இடம் பிடித்த அணிகள்
சேலஞ்சேர் குவாலிபையறில் தோற்ற அணி மற்றும் நாக் அவுட்டில் வென்ற அணி
இறுதி போட்டி குவாலிபையறில் வென்ற அணி மற்றும் சேலஞ்சரில் வென்ற அணி


அணிகள்[தொகு]

அணிப்பெயர் இடம் சொந்த அரங்கம் பயிற்சியாளர் தலைவர்
அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ் அடிலெயிட் , தெற்கு ஆத்திரேலியா அடிலெய்ட் நீள்வட்ட அரங்கம் ஆத்திரேலியா ஜேசன் கில்லெப்ஸ் ஆத்திரேலியா டிராவிஸ் ஹெட்
பிரிஸ்பேன் ஹீட் பிரிஸ்பேன் , குயின்ஸ்லாந்து பிரிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கம் ஆத்திரேலியா வேட் செக்கோம்பே ஆத்திரேலியா உஸ்மான் கவாஜா
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் ஹோபார்ட், தாசுமேனியா பெல்லரைவ் ஓவல்

அரங்கம்

ஆத்திரேலியா ஆதம் கிரிபித் ஆத்திரேலியா மேத்தியு வேட்
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மெல்போர்ன் , விக்டோரியா மார்வெல்

அரங்கம், மெல்போர்ன்

ஆத்திரேலியா டேவிட் சகேர் ஆத்திரேலியா ஆரோன் ஃபிஞ்ச்
மெல்போர்ன் ஸ்டார்ஸ் மெல்போர்ன் , விக்டோரியா மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் ஆத்திரேலியா டேவிட் ஹசி ஆத்திரேலியா கிளென் மாக்சுவெல்
பெர்த் ஸ்கோசேர்ஸ் பெர்த், மேற்கு ஆத்திரேலியா பெர்த் துடுப்பாட்ட

அரங்கம்

ஆத்திரேலியா ஆதம் வோக்ஸ் ஆத்திரேலியா ஆஷ்டன் டர்னர்
சிட்னி சிக்சர்ஸ் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் சிட்னி துடுப்பாட்ட அரங்கம் ஆத்திரேலியா கிரெக் ஷிப்ப்ர்ட் ஆத்திரேலியா மோசிஸ் ஹென்றிக்ஸ்
சிட்னி தண்டர் சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் சிட்னி காட்சி

அரங்கம்

ஆத்திரேலியா ட்ரேவோர் பெய்லிஸ் ஆத்திரேலியா ஜேசன் சங்கா

பதிப்புகளும் முடிவுகளும்[தொகு]

பதிப்பு இறுதிப்போட்டி இறுதிப்போட்டி நடந்த

இடம்

வாகையாளர் இறுதிப்போட்டி முடிவு இரண்டாமிடம்
2011-12 சிட்னி சிக்சர்ஸ்
3/158 (18.5 நிறைவுகள் )
சிக்சர்ஸ் 7 வீழ்தல்களால் வெற்றி

Scorecard

பெர்த் ஸ்கோசேர்ஸ்
5/156 (20 நிறைவுகள் )
மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட

வாரியா மைதானம், பெர்த்

2012-13 பிரிஸ்பேன் ஹீட்
5/167 (20 நிறைவுகள் )
ஹீட் 34 ஓட்டங்களால் வெற்றி
Scorecard
பெர்த் ஸ்கோசேர்ஸ்
9/133 (20 நிறைவுகள் )
மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட

வாரியா மைதானம், பெர்த்

2013-14 பெர்த் ஸ்கோசேர்ஸ்
4/191 (20 நிறைவுகள் )
ஸ்கோசேர்ஸ் 39 ஓட்டங்களால் வெற்றி
Scorecard
ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
7/152 (20 நிறைவுகள் )
மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட

வாரியா மைதானம், பெர்த்

2014-15 பெர்த் ஸ்கோசேர்ஸ்
6/148 (20 நிறைவுகள் )
ஸ்கோசேர்ஸ் 4 வீழ்தல்களால் வெற்றி
Scorecard
சிட்னி சிக்சர்ஸ்

5/147 (20 நிறைவுகள் )

மனுக்கா நீள்வட்ட அரங்கம், கான்பரா
2015-16 சிட்னி தண்டர்
7/181 (19.3 நிறைவுகள் )

தண்டர் 3 வீழ்தல்களால் வெற்றி
Scorecard
மெல்போர்ன் ஸ்டார்ஸ்
9/176 (20 நிறைவுகள் )
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம்
2016-17 பெர்த் ஸ்கோசேர்ஸ்


1/144 (15.5 நிறைவுகள் )

ஸ்கோசேர்ஸ் 9 வீழ்தல்களால் வெற்றி
Scorecard
சிட்னி சிக்சர்ஸ்
9/141 (20 நிறைவுகள் )
மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட

வாரியா மைதானம், பெர்த்

2017-18 அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ்


2/202 (20 நிறைவுகள் )

ஸ்ரைக்கர்ஸ் 25 ஓட்டங்களால் வெற்றி
Scorecard
ஹோபார்ட் ஹரிகேன்ஸ்
5/177 (20 நிறைவுகள் )
அடிலெய்ட் நீள்வட்ட அரங்கம்
2018-19 மெல்போர்ன் ரெனிகேட்ஸ்
5/145 (20 நிறைவுகள் )
ரெனிகேட்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றி
Scorecard
மெல்போர்ன் ஸ்டார்ஸ்
7/132 (20 நிறைவுகள் )
மார்வெல்

அரங்கம், மெல்போர்ன்

2019-20 சிட்னி சிக்சர்ஸ்


5/116 (12 நிறைவுகள் )

சிக்சர்ஸ் 19 ஓட்டங்களால் வெற்றி
Scorecard
மெல்போர்ன் ஸ்டார்ஸ்
6/97 (12 நிறைவுகள் )
சிட்னி துடுப்பாட்ட அரங்கம்
2020-21 சிட்னி சிக்சர்ஸ்


6/188 (20 நிறைவுகள் )

சிக்சர்ஸ் 27 ஓட்டங்களால் வெற்றி

Scorecard

பெர்த் ஸ்கோசேர்ஸ்
9/161 (20 நிறைவுகள் )
சிட்னி துடுப்பாட்ட அரங்கம்
2021-22 பெர்த் ஸ்கோசேர்ஸ்


6/171 (20 நிறைவுகள் )

ஸ்கோசேர்ஸ் 79 ஓட்டங்களால் வெற்றி
Scorecard
சிட்னி சிக்சர்ஸ்


10/92 (16.2 நிறைவுகள் )

மார்வெல்

அரங்கம், மெல்போர்ன்

2022-23 பெர்த் ஸ்கோசேர்ஸ்


5/178 (19.2 நிறைவுகள் )

ஸ்கோசேர்ஸ் 5 விழத்தல்களால் வெற்றி
Scorecard
பிரிஸ்பேன் ஹீட்


7/175 (20 நிறைவுகள் )

பெர்த் துடுப்பாட்ட அரங்கம் , பெர்த்
அணிப்பெயர் 2011-12 2012-13 2013-14 2014-15 2015-16 2016-17 2017-18 2018-19 2019-20 2020-21 2021-22 2022–23
அடிலெயிட் ஸ்ரைக்கர்ஸ் 6th 5th 7th SF (1st) SF (1st) 6th W (2nd) 7th KO (3rd) EF (5th) CF (4th) 7th
பிரிஸ்பேன் ஹீட் 5th W (4th) 5th 8th 6th SF (2nd) 7th 5th 7th CF (4th) 7th R (5th)
ஹோபார்ட் ஹரிகேன்ஸ் SF (2nd) 6th R (4th) 5th 7th 7th R (4th) SF (1st) EF (4th) 6th EF (5th) 6th
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 7th SF (1st) 6th 6th 5th 5th SF (3rd) W (2nd) 8th 8th 8th KO (3rd)
மெல்போர்ன் ஸ்டார்ஸ் SF (4th) SF (3rd) SF (1st) SF (3rd) R (2nd) SF (4th) 8th R (4th) R (1st) 7th 6th 8th
பெர்த் ஸ்கோசேர்ஸ் R (1st) R (2nd) W (3rd) W (2nd) SF (3rd) W (1st) SF (1st) 8th 6th R (2nd) W (1st) W (1st)
சிட்னி சிகசர்ஸ் W (3rd) 7th SF (2nd) R (4th) 8th R (3rd) 5th SF (3rd) W (2nd) W (1st) R (2nd) CF (2nd)
சிட்னி தண்டர் 8th 8th 8th 7th W (4th) 8th 6th 6th CF (5th) KO (3rd) KO (3rd) EF (4th)

குறிப்புகள் :

 • W =வாகையாளர்
  பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக பென் கட்டிங் ஆடுகிறார்
 • R = இரண்டாமிடம்
 • SF = அரையிறுதியில் தோற்ற அணி
 • EF = எலிமினேட்டர் போட்டியில் தோற்ற அணி (4th vs 5th) (2020-இல் இருந்து );
 • KO = நாக்- அவுட் போட்டியில் தோற்ற அணி (3rd vs எலிமினேட்டர் போட்டியின் வெற்றியாளர் ) (2020-இல் இருந்து );
 • CF = சேலஞ்சர் போட்டியில் தோற்ற அணி (2nd vs நாக்- அவுட் போட்டியின் வெற்றியாளர்)(2020-இல் இருந்து );
 • (1-8) = குழுநிலைச்சுற்றின் முடிவில் பெற்ற இடம்


மேற்கோள்கள்[தொகு]

 1. "Big Bash League / Records / Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
 2. "Big Bash League / Records / Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
 3. "Official home of the KFC BBL and Weber WBBL". www.cricket.com.au. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
 4. "BBL 2015-16". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
 5. "BBL revamps finals as full schedule revealed". cricket.com.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-06.
 6. "How Does the BBL Finals Format Work? - Big Bash League Explained". Its Only Cricket (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2021-12-08. பார்க்கப்பட்ட நாள் 2022-02-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பேஷ்_லீக்&oldid=3811894" இலிருந்து மீள்விக்கப்பட்டது