சிட்னி துடுப்பாட்ட அரங்கம்
சிட்னி கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உலகின் மிக பெரிய துடுப்பாட்ட மைதானம் ஆகும். இதில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. இம் மைதானத்தில் ரக்பி, ஆஸ்திரேலிய கால்பந்து போட்டி மற்றும் பல போட்டிகளும் நடைபெறுகின்றன. இது நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு சொந்தமான மைதானமாகும். இது எஸ்சிஜி டிரஸ்ட் இனால் கவனிக்கப்படும் மைதானமாகும்.
வரலாறு[தொகு]
1811 ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்சின் ஆளுநர் லாச்லன் மச்கோரி இரண்டாம் சிட்னி என்ற ஒரு இடத்தை உருவாக்கினர். அது ஒன்று அரை மைல் அகலமும் ஆக்ஸ்போட் தெருவை தெற்கிலும் ரண்ட்விக் ரேஸ் கோர்ஸை வடக்கிலும் கொண்டிருந்தது. இது 1850 முதலில் குப்பை போடும் இடமாக தான் இருந்தது. இதை விளையாட்டிற்குப் பயன்படுத்தவில்லை. பின்பு இரண்டாம் சிட்னியின் தெற்கு பகுதியான விக்டோரியா பரக்க்ஸ் ஆங்கிலேய ராணுவத்திற்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அதை ஆங்கிலேயர்கள் புல்வெளி தோட்டம் போல் பயன்படுத்தினர். மற்றும் அதை ராணுவ வீரர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானமாக வைத்தனர். இரு வருடத்தின் பின்பு, விக்டோரியா பரக்க்ஸ் ஒரு அணியை உருவாக்கினார். அதற்கு கேரிசன் அணி என்று பெயர் வைத்தார். அதன் பின் மைதானத்தை கேரிசன் மைதானம் என்று அழைத்தனர். அம்மைதானத்தை பெப்ருவரி 1854 இல் திறந்தனர்.
வெளி இணைப்புகள்[தொகு]
- SCG Trust Homepage பரணிடப்பட்டது 2012-12-19 at the வந்தவழி இயந்திரம்
- Google Maps satellite image of SCG