2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்பன்னாட்டு இருபது20
நடத்துனர்(கள்) இந்தியா
மொத்த பங்கேற்பாளர்கள்16
மொத்த போட்டிகள்45[1]
2016
2022 →

2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2021 ICC Men's T20 World Cup) என்பது இந்தியாவில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இருபது20 துடுப்பாட்ட உலகக்கிணணத்தின் 7ஆம் பருவமாகும்.[2][3][4] முன்பாக, 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த இத்தொடர்,[5][6][7][8] கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதாக ஜூலை 2020இல் ஐசிசி அறிவித்தது.[9][10][11] பிறகு ஆகஸ்ட் 2020இல், இத்தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று ஐசிசி உறுதி செய்தது.[12]

அணிகளும் தகுதியும்[தொகு]

31 திசம்பர் 2018 நிலவரப்படி ஐசிசியின் இருபது20 தரவரிசையின் முதல் 9 அணிகள் மற்றும் தொடரின் நடத்துனரான ஆஸ்திரேலியா ஆகிய 10 அணிகளும் 2020 போட்டித் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெற்றன. அவற்றில் இலங்கை மற்றும் வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் சிறப்பு 12கள் சுற்றுக்குத் தகுதிபெற்றன. அந்த இரு அணிகளும், 2020 தகுதி-காண் போட்டிகள் மூலம் தகுதிபெற்ற 6 அணிகளும் சேர்ந்து குழுநிலைப் போட்டிகளில் மோதுகின்றன. அதிலிருந்து முதல் 4 அணிகள் சிறப்பு 12கள் சுற்றுக்கு முன்னேறும்.

தகுதி பெறும் விதம் நாள் நிகழ்விடம் மொத்த அணிகள் அணிகள்
நடைபெறும் நாடு 10 பிப்ரவரி 2015 1  இந்தியா
ஐசிசி இருபது20 வாகை
(தரவரிசையின் முதல் 9 இடங்களில் உள்ள அணிகள்)
31 டிசம்பர் 2018 பல்வேறு 9 Flag of Pakistan.svg பாகிஸ்தான்
Flag of Australia.svg ஆஸ்திரேலியா
 இங்கிலாந்து
 தென்னாப்பிரிக்கா
 நியூசிலாந்து
 மேற்கிந்தியத் தீவுகள்
Flag of Afghanistan.svg ஆப்கானிஸ்தான்
 இலங்கை
 வங்காளதேசம்
2019 ஐசிசி உலக இருபது20

தகுதி-காண் போட்டிகள்

11 அக்டோபர்–

3 நவம்பர் 2019

ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் 6  நெதர்லாந்து
 பப்புவா நியூ கினி
 அயர்லாந்து
 நமீபியா
Flag of Scotland.svg ஸ்காட்லாந்து
 ஓமான்
மொத்தம் 16

மேற்கோள்கள்[தொகு]

 1. "Australia is next with two T20 World Cups coming in 2020". International Cricket Council. மூல முகவரியிலிருந்து 25 November 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 November 2018.
 2. "World T20 renamed as T20 World Cup". மூல முகவரியிலிருந்து 23 November 2018 அன்று பரணிடப்பட்டது.
 3. "World T20 to be called T20 World Cup from 2020 edition: ICC". மூல முகவரியிலிருந்து 24 November 2018 அன்று பரணிடப்பட்டது.
 4. "ICC Men's T20 World Cup 2020 postponed". International Cricket Council. பார்த்த நாள் 20 July 2020.
 5. "Australia and New Zealand to host World Twenty20 in 2020" (10 February 2015). மூல முகவரியிலிருந்து 25 October 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 February 2015.
 6. "IPL now has window in ICC Future Tours Programme" (12 December 2017). மூல முகவரியிலிருந்து 13 December 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 December 2017.
 7. "The road to the men's ICC World T20 Australia 2020 heads to Kuwait as regional qualification groups are confirmed". மூல முகவரியிலிருந்து 20 April 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 April 2018.
 8. "No India-Pakistan game in group stage of 2020 T20 World Cup". ESPN Cricinfo (29 January 2019). மூல முகவரியிலிருந்து 29 January 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 January 2019.
 9. "Men's T20 World Cup postponement FAQs". International Cricket Council. பார்த்த நாள் 20 July 2020.
 10. "Men's 2020 T20 World Cup postponed because of coronavirus" (in en-GB). BBC Sport. 20 July 2020. https://www.bbc.com/sport/cricket/53474889. 
 11. "ICC postpones T20 World Cup due to Covid-19 pandemic | ESPNcricinfo.com" (en).
 12. "Venue for postponed 2020 ICC Men's T20 World Cup confirmed". International Cricket Council. பார்த்த நாள் 7 August 2020.