லகிரு குமார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரதாச பிரகம்மண ராலலாகே லகிரு குமார (Chandradasa Brahammana Ralalage Lahiru Sudesh Kumara, பொதுவாக லகிரு குமாரா என அழைக்கப்படும் இவர் (பெப்ரவரி 13, 1997) இலங்கைத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1] வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர் ஆவார். தனது 19 ஆவது வயதில் இவர் தேசிய அணிக்காக விளையாடினார்.[2][3]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

2016 ஆம் ஆண்டில் தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். அக்டோபர் 4 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இலங்கை அ அணி சார்பாக விளையாடினார். 2017-18 ஆம் ஆண்டிற்கான இலங்கை கிரிக்கெட் லீக்கில் நந்த ஸ்கிரிப்ட்ஸ் துடுப்பாட்ட சங்கம் சார்பாக விளையாடினார்.[4]

2017-18 ஆம் ஆண்டிற்கான சூப்பர் ஃபோர் புரொவென்சியல் துடுப்பாட்டத் தொடரில் இவர் கண்டி அணி சார்பாக விளையாடினார்.[5][6]அதRகு அடுத்த ஆண்டு நடைபெற்ற துடுப்பாட்டத் தொடரிலும் இவர் அதே அணி சார்பாக விளையாடினார்.[7]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட இருபது20 லீக் தொடரில் இவர் காலி அணி சார்பாக விளையாடினார்.[8]

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை[தொகு]

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணக் கோப்பையில் இவர் இலங்கை அணி தலைவராக இருந்தார். அசிதா ஃபெர்ணான்டோவுடன் இணைந்து அணியினை அரையிறுதி வரை கூட்டிச் செல்ல உதவினார்.[9]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

2016 இல் இலங்கை அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நவம்பர் 2 இல் அராரேயில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 23 ஓவர்கள் வீசி 58 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 5 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 19 ஓவர்களை வீசி 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் மூன்று ஓவர்களை மெய்டனாக வீசினார்.இந்தப் போட்டியில் இலங்கை அணி 225 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[10][11]

2018 இல் இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சூன் 23 இல் பிரிஜ்டவுனில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பின் பந்து வீச்சில் 22 ஓவர்கள் வீசி 90 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 8 ஓவர்களை வீசி 31 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் ஓர் ஓவரை மெய்டனாக வீசினார்.இந்தப் போட்டியில் இலங்கை அணி 4 இலக்குகளில் வெற்றி பெற்றது.

சான்றுகள்[தொகு]


 1. "Lahiru Kumara". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 October 2016.
 2. "SL bowling coach Ramanayake enthused by Kumara's progress". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
 3. "Kumara's youthful energy turns heads". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
 4. "Group C, SLC Twenty-20 Tournament at Colombo, Feb 24 2018". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1137441.html. பார்த்த நாள்: 24 February 2018. 
 5. "Cricket: Mixed opinions on Provincial tournament". Sunday Times (Sri Lanka). 26 March 2018. http://www.sundaytimes.lk/article/1041112/cricket-mixed-opinions-on-provincial-tournament. பார்த்த நாள்: 27 March 2018. 
 6. "All you need to know about the SL Super Provincial Tournament". Daily Sports. 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327213128/https://dailysports.lk/all-you-need-to-know-about-the-sl-super-provincial-tournament/. பார்த்த நாள்: 27 March 2018. 
 7. "SLC Super Provincial 50 over tournament squads and fixtures". The Papare. http://www.thepapare.com/slc-super-provincial-50-tournament-squads-fixtures/. பார்த்த நாள்: 27 April 2018. 
 8. "SLC T20 League 2018 squads finalized". The Papare. http://www.thepapare.com/slc-t20-league-2018-squads-finalized/. பார்த்த நாள்: 16 August 2018. 
 9. "SL include Charana Nanayakkara in U-19 World Cup squad". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2015.
 10. "Sri Lanka's teenage fast bowler Lahiru Kumara bags Test spot". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
 11. "Sri Lanka tour of Zimbabwe, 1st Test: Zimbabwe v Sri Lanka at Harare, Oct 29 – Nov 2, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 October 2016.


"https://ta.wikipedia.org/w/index.php?title=லகிரு_குமார&oldid=3351956" இலிருந்து மீள்விக்கப்பட்டது