சவூத் சக்கீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவூத் சக்கீல்
Saud Shakeel
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு5 செப்டம்பர் 1995 (1995-09-05) (அகவை 28)
கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான்
உயரம்1.68 m (5 அடி 6 அங்)
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பங்குநடு-வரிசை மட்டையாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 250)1 திசம்பர் 2022 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வு24 சூலை 2023 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 231)8 சூலை 2021 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப11 நவம்பர் 2023 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்59
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2015–2016கராச்சி உவைட்டுசு
2017/18பாக்கித்தான் தொலைக்காட்சி அணி
2018–2019, 2023குவெட்டா கிளாடியேட்டர்சு
2019–2023சிந்து
2023யோர்க்சயர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ப.ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 7 15 59 70
ஓட்டங்கள் 875 317 4,463 2,411
மட்டையாட்ட சராசரி 87.50 28.81 53.13 45.49
100கள்/50கள் 2/6 0/3 15/21 4/19
அதியுயர் ஓட்டம் 208* 68 187* 134*
வீசிய பந்துகள் 12 47 1,840 1,074
வீழ்த்தல்கள் 0 1 23 23
பந்துவீச்சு சராசரி 37.00 47.39 46.69
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/14 2/7 3/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 5/– 26/– 23/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 14 நவம்பர் 2023

சவூத் சக்கீல் (Saud Shakeel, பிறப்பு: 5 செப்டம்பர் 1995) பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்.[1] இவர் 2021 சூலையில் தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியில் விளையாடினார்.[2][3] தனது முதலாவது தேர்வுப் போட்டியை இங்கிலாந்திற்கு எதிராக 2022 திசம்பரில் விளையாடினார்.[4] 2023 சூலையில், புரவலர்களுக்கு எதிராக இலங்கையில் தேர்வு இரட்டை சதம் அடித்த முதல் பாக்கித்தான் துடுப்பாளர் ஆனார்.[5]

பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

சனவரி 2021 இல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான பாக்கித்தானின் தேர்வு அணியில் சக்கீல் இடம் பெற்றார்.[6][7] மார்ச் 2021 இல், தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே சுற்றுப்பயணங்களுக்கான பாக்கித்தானின் தேர்வு, வரையிட்ட நிறைவுகள் அணிகளில் இவர் இடம் பெற்றார்.[8][9] இருப்பினும், காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார்.[10]

சூன் 2021 இல், பாக்கித்தானின் தேர்வு, ஒருநாள் அணிகளில் இவரது பெயர்[11] முறையே மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சேர்க்கப்பட்டது.[12] தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியை 2021 சூலை 8 இல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.[13]

மேற்கோள்கள்[தொகு]

  1. Suhayb, Muhammad (21 August 2023). "Saud Shakeel: The Next Big Thing in Pakistan Cricket". Youlin Magazine.
  2. "Saud Shakeel". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
  3. "The Home of CricketArchive". cricketarchive.com. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
  4. "Pakistan v England at Rawalpindi, Dec 1-5 2022". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 December 2022.
  5. "Records made by Saud Shakeel during double ton in Galle Test". Cricket Pakistan. Karachi: Express Media Group. 18 July 2023. Archived from the original on 18 July 2023. பார்க்கப்பட்ட நாள் 18 July 2023.
  6. "Shan Masood, Mohammad Abbas, Haris Sohail dropped from Pakistan Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  7. "Nine uncapped players in 20-member side for South Africa Tests". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  8. "Pakistan squads for South Africa and Zimbabwe announced". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
  9. "Sharjeel Khan returns to Pakistan T20I side for tour of South Africa and Zimbabwe". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
  10. "Injured Saud Shakeel ruled out of ODI series in South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2021.
  11. "Mohammad Abbas, Naseem Shah return to Pakistan Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
  12. "Pakistan name squads for England and West Indies tours". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
  13. "1st ODI (D/N), Cardiff, Jul 8 2021, Pakistan tour of England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவூத்_சக்கீல்&oldid=3827885" இலிருந்து மீள்விக்கப்பட்டது