உள்ளடக்கத்துக்குச் செல்

வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம் (Limited overs cricket) என்பது வரையறுக்கப்பட்ட நிறைவுகளைக் கொண்டு ஆடப்படும் துடுப்பாட்ட வகை ஆகும். இது பட்டியல் அ மற்றும் இருபது20 என்று இருவேறு பிரிவுகளை உள்ளடக்கியது.[1] பொதுவாக ஒரு நாளிலேயே இவ்வகை போட்டிகள் முடிந்துவிடுவதால் ஒருநாள் போட்டி என்று பரவலாக அறியப்படுகிறது. எனினும் முக்கியமான போட்டி ஒன்று மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டால் மறுநாள் தொடர்ந்து நடைபெறும்.

ஐசிசி நடத்தும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளில் 50 நிறைவுகளும் இருபது20 போட்டிகளில் 20 நிறைவுகளும் இடம்பெறும். ஒருவேளை போட்டி சமனில் முடிந்தால் கூடுதலாக ஒரு நிறைவு இடம்பெறும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Types of Cricket Matches". HowTheyPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-26.