மார்க் வுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் வுட்
Mark Wood
எம்சிஜி அரங்கில் 2021-22 ஆஷசு தொடர் போட்டியில் மார்க் வுட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மார்க் ஆன்ட்ரூ வுட்
பிறப்பு11 சனவரி 1990 (1990-01-11) (அகவை 34)
ஆசிங்டின், நோர்தம்பர்லாந்து, இங்கிலாந்து
உயரம்6 அடி
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 667)21 மே 2015 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு26 திசம்பர் 2021 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 241)8 மே 2015 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப4 சூலை 2021 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்33
இ20ப அறிமுகம் (தொப்பி 73)23 சூன் 2015 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப10 நவம்பர் 2021 எ. நியூசிலாந்து
இ20ப சட்டை எண்33
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008–2010நோர்தம்பர்லாந்து கவுண்டி
2011–இற்றைடர்காம் கவுண்டி (squad no. 33)
2018சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 11)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத ப.அ
ஆட்டங்கள் 23 57 64 91
ஓட்டங்கள் 497 72 1,663 134
மட்டையாட்ட சராசரி 15.53 9.00 19.79 7.05
100கள்/50கள் 0/1 0/0 0/5 0/0
அதியுயர் ஓட்டம் 52 14 72* 24
வீசிய பந்துகள் 4,178 2,903 10,296 4,282
வீழ்த்தல்கள் 69 69 205 115
பந்துவீச்சு சராசரி 33.02 38.28 27.32 32.88
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 10 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/41 4/33 6/46 4/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 12/– 17/– 22/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 26 திசம்பர் 2021

மார்க் ஆண்ட்ரூ வுட் (Mark Andrew Wood; பிறப்பு 11 சனவரி 1990), ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் ஆவர். வுட் ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளரும் வலது கை மட்டையாளரும் ஆவார். மார்க் வுட் சர்வதேச அளவில், அனைத்து வகைத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். மேலும், உள்ளூர் போட்டிகளில், வுட் டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார்.

உள்ளூர் போட்டிகள்[தொகு]

சிறு கவுண்டிகள்[தொகு]

2008 இல் MCCA நாக் அவுட் டிராபியில் நோர்ஃபோக்கிற்கு எதிராக நார்தம்பர்லேண்டிற்காக கவுண்டி கிரிக்கெட்டில் வூட் அறிமுகமானார்.[1]

டர்ஹாம்[தொகு]

2011இல், அவர் டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்ட அணிக்காக முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார்.[2]

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2018 சனவரி 28 அன்று 2018 ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்சு அணியால் 1.5 கோடி ரூபாய்க்கு (~£160,000) வுட் ஏலம் எடுக்கப்பட்டார்.

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

அவர் 8 மே 2015 அன்று,அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து தேசிய துடுப்பாட்ட அணிக்காக ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] வுட் தனது முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்திருந்தாலும், அப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

அதே மாத இறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணிக்காக தேர்வு போட்டியில் அறிமுகமானார்.[4] முதல் தேர்வில் வுட் மொத்தமாக 4 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அவர் 2015 சூன் 23 அன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணிக்காக இருபது20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.[5] அப்போட்டியில் அவர் 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

2019இல், மேற்கத்திய தீவுகளுக்கு எதிரான ஒரு தேர்வுப் போட்டியில் ,தனது முதல் ஐவீழ்த்தலைப் பதிவு செய்தார்.

2019 துடுப்பாட்ட உலகக் கோப்பை[தொகு]

ஏப்ரல் 2019 இல், அவர் 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றார்.[6] [7] 14 ஜூன் 2019 அன்று, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில், வுட் ஒருநாள் துடுப்பாட்டங்களில் தனது 50வது விக்கெட்டை எடுத்தார். 11 ஜூலை 2019 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், இங்கிலாந்துக்காக வுட் தனது 50வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[8] உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், 11-வது இடத்தில் பேட்டிங் செய்த வுட், ஆட்டத்தின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனதால் , ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.[9]

செப்டம்பர் 2021 இல், 2021 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் வுட் இடம்பிடித்தார்.[10]

சொந்த வாழ்க்கை[தொகு]

வூட் திருமணமானவர்; அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.[11] அவர் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Minor Counties Trophy Matches played by Mark Wood". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 9 August 2011.
  2. "First-Class Matches played by Mark Wood". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 9 August 2011.
  3. "England tour of Ireland, Only ODI: Ireland v England at Dublin, May 8, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  4. "New Zealand tour of England, 1st Test: England v New Zealand at Lord's, May 21-25, 2015". ESPN Cricinfo. 21 May 2015. பார்க்கப்பட்ட நாள் 21 May 2015.
  5. "New Zealand tour of England, Only T20I: England v New Zealand at Manchester, Jun 23, 2015". ESPNcricinfo. ESPN Sports Media. 23 June 2015. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.
  6. "Jofra Archer misses World Cup cut but included to play Ireland, Pakistan". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
  7. "England leave out Jofra Archer from World Cup squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
  8. "ICC Cricket World Cup 2019 (Semi-Final 2): Australia vs England – Stats Preview". Cricket Addictor. பார்க்கப்பட்ட நாள் 11 July 2019.
  9. https://www.bbc.co.uk/sport/cricket/49045292
  10. "Tymal Mills makes England's T20 World Cup squad, no return for Ben Stokes". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
  11. "Mark Wood embracing yet another bump in the road". Independent.co.uk. 7 May 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மார்க் வுட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_வுட்&oldid=3359179" இலிருந்து மீள்விக்கப்பட்டது