உள்ளடக்கத்துக்குச் செல்

2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம்
நாட்கள்19 பெப்ரவரி – 9 மார்ச் 2025
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை, ஒற்றை வெளியேற்ற நிலை
நடத்துனர்(கள்) பாக்கித்தான்
 ஐக்கிய அரபு அமீரகம்
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்15
அலுவல்முறை வலைத்தளம்icc-cricket.com
2017
2029

2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் (2025 ICC Champions Trophy) என்பது ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்தின் ஒன்பதாவது பதிப்பாகும். இத்தொடரைப் பாக்கித்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2025 பெப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்துகின்றன. 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணணப் போட்டிகளில் பங்கேற்று முதல் எட்டு இடங்களைப் பெற்ற நாடுகள் இத்தொடரில் விளையாடுகின்றன. முந்தைய 2017 வெற்றிக்கிண்ணத் தொடரில் வெற்றி பெற்ற பாக்கித்தான் அணி நடப்பு வாகையாளராக இத்தொடரில் விளையாடுகிறது.[1][2]

பின்னணி

ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்திற்கான தொடர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டத் தொடராகும். 1998 இல் தொடங்கப்பட்ட இத்தொடர் இரண்டாண்டுகளுக்கு ஒரு தடவை வெளியேற்றநிலை வெற்றிக்கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்தது. 2002 இல் இதன் பெயர் ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணம் என மாற்றப்பட்டது, 2009 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படுகின்றது. 2017 போட்டிக்குப் பிறகு வாகையாளர் வெற்றிக்கிண்ணத் தொடர் நடத்தப்பட மாட்டாது என ஐசிசி 2016 இல் அறிவித்தது. பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் மூன்று வடிவங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு போட்டியை நடத்த ஐசிசி இலக்கு வைத்தது.[3] ஆனாலும், நவம்பர் 2021 இல், இத்தொடர் போட்டி 2025 இல் நடைபெறும் என்று அறிவித்தது.[4]

நடத்தும் நாடு தெரிவு

2021 நவம்பர் 16 அன்று, 2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத் தொடரை பாக்கித்தான் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.[4] 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி மீதான தாக்குதலுக்குப் பிறகு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு,[5] பாக்கித்தானில் நடத்தப்படும் முதல் உலகளாவிய போட்டி இதுவாகும்.[6] பாக்கித்தான் கடைசியாக 1996 உலகக்கிண்ணப் போட்டிகளை இந்தியாவுடனும் இலங்கையுடனும் இணைந்து நடத்தியது.[7] இந்தியா பாக்கித்தானில் விளையாட மறுத்ததால் ஐக்கிய அரபு அமீரகம் இணை நடத்துநராக அறிவிக்கப்பட்டது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டுமே அமீரகத்தில் நடைபெறுகின்றன.[8][9]

வடிவம்

தகுதி பெற்ற எட்டு அணிகள் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்தக் குழுவில் உள்ள மூன்று அணிகளுடன் - மொத்தம் பன்னிரண்டு போட்டிகளாக - குழுநிலையில் விளையாடும், மேலும் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒற்றை வெளியேற்ற நிலைக்கு முன்னேறும். வெளியேற்ற நிலையில் 2 அரையிறுதிப் போட்டிகளும் ஒரு இறுதிப் போட்டியும் விளையாடப்படும். மொத்தம் 15 போட்டிகள் 19 நாட்களில் நடைபெறும்.[8]

தகுதி

புரவலர்களாக, பாக்கித்தான் தானாகவே போட்டிக்குத் தகுதி பெற்றது. இத்தொடருக்கு முந்தைய 2023 உலகக்கிண்ணத்தில் ஏனைய ஏழு உயர் தர-வரிசை அணிகளும் பாக்கித்தானுடன் இணையும்.[10][11]

தகுதி நாள் அரங்கு தகுதி பெற்ற அணிகள்
புரவலர் 16 நவம்பர் 2021  பாக்கித்தான்
2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (குழுநிலையில் முதல் 7 அணிகள்) 5 அக்டோபர் – 12
நவம்பர் 2023
இந்தியா இந்தியா  ஆப்கானித்தான்[12]
 ஆத்திரேலியா[13]
 இந்தியா
 நியூசிலாந்து[14]
 தென்னாப்பிரிக்கா
TBD
TBD
மொத்தம் 8

குழு A

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1  பாக்கித்தான் (H) 0 0 0 0 0 ஒற்றை வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2 TBD 0 0 0 0 0 0.000
3 TBD 0 0 0 0 0 0.000
4 TBD 0 0 0 0 0 0.000
பெப்ரவரி 2025 ஆட்டம்(கள்) இற்றைப்படுத்தப்பட்டது. மூலம்: Cricinfo

குழு B

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி தகுதி
1 TBD 0 0 0 0 0 0.000 ஒற்றை வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2 TBD 0 0 0 0 0 0.000
3 TBD 0 0 0 0 0 0.000
4 TBD 0 0 0 0 0 0.000
பெப்ரவரி 2025 ஆட்டம்(கள்) இற்றைப்படுத்தப்பட்டது. மூலம்: Cricinfo

ஒற்றை-வெளியேற்ற நிலை

  அரையிறுதிகள் இறுதி
                 
A1  குழு A வெற்றியாளர்  
B2  குழு B இரண்டாம் நிலை  
    SFW1  அரையிறுதி 1 வெற்றியாளர்
  SFW2  அரையிறுதி 2 வெற்றியாளர்
A2  குழு A இரண்டாம் நிலை
B1  குழு B வெற்றியாளர்  

மேற்கோள்கள்

  1. "Men's FTP up to 2027" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 March 2023.
  2. "Pakistan to host 2025 Champions Trophy, announces ICC". Dawn. 16 December 2024. https://www.dawn.com/news/1658449/pakistan-to-host-2025-champions-trophy-announces-icc. 
  3. "Test Championship to replace Champions Trophy". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ இம் மூலத்தில் இருந்து 20 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180620182116/http://www.espncricinfo.com/ci-icc/content/story/646147.html. 
  4. 4.0 4.1 "USA to stage T20 World Cup: 2024-2031 ICC Men's tournament hosts confirmed". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இம் மூலத்தில் இருந்து 5 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211205110854/https://www.icc-cricket.com/news/2354682. 
  5. "Pakistan set to host ICC event after 28 years". Pakistan Cricket Board. 24 December 2024.
  6. "USA co-hosts for 2024 T20 WC, Pakistan gets 2025 Champions Trophy, India and Bangladesh 2031 World Cup". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. 16 November 2021 இம் மூலத்தில் இருந்து 16 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211116141837/http://www.espncricinfo.com/story/usa-co-hosts-for-2024-t20-wc-pakistan-gets-2025-champions-trophy-india-and-bangladesh-2031-world-cup-1289589. 
  7. "When was the last time Pakistan hosted an ICC tournament?". Sporting News. 12 July 2024. https://www.sportingnews.com/in/cricket/news/when-was-last-time-pakistan-hosted-icc-tournament/dac1a1e950d3a43f7e9673fb. 
  8. 8.0 8.1 "Official fixtures announced for ICC Men's Champions Trophy 2025". ICC. 2024-12-24. பார்க்கப்பட்ட நாள் 2024-12-24.
  9. "India to play Champions Trophy on neutral ground, not Pakistan". 19 December 2024. பார்க்கப்பட்ட நாள் 2025-01-03.
  10. "ICC announces expansion of global events". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  11. "2025 Champions Trophy qualification at stake during ODI World Cup". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  12. "Aus NZ Afg qualifies for icc champions trophy 2025". Wisden. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.
  13. "Aus NZ Afg qualifies for icc champions trophy 2025". Wisden. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.
  14. "Aus NZ Afg qualifies for icc champions trophy 2025". Wisden. பார்க்கப்பட்ட நாள் 2023-11-04.