உள்ளடக்கத்துக்குச் செல்

ரமீஸ் ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரமீஸ் ஹசன் ராஜா (Rameez Hasan Raja உருது : رميز حسن راجہ born; பிறப்பு 14 ஆகஸ்ட் 1962) ஒரு பாகிஸ்தான் துடுப்பாட்ட வர்ணனையாளர், யூடியூபர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார்.இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வந்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் , பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடினார். இவர் 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை பாக்கித்தான் அணிக்காக விளையாடி வந்துள்ளார். சில போட்டிகளில் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து இவர் துடுப்பாட்டப் போட்டிகளின் வர்ணனையாளராக இருந்து வருகிறார்.[1][2][3] அவர் தனது யூடியூப் சேனலான ரமிஸ் ஸ்பீக்கிலும் துடுப்பாட்டம் பற்றி பேசுகிறார். இவர் 1976 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 1977 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 1984 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் பாக்கித்தான் அணியின் சார்பாக விளையாடினார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 2833 ஓட்டங்களையும் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 5841 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி , பாக்கித்தான் அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார்.

உள்ளூர் போட்டிகள்[தொகு]

பட்டியல் அ[தொகு]

இவர் 1976 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

1977 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

1984 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 1984 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம்ச் எய்து விளையாடியது.மார்ச், 2 கராச்சி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் மட்டையாட்டத்தில் 22 பந்துகளில் ஓர் ஓட்டம் எடுத்து குக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எடுக்காமல் முகமது இர்பான் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 45 பந்துகளில் ஓர் ஓட்டம் எடுத்து மார்க்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 3 இலக்குகளில் வெற்றி பெற்றது.[4]

ஒருநாள் போட்டிகள்[தொகு]

2019 ஆம் ஆண்டில் இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 1985 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 6, கிறைஸ்ட்சர்ச் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 76 பந்துகளில் 75 ஓட்டக்ன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[5]

வர்ணனையாளர்[தொகு]

துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இவர் பல போட்டிகளில் துடுப்பாட்ட வர்ணனையாளராக இருந்து வருகிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Rameez Raja's commentary goof up". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. "Pakistan should accept proposed ICC overhaul: Ramiz Raja". India TV News.
  3. "Satire: India-Pak match: Commentator Rameez Raja fined by match referee David Boon". Cricket Country.
  4. "Full Scorecard of Pakistan vs England 1st Test 1984 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
  5. "Ramiz Raja". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமீஸ்_ராஜா&oldid=3742257" இலிருந்து மீள்விக்கப்பட்டது