உள்ளடக்கத்துக்குச் செல்

கேசவ் மகராச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேசவ் மகராச்
Keshav Maharaj
2019-இல் கேசவ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கேசவ் ஆத்மானந்த் மகராஜ்
பிறப்பு7 பெப்ரவரி 1990 (1990-02-07) (அகவை 34)
டர்பன், தென்னாப்பிரிக்கா
உயரம்178 செமீ
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைஇடது-கை வழமைச் சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 327)3 நவம்பர் 2016 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு8 மார்ச் 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 120)27 மே 2017 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப5 நவம்பர் 2023 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்16
இ20ப அறிமுகம் (தொப்பி 94)10 செப்டம்பர் 2021 எ. இலங்கை
கடைசி இ20ப3 செப்டம்பர் 2023 எ. ஆத்திரேலியா
இ20ப சட்டை எண்16
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006–இன்றுகுவசூலு-நட்டால் அணி
2009–இன்றுடொல்ஃபின்சு
2018லங்காசயர்
2018–இன்றுதர்பன் கீட்
2019யோர்க்சயர்
2023தர்பன் சூப்பர் ஜயண்ட்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ப.ஒ.நா இ20ப மு.த
ஆட்டங்கள் 49 38 26 155
ஓட்டங்கள் 1,130 209 78 3,965
மட்டையாட்ட சராசரி 15.70 14.92 15.60 20.22
100கள்/50கள் 0/5 0/0 0/0 2/17
அதியுயர் ஓட்டம் 84 40 41 114*
வீசிய பந்துகள் 9,575 1,898 521 31,766
வீழ்த்தல்கள் 158 48 22 586
பந்துவீச்சு சராசரி 32.00 31.25 29.31 27.04
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
9 0 0 37
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 0 0 8
சிறந்த பந்துவீச்சு 9/129 4/33 2/21 9/129
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 9/– 12/– 58/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 1 நவம்பர் 2023

கேசவ் மகராச் (Keshav Maharaj, பிறப்பு: 7 பெப்ரவரி 1990) ஒரு தென்னாப்பிரிக்கத் தொழில்-முறைத் துடுப்பாட்ட வீரர். இவர் தென்னாப்பிரிக்கத் தேசிய அணியில் தேர்வு, பன்னாட்டு ஒருநாள், பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் தற்போது வரையிடப்பட்ட நிறைவுப் போட்டிகளில் துணைத்தலைவராக விளையாடுகிறார்.

இவர் ஓர் இடது-கை வழமைச் சுழல் பந்துவீச்சாளரும், கீழ்-மட்ட மட்டையாட்ட வீரரும் ஆவார். இவத் தனது முதலாவது முதல்-தரப் போட்டியை உள்ளூர் குவாசூளு-நட்டால் அணிய்க்காக 2006 இல் விளையாடினார். 2016 நவம்பரில் தென்னாப்பிரிகாவுக்காக தேர்வுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.[1][2]

2021 செப்டம்பரில், முதல் தடவையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியின் தலைவராக இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.[3] அதே காலப்பகுதியில் இலங்கைக்கு எதிரான இ20ப போட்டியிலும் தலைமைப் பொறுப்பில் விளையாடினார்.[4]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கேசவ் மகராச் டர்பன் நகரில் ஆத்மானந்த் மகராச், காஞ்சனமாலா ஆகியோருக்கு 1990 பெப்ரவரி 7 இல் பிறந்தார். கேசவின் பெற்றோரின் பெற்றோர் இந்தியாவில் உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்தில்]] பிறந்து 1874 இல் தென்னாப்பிரிக்காவில் குடியேறியவர்கள்.[5] தந்தை ஆத்மானந்த் குவசூலு-நத்தால் துடுப்பாட்ட அணியில் இலக்குக் காப்பாளராக விளையாடினார்.[5] கேசவ் மகராச் ஒரு கதக் நாட்டியக் கலைஞரான லெரிசா முனுசாமி என்பவரை 2022 ஏப்ரலில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Keshav Maharaj: The foodie who smashed the colour barrier" (in en). ஹிந்துஸ்தான் டைம்ஸ். 3 November 2016. https://www.hindustantimes.com/cricket/keshav-maharaj-the-foodie-who-smashed-the-colour-barrier/story-SetIgXBTBHkkfAFBM7WnQP.html. 
  2. "Keshav Maharaj, profile". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
  3. "South Africa need a spin intervention against improving Sri Lanka". ESPN Cricinfo. 4 September 2011. https://www.espncricinfo.com/series/south-africa-in-sri-lanka-2021-1271624/sri-lanka-vs-south-africa-2nd-odi-1271628/match-preview. 
  4. Mjikeliso, Sibusiso. "Proteas skipper Keshav Maharaj on dream T20 debut: 'My team-mates made my job easy'". https://www.news24.com/sport/cricket/proteas/proteas-skipper-keshav-maharaj-on-dream-t20-debut-my-team-mates-made-my-job-easy-20210911. 
  5. 5.0 5.1 "Forefathers of cricketer Keshav Maharaj came to South Africa as indentured labourers - Mumbai Mirror". 14 January 2018. https://mumbaimirror.indiatimes.com/sport/cricket/forefathers-of-cricketer-keshav-maharaj-came-to-south-africa-as-indentured-labourers/articleshow/62492681.cms. 
  6. "Meet South Africa Spinner Keshav Maharaj's Wife Lerisha". Zee News. 27 October 2023. https://zeenews.india.com/photos/sports/pak-vs-sa-meet-south-africa-spinner-keshav-maharajs-wife-lerisha-in-pics-pakistan-vs-south-africa-cricket-world-cup-2023-2680589. 
  7. "Keshav Maharaj's wife Lerisha is a kathak dancer". Zee News. 17 December 2022. https://zeenews.india.com/photos/sports/aus-vs-sa-1st-test-meet-keshav-maharajs-gorgeous-wife-whos-a-bollywood-lover-and-a-kathak-dancer-2549603/keshav-maharajs-wife-lerisha-munsamy-is-a-kathak-dancer-2549607. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவ்_மகராச்&oldid=3822147" இலிருந்து மீள்விக்கப்பட்டது