ஏட்ரியன் ஓல்சுடொக்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஏட்ரியன் தோமசு ஓல்சுடொக் | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 27 ஏப்ரல் 1970 கேப் டவுன், தென்னாபிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மிதவேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | நடுவர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1989/90–1992/93 | மேற்கு மாகாணம் | |||||||||||||||||||||||||||||||||||||||
1993/94–1995/96 | போலண்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||
நடுவராக | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு நடுவராக | 7 (2020–2023) | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப நடுவராக | 48 (2013–2023) | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப நடுவராக | 50 (2011–2023) | |||||||||||||||||||||||||||||||||||||||
பெஒநாப நடுவராக | 17 (2009–2018) | |||||||||||||||||||||||||||||||||||||||
பெஇ20 நடுவராக | 7 (2009–2019) | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 11 சூலை 2023 |
ஏட்ரியன் ஓல்சுடொக் அல்லது ஏட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (Adrian Holdstock, பிறப்பு: ஏப்ரல் 27, 1970) ஒரு தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட நடுவர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இப்போது பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவராக பணியாற்றுகிறார். [1] இவர் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் முதல் தரப் போட்டிகளுக்கான நடுவர் குழுவின் அங்கத்தவராக உள்ளார். [2]
தொழில்
[தொகு]ஓல்சுடொக் 1989 மற்றும் 1993 க்கு இடையில் மேற்கு மாகாணத்திற்காக விளையாடினார். அதற்கு முன்பு போலண்ட் அணிக்காக 1993 மற்றும் 1995 இல் விளையாடினார் [3] 2006 இல் பட்டியல் அ துடுப்பாட்ட நடுவராக அறிமுகமான இவர் 2007 இல் முதல் தரத் துடுப்பாட்ட நடுவராக அறிமுகமானார் [4] [5]
2011 இல், ஓல்சுடொக் பன்னாட்டு இருபது20 போட்டி நடுவராக அறிமுகமானார். [6] அவர் 2013 இல் மூன்று பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் நடுவராக இருந்தார் [7] சனவரி 2020 இல், தென்னாப்பிரிக்காவில் 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டிக்கான பதினாறு நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். [8]
26 டிசம்பர் 2020 அன்று, தென்னாப்பிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் தேர்வுப் போட்டியில், ஓல்சுடொக் தேர்வுப் போட்டி நடுவராக அறிமுகமானார். [9]
2021 ஐசிசி ஆண்கள் இ20 உலகக் கோப்பைக்கான போட்டி நடுவர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [10] மார்ச் 2023 இல், அலீம் தார் குழுவிலிருந்து வெளியேறியதை அடுத்து, பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர்கள் குழுவில் ஓல்சுடொக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றும் அசான் ராசாவும் சேர்க்கப்பட்டனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CSA promotes seven umpires to Reserve List Panel". Cricket South Africa. Archived from the original on 11 July 2018. பார்க்கப்பட்ட நாள் 11 July 2018.
- ↑ "Agenbag and Fritz break new ground for SA Cricket". Cricket South Africa. பார்க்கப்பட்ட நாள் 28 August 2019.
- ↑ "Adrian Holdstock". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
- ↑ "Adrian Holdstock as Umpire in First-Class Matches". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
- ↑ "Adrian Holdstock as Umpire in List A Matches". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.
- ↑ "Holdstock makes debut". Sports24. http://www.sport24.co.za/Cricket/Holdstock-makes-debut-20111006.
- ↑ "Adrian Holdstock". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 May 2014.
- ↑ "Match officials named for ICC U19 Cricket World Cup". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.
- ↑ "South Africa vs Sri Lanka Test series: Marais Erasmus and Adrian Holdstock appointed as on-field umpires". Inside Sport. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020.
- ↑ "20-strong contingent of match officials announced for ICC Men's T20 World Cup 2021". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.