உள்ளடக்கத்துக்குச் செல்

சல்மான் அலி ஆகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்மான் அலி ஆகா
Salman Ali Agha
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு23 நவம்பர் 1993 (1993-11-23) (அகவை 30)
லாகூர், பஞ்சாப், பாக்கித்தான்
உயரம்6 அடி[1]
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர்ச்சுழல்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 247)16 சூலை 2022 எ. இலங்கை
கடைசித் தேர்வு24 சூலை 2023 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 236)16 ஆகத்து 2022 எ. நெதர்லாந்து
கடைசி ஒநாப11 நவம்பர் 2023 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012/13லாகூர் சலிமார்
2018–2021லாகூர் கலண்டார்சு
2019–2023தெற்கு பஞ்சாப்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ப.ஒ.நா
ஆட்டங்கள் 9 21
ஓட்டங்கள் 668 487
மட்டையாட்ட சராசரி 47.71 40.58
100கள்/50கள் 2/4 0/4
அதியுயர் ஓட்டம் 132 58
வீசிய பந்துகள் 642 414
வீழ்த்தல்கள் 9 4
பந்துவீச்சு சராசரி 45.33 99.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/75 2/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 13/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 12 நவம்பர் 2023

சல்மான் அலி ஆகா (Salman Ali Agha, பிறப்பு: 23 நவம்பர் 1993)[2] ஒரு பாக்கித்தானிய பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் பாக்கித்தான் அணிக்காக 2022 சூலை முதல் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[3]

பன்னாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]

2021 சனவரியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் பாக்கித்தானின் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[4][5] 2021 மார்ச்சில், மீண்டும் சிம்பாப்வேக்கு எதிரான தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக அழைக்கப்பட்டார்.[6][7] 2021 சூனில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பாக்கித்தானின் பன்னாட்டு ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.[8] 2022 சூனில், இலங்கைக்கு எதிரான தேர்வுப் போட்டிகளில் விளையாட அழைக்கப்பட்டார்.[9] இத்தொடரிலேயே தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[10]

ஆகத்து 2022 இல், நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.[11] இத்தொடரில் இவர் தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[12] 2022 திசம்பரில், தனது முதலாவது சதத்தைப் பெற்றார்.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Agha Salman". Sportskeeda. பார்க்கப்பட்ட நாள் 27 July 2023.
  2. "Salman Ali Agha Special Interview | Pakistan vs New Zealand | 4th ODI 2023 | PCB | M2B2A". Sports Central. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023 – via YouTube.
  3. "Agha Salman". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.
  4. "Shan Masood, Mohammad Abbas, Haris Sohail dropped from Pakistan Test squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  5. "Nine uncapped players in 20-member side for South Africa Tests". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
  6. "Pakistan squads for South Africa and Zimbabwe announced". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
  7. "Sharjeel Khan returns to Pakistan T20I side for tour of South Africa and Zimbabwe". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 March 2021.
  8. "Mohammad Abbas, Naseem Shah return to Pakistan Test squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
  9. "Yasir Shah returns for Sri Lanka Tests". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
  10. "1st Test, Galle, July 16 - 20, 2022, Pakistan tour of Sri Lanka". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
  11. "Pakistan name squads for Netherlands ODIs and T20 Asia Cup". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.
  12. "1st ODI, Rotterdam, August 16, 2022, Pakistan tour of Netherlands". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 August 2022.
  13. Ali, Mir Shabbar (28 December 2022). "Gritty Salman cracks maiden ton before New Zealand respond strongly". DAWN.COM.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மான்_அலி_ஆகா&oldid=3826281" இலிருந்து மீள்விக்கப்பட்டது