டேவிட் வில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் வில்லி
சூன் 2021இல் பந்து வீசுவதற்குத் தயாராகும் டேவிட் வில்லி.
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவிட் ஜோனதன் வில்லி
பிறப்பு28 பெப்ரவரி 1990 (1990-02-28) (அகவை 33)
நோதாம்ப்டன், நோர்தம்ப்டன்சயர், இங்கிலாந்து
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைஇடது கை விரைவு-மித வேகம்
பங்குபந்துவீச்சுப் பன்முக வீரர்
உறவினர்கள்பீட்டர் வில்லி (தந்தை)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 240)8 மே 2015 எ. அயர்லாந்து
கடைசி ஒநாப27 சனவரி 2023 எ. தென்னாபிரிக்கா
ஒநாப சட்டை எண்15
இ20ப அறிமுகம் (தொப்பி 72)23 சூன் 2015 எ. நியூசிலாந்து
கடைசி இ20ப14 அக்டோபர் 2022 எ. ஆத்திரேலியா
இ20ப சட்டை எண்15
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2009–2015நோர்தம்ப்டன்சயர் (squad no. 15)
2015/16–2018/19பேர்த் ஸ்கோர்ச்சேர்ஸ் (squad no. 8)
2016–2022யோர்க்சயர் (squad no. 72)
2018சென்னை சூப்பர் கிங்ஸ் (squad no. 15)
2022முல்ட்டான் சுல்த்தான்ஸ் (squad no. 15)
2022–தற்போதுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 15)
2023–தற்போதுநோர்தம்ப்டன்சயர் (squad no. 23)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது பஇ20 முத பஅ
ஆட்டங்கள் 63 43 77 146
ஓட்டங்கள் 530 226 2,515 2,012
மட்டையாட்ட சராசரி 25.23 15.06 27.33 25.79
100கள்/50கள் 0/2 0/0 2/14 3/7
அதியுயர் ஓட்டம் 51 33* 104* 167
வீசிய பந்துகள் 2,781 865 10,745 5,572
வீழ்த்தல்கள் 84 51 198 172
பந்துவீச்சு சராசரி 30.76 23.13 29.77 30.38
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 6 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 1 0
சிறந்த பந்துவீச்சு 5/30 4/7 5/29 5/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
24/– 17/– 18/– 50/–

டேவிட் ஜொனாதன் வில்லி (பிறப்பு: பிப்ரவரி 28, 1990) ஒரு இங்கிலாந்து பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் . அவர் ஒரு இடது கை மட்டையாளரும் பந்து வீச்சாளரும் ஆவார். இவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் சர்வதேச நடுவருமான பீட்டர் வில்லியின் மகன் ஆவார். [1] 2022 இருபது20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் வில்லி உறுப்பினராக இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பாடகியும் பாடலாசிரியருமான கரோலின் வில்லியை நவம்பர் 2016 இல் டேவிட் வில்லி திருமணம் செய்தார்.[2]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

வில்லி கவுண்டி சாம்பியன்ஷிப் பிரிவு இரண்டில் தனது சொந்த கவுண்டி நார்த்தாம்ப்டன்ஷயர்க்காக விளையாடி தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 பருவகாலத்தில் 19 வயதில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரது முதல் ஆட்டம் லீசெஸ்டர்ஷைருக்கு எதிராக அமைந்தது. ஆண்ட்ரூ ஹாலுடன் ஒரு நல்ல இணைப்பாட்டத்தில் அவர் அறிமுகத்தில் 60 ஓட்டங்கள் எடுத்தார்.[3] அவரது முதல் ஒரு நாள் ஆட்டத்தில் மோசமான முறையில் ஆடி ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். கென்ட்டுக்கு எதிரான அவரது இரண்டாவது முதல் தர போட்டியில் பில் எட்வர்ட்ஸை முன்னங்கால் இடைமறிப்பு முறையில் ஆட்டமிழக்கச் செய்தபோது அவரது முதல் இலக்குக் கிடைத்தது.

2013 ஆம் ஆண்டில், சர்ரேக்கு எதிரான ஃபிரண்ட்ஸ் லைஃப் இருபது20 இறுதிப் போட்டியில் நார்தாம்ப்டன்ஷையர் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வில்லி உதவினார். அங்கு அவர் 60 ஓட்டங்கள் எடுத்த பின்னர் கடைசி மூன்று ஆட்டக்காரர்களையும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தது உட்பட 4/9 என்ற பெறுதியைப் பெற்றிருந்தார்.

19 ஆகஸ்ட் 2015 அன்று, வில்லி 2016 பருவகாலத் தொடக்கத்தில் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் யோர்க்சயரில் சேருவார் என்று அறிவிக்கப்பட்டது. [4] அவர் 1 மே 2016 அன்று ட்ரெண்ட் பிரிட்ஜில் நாட்டிங்ஹாம்ஷைருக்கு எதிராக யோர்க்சஷயர் அணிக்காக அறிமுகமானார்.

2018 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியின் போது காயம் அடைந்த கேதர் ஜாதவுக்கு பதிலாக வில்லியை சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தம் செய்தது. காயமடைந்த நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னருக்கு மாற்றாக அவர் தேவைப்பட்டார். 2018 ஐபிஎல் தொடரில் விளையாட அழைக்கப்பட்ட 12வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 2018 ஐபிஎல் பதிப்பின் போது, லியாம் பிளங்கெட் (டிடிக்காக) மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் (எஸ்ஆர்ஹெச்) ஆகியோருடன் தாமதமாக ஐபிஎல் அழைப்பைப் பெற்ற மூன்று இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். [5]

2019 ஐபிஎல் பருவகாலத்தில் டேவிட் வில்லியை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டது. 2020 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸால் விடுவிக்கப்பட்டார். [6] பிப்ரவரி 2022 இல், அவர் 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவால் வாங்கப்பட்டார். [7]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

அவர் 8 மே 2015 அன்று அயர்லாந்திற்கு எதிராக இங்கிலாந்துக்காக ஒருநாள் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். மழையால் பாதிக்கப்பட்ட அந்தப் போட்டியில் தனது முதல் இலக்கைக் கைப்பற்றினார். [8]

வில்லி 23 ஜூன் 2015 அன்று நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தனது முதலாவது பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். [9] அவர் 3 இலக்குகளை எடுத்ததுடன் ஆறு ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற உதவினார். [10]

2016 உலக இருபது20 தொடரில் வில்லி இங்கிலாந்தின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில், அவர் 1-17 என்ற பெறுதியுடன் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவினார். [11] இறுதிப் போட்டியில் வில்லி நன்றாகப் பந்துவீசி, 3-20 என்ற பெறுதியப் பெற்றாலும், இங்கிலாந்து தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது. [12] ஐசிசியால் 2016 இருபது20 உலகக் கோப்பைக்கான 'தொடரின் அணியில்' அவர் பெயரிடப்பட்டார். [13]

29 ஜூன் 2021 அன்று, இலங்கைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில், வில்லி தனது 50வது ஒருநாள் போட்டியில் விளையாடினார். [14] செப்டம்பர் 2021 இல், 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் வில்லி இடம்பிடித்தார். [15]

மேற்கோள்கள்[தொகு]

 1. "David Willey". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 June 2018.
 2. "England cricketer David Willey weds singer Carolynne Good in stunning ceremony". Hello Magazine. 8 November 2016. http://www.hellomagazine.com/brides/2016110634464/david-willey-weds-singer-carolynne-good-in-stunning-ceremony/. 
 3. Austin Peters Hall and Willey rescue Northants The Telegraph. 2009-04-15. Retrieved 2010-01-14.
 4. "BBC Sport – David Willey: Yorkshire sign all-rounder from Northants". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
 5. Martin, Ali (2018-04-09). "David Willey's late IPL departure delivers another blow to Yorkshire". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
 6. "Where do the eight franchises stand before the 2020 auction?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
 7. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2022.
 8. "England tour of Ireland, Only ODI: Ireland v England at Dublin, May 8, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
 9. "New Zealand tour of England, Only T20I: England v New Zealand at Manchester, Jun 23, 2015. Partner of Carolynne Poole". ESPNcricinfo. ESPN Sports Media. 23 June 2015. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.
 10. "England vs New Zealand, Only T20I - Live Cricket Score, Commentary". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
 11. "1st Semi-Final (N), World T20 at Delhi, Mar 30 2016 - Match summary". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
 12. "Final (N), World T20 at Kolkata, Apr 3 2016 - Match summary". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2018.
 13. "ICC names WT20 Teams of the Tournament".
 14. "David Willey's return, what next for Tom Curran, and how competitive can Sri Lanka be? ODI Things to Watch". The Cricketer. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
 15. "Tymal Mills makes England's T20 World Cup squad, no return for Ben Stokes". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_வில்லி&oldid=3755612" இலிருந்து மீள்விக்கப்பட்டது