எய்டென் மார்க்ரம்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | எய்டென் மார்க்ரம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 அக்டோபர் 1994 செஞ்சூரியன், கோவ்டெங், தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 1[1] அங் (1.85 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை எதிர் விலகு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 332) | 28 செப்டம்பர் 2017 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 26 டிசம்பர் 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 122) | 22 அக்டோபர் 2017 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 6 ஜூலை 2019 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 4 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 81) | 22 மார்ச் 2019 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 24 மார்ச் 2019 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 4 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 29 டிசம்பர் 2019 |
எய்டென் மார்க்ரம் (Aiden Markram, பிறப்பு 4 அக்டோபர் 1994) என்பவர் தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஆவார். 2014ஆம் ஆண்டு இவரது தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது.[2][3][4][5] 2018ஆம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட ஆண்டுவிழாவில் இவர் ஆண்டின் 5 துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[6][7]
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]வங்காளதேசத்துக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 97 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தனது முதல் தேர்வு நூறை நூலிழையில் தவறவிட்டார். அதைத்தொடர்ந்து, வங்காளதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6 அக்டோபர் 2017 அன்று 186 பந்துகளில் 143 ஓட்டங்கள் எடுத்தார்.[8]
அக்டோபர் 2017 இல், ஹஷிம் அம்லாவுக்கு பதிலாக வங்காளதேசத்திற்கு எதிரான மூன்றாவது போட்டிக்கு முன்னதாக அவர் தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் பன்னாட்டு (ஒநாப) அணியில் சேர்க்கப்பட்டார்.[9] இவர் 22 அக்டோபர் 2017 அன்று வங்களாதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார், அதில் 66 ஓட்டங்கள் எடுத்து 2 மட்டையாளர்களை வீழ்த்தினார்.[10]
டிசம்பர் 2017இல், இவர் தனது இரண்டாவது தேர்வு நூறை எடுத்தார். இதன்மூலம் தனது முதல் மூன்று தேர்வுப் போட்டிகளில் இருமுறை நூறு எடுத்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.[11]
ஒநாப தலைவர்
[தொகு]பிப்ரவரி 2018இல், தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவர் பாஃப் டு பிளெசீ விரல் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கடைசி ஐந்து ஒருநாள் (ஒநாப) மற்றும் பன்னாட்டு இருபது20 (இ20ப) தொடர்களில் இருந்து விலக்கப்பட்டார்.[12] Markram was named as South Africa's captain for the remaining ODI fixtures in du Plessis' absence.[13] டு பிளெசீ இல்லாத நிலையில் மீதமுள்ள ஒநாப போட்டிகளுக்கு தென்னாப்பிரிக்காவின் அணித்தலைவராக மார்க்ரம் பெயரிடப்பட்டார். அப்போது அவரது வயது 23 ஆண்டுகள், 123 நாட்களாக இருந்தது. இதன்மூலம் அவர் கிரேம் ஸ்மித்துக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இளைய அணித்தலைவரானார்.[14]
ஆகஸ்ட் 2018இல், இலங்கைக்கு எதிரான ஒரு போட்டிக்கான தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியில் இவர் இடம்பெற்றார், எனினும் அந்தப் போட்டியில் இவர் விளையாடவில்லை.[15] மார்ச் 2019இல், இவர் மீண்டும் இலங்கைக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் இ20ப அணியில் இடம் பெற்றார்.[16] அத்தொடரில் மார்ச் 22, 2019 அன்று இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.[17]
ஏப்ரல் 2019இல், இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான தென்னாப்பிரிக்காவின் அணியில் இடம் பெற்றார்.[18][19]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2017-10-07.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Aiden Markram leading South Africa U-19". ESPNcricinfo. 5 March 2014. http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2014/content/story/723987.html.
- ↑ Balachandran, Kanishkaa (28 February 2014). "Composed Markram leading by example". ESPNcricinfo. http://www.espncricinfo.com/icc-under-19-world-cup-2014/content/story/723987.html. பார்த்த நாள்: 6 March 2014.
- ↑ Selvaraj, Jonathan (2 March 2014). "Failure a stepping stone for Markram". The Indian Express. http://indianexpress.com/article/sports/cricket/failure-a-stepping-stone-for-markram/. பார்த்த நாள்: 6 March 2014.
- ↑ "Best-player Markram ‘not at his best’". SuperSport. 2 March 2014. http://www.supersport.com/cricket/under19-world-cup/news/140302/Bestplayer_Markram_not_at_his_best. பார்த்த நாள்: 6 March 2014.
- ↑ "Markram, Ngidi named among SA Cricket Annual's Top Five". Cricket South Africa. Archived from the original on 27 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Markram, Ngidi among SA Cricket Annual's Cricketers of the Year". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 November 2018.
- ↑ http://www.espncricinfo.com/story/_/id/20936014/markram-quickly-puts-miss-him
- ↑ "Amla rested for final ODI; Markram called up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 October 2017.
- ↑ "3rd ODI, Bangladesh tour of South Africa at East London, Oct 22 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
- ↑ "Markram's record-breaking start". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 December 2017.
- ↑ "Finger injury rules Du Plessis out of India ODI and T20 Series". Cricket South Africa இம் மூலத்தில் இருந்து 3 பிப்ரவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180203005831/http://cricket.co.za/news/23251/Finger-injury-rules-Du-Plessis-out-of-India-ODI-and-T20-Series. பார்த்த நாள்: 2 February 2018.
- ↑ "Aiden Markram to fill in as South Africa captain". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/content/story/1135446.html. பார்த்த நாள்: 3 February 2018.
- ↑ "Records | One-Day Internationals | Individual records (captains, players, umpires) | Youngest captains | ESPNcricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/283415.html.
- ↑ "Chance for South Africa to finish Sri Lanka tour on a high". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 13 August 2018.
- ↑ "Markram, Nortje, Qeshile called up for T20Is against Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
- ↑ "2nd T20I (N), Sri Lanka tour of South Africa at Centurion, Mar 22 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
- ↑ "Hashim Amla in World Cup squad; Reeza Hendricks, Chris Morris miss out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.
- ↑ "Amla edges out Hendricks to make South Africa's World Cup squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019.