டேவிட் மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேவிட் மில்லர்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
பிறப்பு 10 சூன் 1989 (1989-06-10) (அகவை 30)
தென்னாபிரிக்கா
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 98) பிப்ரவரி 24, 2011: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 7, 2015:  எ பாக்கித்தான்
சட்டை இல. 10
முதல் இ20ப போட்டி (cap 45) 20 May, 2010: எ West Indies
கடைசி இ20ப போட்டி 6 April, 2014:  எ India
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2008– Dolphins (squad no. 12)
2011– கிங்சு இலெவன் பஞ்சாபு
2012 Yorkshire
2013– Chittagong Kings
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரஇருபது20
ஆட்டங்கள் 68 46 137 31
ஓட்டங்கள் 1,539 2,275 3,185 540
துடுப்பாட்ட சராசரி 37.53 33.45 36.19 28.42
100கள்/50கள் 2/8 4/9 3/20 0/0
அதிகூடிய ஓட்டங்கள் 138* 149 138* 47
பந்து வீச்சுகள் 26
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் n/a –1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 26/– 42/– 54/– 19/–

மார்ச் 7, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

டேவிட் ஆண்ட்ரூ மில்லர் (David Andrew Miller, பிறப்பு: சூன் 10 1989), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் தென்னாப்பிரிக்க அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இவர் வலதுகை புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆவார். இவர் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணியின் முன்னாள் தலைவராக இருந்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்[தொகு]

2012[தொகு]

2012 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதில் 98 ஓட்டங்களை எடுத்தார். இவரின் அதிகபட்ச ஓட்டம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் எடுத்த 38 * ஓட்டங்கள் ஆகும். இவரின் சராசரி 32.66 ஆக இருந்தது.[1]

2013[தொகு]

2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி நிர்வாகம் இவரை 6 கோடிரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. அந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இவர் விளையாடினார்.

மே 6, 2013 இல் மொகாலியில் உள்ள பிந்த்ரா விளாயாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 101* ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் அதிவிரைவாக நூறு ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இவர் மூன்றாம் இடம் பெற்றார். இந்தப் போட்டியில் மில்லர் 41 ஓட்டங்கள் இருந்தபோது அவர் அடித்த பந்தை விராட் கோலி கேட்ச் பிடிக்கத் தவறினார்.[2] இவர் 12 போட்டிகளில் விளையாடி 418 ஓட்டங்களை எடுத்தார். இவரின் அதிகபட்ச ஓட்டம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் எடுத்த 101 * ஓட்டங்கள் ஆகும். இவரின் சராசரி 59.71 ஆக இருந்தது, இவரின் ஸ்டிரைக் ரேட் 164.56 ஆகும்.[1]

2014[தொகு]

2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார். சிறப்பாக பங்களித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல உதவினார். இவர் 16 போட்டிகளில் விளையாடி 446 ஓட்டங்களை எடுத்தார். இவரின் அதிகபட்ச ஓட்டம் 66 ஆகும். இவரின் சராசரி 44.60 ஆக இருந்தது, இவரின் ஸ்டிரைக் ரேட் 149.16 ஆகும்.[1]

2015[தொகு]

2015 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார். மே 9 , 2015 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆறு ஓட்டங்கள் அடித்த போது அந்தப் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவல்துறை அதிகாரியின் கண்ணில் அந்த பந்து பட்டது. பின் இதற்காக மில்லர் மன்னிப்பு கோரினார்.[3] இவர் 13 போட்டிகளில் விளையாடி 357 ஓட்டங்களை எடுத்தார். இவரின் அதிகபட்ச ஓட்டம் 86* ஆகும். இவரின் சராசரி 32.45 ஆக இருந்தது, இவரின் ஸ்டிரைக் ரேட் 134.21 ஆகும்.[1]

2016[தொகு]

2014 ஆம் ஆண்டில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதால் 2016 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி நிர்வாகம் இவரை தலைவராக நிர்ணயித்தது. ஆனால் அணித் தலைவராக இவரால் சிறப்பாக செயல்பட இயலவில்லை. இவரின் தலைமையில் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் அணி தோல்வியைத் தழுவியது. அதனால் அணித் தலைவராக முரளி விஜய் நியமனம் ஆனார்.[4]

ஆட்டநாயகன் விருது[தொகு]

வ எ எதிரணி இடம் ஆண்டு செயல்பாடு முடிவு
1 இலங்கை முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் 2013 85* (72 பந்துகள், 4x4, 5x6)  தென்னாப்பிரிக்கா 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.[5]
2 சிம்பாப்வே செடன் பார்க்,ஹமில்டன் 2015 138* (92 பந்துகள், 7x4, 9x6)  தென்னாப்பிரிக்கா 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.[6]
3 ஆத்திரேலியா டர்பன் துடுப்பாட்ட அரங்கம் 2016 118* (79 பந்துகள், 10x4, 6x6)  தென்னாப்பிரிக்கா 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.[7]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 (in en) IPLT20.com - Indian Premier League Official Website, https://www.iplt20.com/teams/kings-xi-punjab/squad/187/David-Miller/, பார்த்த நாள்: 2018-05-18 
  2. David Miller emulates Gayle to help Punjab annihilate RCB in IPL
  3. https://www.bbc.com/sport/0/cricket/32765150
  4. http://www.espncricinfo.com/indian-premier-league-2016/content/story/1006077.html
  5. "South Africa in Sri Lanka ODI Series, 2013 – 3rd ODI".
  6. "ICC Cricket World Cup, 2015 – 3rd match, Pool B".
  7. "Australia tour of South Africa, 3rd ODI: South Africa v Australia at Durban, Oct 5, 2016".

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_மில்லர்&oldid=2713857" இருந்து மீள்விக்கப்பட்டது