பென் ஸ்டோக்ஸ்
2014 ஆம் ஆண்டில் ஸ்டோக்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பெஞ்சமின் ஆண்ட்ரூ ஸ்டோக்ச் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 4 சூன் 1991 கிறைஸ்ட்சர்ச், நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 2 அங் (1.88 m)[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலத் துறையர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 658) | 5 டிசம்பர் 2013 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 மே 2018 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 221) | 25 ஆகஸ்டு 2011 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 17 சூலை 2018 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 55 (முன் 59) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–தற்போதுவரை | தர்ஹாம் மாகாணத் துடுப்பாட்டம் (squad no. 38) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015 | மெல்போர்ன் ரெனகட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 55) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | கேண்டர் பியூரி மாகாணத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போதுவரை | ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 55) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 19 சூலை 2018 |
பெஞ்சமின் ஆண்ட்ரூ ஸ்டோக்ஸ் (Benjamin Andrew Stokes பொதுவாக பென் ஸ்டோக்ஸ் என்று அறியப்படுகிறார்) (பிறப்பு: சூன் 4, 1991) இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் வீரரும் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் துணைத்தலைவரும் ஆவார். 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த இவர் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் நகரத்தில் பிறந்த இவர் தனது பன்னிரண்டாவது வயதில் வடக்கு இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்து அங்கிருந்த உள்ளூர் அணிகளின் சார்பாக துடுப்பாட்டம் விளையாடத் துவங்கினார்.[2] பன்முக ஆட்டக்காரரான இவர் வலதுகை விரைவு வீச்சாளரும் இடதுகை மட்டையாளரும் ஆவார்.[3]
பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக தேர்வுப் போட்டிகளில் அதிவேக இரட்டை நூறு, அதிவேக 250 மற்றும் 6-வது மட்டையாளரின் அதிகபட்ச ஓட்டங்கள் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்துள்ளார்.[4]. 30 சூலை 2021 அன்று ,துடுப்பாட்ட போட்டிகளில் இருந்து காலவரையின்றி ஓய்வு எடுப்பதாக இவர் அறிவித்தார் .
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]ஸ்டோக்சினுடைய தந்தை ஜெரார்டு ஸ்டோக்ஸ், ரக்பி கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரும் ஆவார். இவரின் தந்தை இங்கிலாந்திலுள்ள ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட காரணத்தினால் பென்ஸ் டோக்ஸ் இளம் வயதிலேயே தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்தனர்.[2] பின் 2013 ஆம் ஆண்டில் இவரின் பெற்றோர்கள் மீண்டும் நியூசிலாந்தில் உள்ள கிறைஸ்ட்சேர்ச்சில் குடிபெயர்ந்தனர்.[2]
உள்ளூர் போட்டிகள்
ஸ்டோக்ஸ் 2009 ஆம் ஆண்டில் தி ஓவலில் டர்ஹாமிற்காக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் . மற்றும் தொழில்முறை துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் நிறைவின் மூன்றாவது பந்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த மட்டையாளரான மார்க் ராம்பிரகாஷின் இழப்பினை கைப்பற்றினார். இவர் 2009 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் யு 19 க்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடினார். அதில் இவர் அரைசதம் அடித்தார் மற்றும் சில இழப்புகளை வீழ்த்தினார். பின்னர் இவர் 2010 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் விளையாடினார். இந்தத் தொடரின் போது இவர் இந்தியா யு 19 அணிக்கு எதிராக நூறு ஓட்டங்களை எடுத்தார்..
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் துடுப்பாட்ட அரங்கத்தில் மேரிலெபோன் துடுப்பாட்ட சங்க அணிக்கு எதிராக டர்ஹாம் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் 2010 ஆம் ஆண்டில் இவர் அறிமுகமானார். மே 13 அன்று ட்ரெண்ட் பிரிட்ஜில் நாட்டிங்ஹாம்ஷையருக்கு எதிராக தனது முதல் முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்.முதல் தர துடுப்பாட்டத்தில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதால் இவர் 2010 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆஷஸ் துடுப்பாட்டத் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றார்.
2 ஜனவரி 2015 அன்று, ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கின் மெல்போர்ன் ரெனிகேட்ஸில் சில போட்டிகளில் ஜெஸ்ஸி ரைடருக்கு மாற்றாக சேர்ந்தார்.
2 ஜனவரி 2015 அன்று, ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கின் மெல்போர்ன் ரெனிகேட்ஸில் சில போட்டிகளில் ஜெஸ்ஸி ரைடருக்கு மாற்றாக சேர்ந்தார்.
13 பிப்ரவரி 2017 அன்று, ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஜோ ரூட்டின் கீழ் அதே நாளில் இவர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
20 பிப்ரவரி 2017 அன்று, ஸ்டோக்ஸ் ஐபிஎல் லீக்கில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியினால் ரூ 14.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். . குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் டி 20 போட்டியில் நூறு ஓட்டங்களை எடுத்தார். 63 பந்துகளில் 7 நான்குகள் மற்றும் 6 ஆறு ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 103 *ஓட்டங்கள் எடுத்தார். தேசிய அணிக்காக திரும்புவதற்கு முன்பாக இவர் 14 போட்டிகளில் 3 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.2017 ஐபிஎல் பருவத்தில் இவரது பங்கெடுப்பிற்காக , கிரிகின்போ மற்றும் கிரிக்பஸ் ஐபிஎல் லெவன் பட்டியலில் இடம் பெற்றார்.
27 ஜனவரி 2018 அன்று, இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ₹ 12.5 கோடிக்கு (£ 1.7 மில்லியன்) ஏலத்தில் எடுத்தது. இவர் 2018 ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக இருந்தார்.
இங்கிலாந்து
ஸ்டோக்ஸ் ஆகஸ்ட் 2011 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமனார். பவுல் ஸ்டேர்லிங் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் இவருக்கு பந்துவீசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2011 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீசவும் மட்டையாடவும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சாதனைகள்
[தொகு]- குறைவான பந்துகளை சந்தித்து அதிவிரைவாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இரட்டை நூறுகள் அடித்த இரண்டாவது வீரர் ஆனார்.[5]
- தேர்வுத் துடுப்பாட்டப்போட்டிகளில் அதிவேக 250 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[6][7][8]
- தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு ஆட்டப்பகுதியில் அதிக ஆறுகள் அடித்தார். -11 ஆறுகள்.[9]
- ஆறாவது வீரராக களம் இறங்கி அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளார். - 258 ஓட்டங்கள்.[10]
- ஆறாவது வீரராக களம் இறங்கி ஜொனாதன் பேர்ஸ்டோவுடன் களம் இறங்கி 399 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[11]
சான்றுகள்
[தொகு]- ↑ "Ben Stokes". Sportism.net. Archived from the original on 27 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 1 May 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 Hoult, Nick (15 May 2009). "Durham's Ben Stokes wins generation game at the Oval". த டெயிலி டெலிகிராப். https://www.telegraph.co.uk/sport/cricket/international/england/10345278/England-all-rounder-Ben-Stokes-sees-star-rise-still-further-as-he-puts-Australia-shame-behind-him.html. பார்த்த நாள்: 5 July 2014.
- ↑ "County Championship on Twitter". பார்க்கப்பட்ட நாள் 14 September 2016.
- ↑ "Record List : Fastest hundreds in Test cricket (100s, 200s & 300s)". Fast Cricket.
- ↑ "Records / Test matches / Batting records / Fastest double hundreds". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
- ↑ "Statistics / Statsguru / Test matches / Batting records". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 22 September 2015.
- ↑ "South Africa v England at Cape Town, Jan 2–6, 2016". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 4 January 2016.
- ↑ "Ben Stokes hits fastest England double century in Tests". பிபிசி. 3 January 2016. https://www.bbc.com/sport/cricket/35216886. பார்த்த நாள்: 4 January 2016.
- ↑ "Records / Test matches / Batting records / *Most sixes in an innings". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 4 January 2016.
- ↑ "Records / Test matches / Batting records / Most runs in an innings (by batting position)". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 4 January 2016.
- ↑ "Records / Test matches / Partnership records / Highest partnerships by wicket". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 4 January 2016.