ஏய்ன்றிச் கிளாசென்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஏய்ன்றிச் கிளாசென் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 30 சூலை 1991 பிரிட்டோரியா, டிரான்சுவால் மாகாணம், தென்னாபிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக் காப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 339) | 19 அக்டோபர் 2019 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 8 மார்ச் 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 125) | 7 February 2018 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 2 ஏப்ரல் 2023 எ. நெதர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 45 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 75) | 18 பெப்ரவரி 2018 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 28 மார்ச் 2023 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 45 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011/12–தற்போது | நொதேர்ன்ஸ் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014/15–2020/21 | டைட்டன்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | ராஜஸ்தான் ராயல்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | டர்பன் ஹீட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2019 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | கயானா அமேசன் வாரியார்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022/23 | டர்பனின் சூப்பர் ஜயன்ட்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPN cricinfo, 2 April 2023 |
ஏய்ன்றிச் கிளாசென் (பிறப்பு: ஜூலை 30, 1991) ஒரு தென்னாப்பிரிக்க துடுப்பாட்டக்காரர். இவர் தென்னாப்பிரிக்க தேசிய துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். [1] 2015 ஆப்பிரிக்கா இருபது20 கோப்பைக்கான நொதேர்ன்ஸ் துடுப்பாட்ட அணியில் சேர்க்கப்பட்டார். [2] பிப்ரவரி 2021 இல், கிளாசென் முதல் முறையாக தென்னாப்பிரிக்க இருபது20 போட்டியொன்றில் அணித்தலைவராக விளையாடினர். [3] 21 மார்ச் 2023 அன்று, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில், கிளாசென் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை 54 பந்துகளில் அடித்தார்.
உள்ளூர் மற்றும் இருபது20 வாழ்க்கை
[தொகு]2 ஏப்ரல் 2018 அன்று, ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக இந்தியன் பிரீமியர் லீக் அணியான ராஜஸ்தான் ராயல்ஸில் கிளாசன் சேர்ந்தார். [4]
ஜூன் 2018 இல், 2018-19 பருவகாலத்துக்கான டைட்டன்ஸ் அணியில் கிளாசென் பெயரிடப்பட்டார். [5] அக்டோபர் 2018 இல், இம்சான்சி சூப்பர் லீக் இருபது20 போட்டியின் முதல் தொடரில் டர்பன் ஹீட் அணியில் அவர் இடம் பெற்றார். [6] [7]
டிசம்பர் 2018 இல், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்கள் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கிளாசெனை வாங்கியது. [8] [9] ஜூன் 2019 இல், அவர் 2019 குளோபல் இருபது20 கனடா போட்டியில் டொராண்டோ நேஷனல்ஸ் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [10] ஜூலை 2019 இல், யூரோ இ20 ஸ்லாம் துடுப்பாட்டப் போட்டியின் முதல் தொடரில் கிளாஸ்கோ ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [11] [12] இருப்பினும், அடுத்த மாதம் போட்டி கைவிடப்பட்டது. [13]
ஏப்ரல் 2021 இல், தென்னாப்பிரிக்காவில் 2021-22 கிரிக்கெட் பருவகாலத்துக்கு முன்னதாக, நொதேர்ன்ஸ் அணியில் கிளாசென் பெயரிடப்பட்டார். [14]
2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். [15]
பிப்ரவரி 2023 இல், கிளாசென் தென்னபிரிக்கா20 போட்டியில் இரண்டாவது சதத்தை அடித்தார், பிரிட்டோரியா கேபிடல்ஸுக்கு எதிராக டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்கள் எடுத்தார். மே 2023 இல், அவர் தனது முன்னாள் அணியான பெங்களூருக்கு எதிராக 51 பந்துகளில் 104 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் ஐபிஎல் சதத்தையும் பதிவு செய்தார். [16]
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]பிப்ரவரி 2017 இல், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் கிளாசென் பெயரிடப்பட்டார் எனினும் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. [17]
பிப்ரவரி 2018 இல், இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் பன்னாட்டு (ODI) அணியில், காயமடைந்த குயின்டன் டி காக்கிற்குப் பதிலாக கிளாசன் சேர்க்கப்பட்டார். அவர் 7 பிப்ரவரி 2018 அன்று இந்தியாவுக்கு எதிராக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் [18] இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 27 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்து, தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது முதல் சர்வதேச ஆட்ட நாயகன் விருதை வென்றார். [19]
அதே மாதத்தில், தென்னாப்பிரிக்கா பன்னாட்டு இருபது20 அணியிலும், இந்தியாவுக்கு எதிரான தொடரில் கிளாசன் இடம்பிடித்தார். அவர் 18 பிப்ரவரி 2018 அன்று இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார் பிப்ரவரி 21 அன்று, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தனது முதல் பன்னாட்டு இருபது20 அரைசதம் அடித்தார். தென்னாப்பிரிக்கா 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்தப் போட்டியில் அவர் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 69 ஓட்டங்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிப்ரவரி 2018 இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் தேர்வு அணியில் கிளாசென் பெயரிடப்பட்டார், ஆனால் விளையாடவில்லை. [20] ஆகஸ்ட் 2019 இல், காயம் அடைந்த ரூடி செக்கன்டினது இடத்திற்குப் பதிலாக, இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார். [21] [22] அவர் 19 அக்டோபர் 2019 அன்று இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவிற்காக தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[23] 29 பிப்ரவரி 2020 அன்று, கிளாசென் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 123 ஓட்டங்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். [24]
சனவரி 2021 இல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்கா பன்னாட்டு இருபது20 அணியின் தலைவராகக் கிளாசன் நியமிக்கப்பட்டார். [25] ஏப்ரல் 2021 இல், பாகிஸ்தானுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் சொந்தத் தொடரில், டெம்பா பவுமா காயம் காரணமாக வெளியேறியதால் பன்னாட்டு இருபது20 அணித்தலைவராக மீண்டும் கிளாசென் நியமிக்கப்பட்டார். [26] செப்டம்பர் 2021 இல், 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணியில் கிளாசன் இடம்பிடித்தார். [27]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Heinrich Klaasen". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 September 2015.
- ↑ Northerns Squad / Players – ESPNcricinfo. Retrieved 31 August 2015.
- ↑ "Favourites Pakistan gear up for T20 season against fresh-faced South Africa". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
- ↑ "Heinrich Klaasen joins Royals – Rajasthan Royals". www.rajasthanroyals.com. Archived from the original on 2 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Multiply Titans Announce Contracts 2018-19". Multiply Titans. Archived from the original on 16 June 2018. பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Mzansi Super League - full squad lists". Sport24. பார்க்கப்பட்ட நாள் 17 October 2018.
- ↑ "Mzansi Super League Player Draft: The story so far". Independent Online. பார்க்கப்பட்ட நாள் 17 October 2018.
- ↑ "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ "IPL 2019 Auction: Who got whom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
- ↑ "Global T20 draft streamed live". Canada Cricket Online. பார்க்கப்பட்ட நாள் 20 June 2019.
- ↑ "Eoin Morgan to represent Dublin franchise in inaugural Euro T20 Slam". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
- ↑ "Euro T20 Slam Player Draft completed". Cricket Europe. Archived from the original on 19 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Inaugural Euro T20 Slam cancelled at two weeks' notice". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
- ↑ "CSA reveals Division One squads for 2021/22". Cricket South Africa. Archived from the original on 20 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 20 April 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "IPL 2023 mini auction". Cricbuzz. https://www.cricbuzz.com/cricket-series/ipl-2023/auction/players/10209.
- ↑ "Heinrich Klaasen slams maiden IPL ton, fires SRH to 186/5 against RCB". Times of India. https://m.timesofindia.com/sports/cricket/ipl/top-stories/heinrich-klaasen-slams-maiden-ipl-ton-fires-srh-to-186/5-against-rcb/amp_articleshow/100336425.cms#amp_tf=From%20%251%24s&aoh=16844325455722&referrer=https%3A%2F%2Fwww.google.com.
- ↑ "Philander, Morkel return; wicketkeeper Klaasen called up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 February 2017.
- ↑ "3rd ODI (D/N), India tour of South Africa at Cape Town, Feb 7 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
- ↑ "South Africa beat India in rain-shortened game to keep series alive". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 February 2018.
- ↑ "Klaasen, Mulder in Test squad to face Australia". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/klaasen-mulder-in-sa-test-squad-to-face-australia-1137720.
- ↑ "Heinrich Klaasen replaces Rudi Second for South Africa's Tests against India". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 August 2019.
- ↑ "South Africa's Heinrich Klaasen hopeful of making first Test appearance in India series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
- ↑ "3rd Test, ICC World Test Championship at Ranchi, Oct 19-23 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.
- ↑ "Klaasen's unbeaten ton steers Proteas to 291". SA Cricket Mag. பார்க்கப்பட்ட நாள் 29 February 2020.
- ↑ "Klaasen to captain Proteas T20 squad to Pakistan". Cricket South Africa. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Hamstring injury rules Temba Bavuma out of Pakistan T20Is". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 9 April 2021.
- ↑ "T20 World Cup: South Africa leave out Faf du Plessis, Imran Tahir and Chris Morris". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.