உள்ளடக்கத்துக்குச் செல்

தெம்ப பவுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெம்ப பவுமா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தெம்ப பவுமா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 320)டிசம்பர் 26 2014 எ. மேற்கிந்தியத்தீவுகள்
கடைசித் தேர்வுசனவரி 22 2016 எ. இங்கிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008–தற்போதைய நேரம்Gauteng
2011–தற்போதைய நேரம்Lions
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தரத் ஏ-தர இ20
ஆட்டங்கள் 9 86 67 28
ஓட்டங்கள் 383 4,726 1,387 515
மட்டையாட்ட சராசரி 38.30 39.05 26.67 32.18
100கள்/50கள் 1/1 12/20 1/5 0/2
அதியுயர் ஓட்டம் 102* 162 108* 70
வீசிய பந்துகள் 158 3
வீழ்த்தல்கள் 3 0
பந்துவீச்சு சராசரி 39.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 45/– 15/– 12/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பெப்ரவரி 14 2016

தெம்ப பவுமா (பிறப்பு 17 மே 1990) தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் தேர்வு, ஒருநாள் அணியின் தற்போதைய தலைவரும், ப இ20 போட்டிகளின் மேனாள் தலைவரும் ஆவார். இவர் ஒரு வலது கை நடுத்தர வரிசை மட்டையாளர் ஆவார். தென்னாப்பிரிக்க அணிக்காகத் தேர்வுப் போட்டிகளில் நூறு ஓட்டங்கள் எடுத்த முதல் தென்னாபிரிக்க வீரரும், தலைவருமாவார்.[1] [2] அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்த மூன்று வீரர்களில் இவரும் ஒருவராவார். செப்டம்பர் 2016-இல் அயர்லாந்துக்கு எதிராக 113 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றார்.[3] இவரது தலைமையில், தென்னாப்பிரிக்கா அணி 2025 உலக தேர்வுத் துடுப்பட்ட வாகையாளர் கிண்ண இறுதிப் போட்டியில் வென்றது. இது, ஐசிசி தொடர்களில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அணி பெற்ற வெற்றியாகும்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

லங்காவின் தீவிரமான துடுப்பாட்டக் கலாச்சாரத்தில் வளர்ந்த பவுமா, தாமி சொல்கைல், மாலுசி சிபோடோ ஆகியோர் அனைவரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்களாவர். பவுமா , நியூலேண்ட்ஸில் உள்ள தென்னாப்பிரிக்கக் கல்லூரியின் இளையோர் பள்ளியிலும் [4] சாண்ட்டனில் உள்ள ஆண்கள் உயர்நிலைப் பள்ளியான செயிண்ட் டேவிட் மாரிஸ்ட் இனாண்டாவிலும் கல்வி பயின்றார்.

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

தெம்ப பவுமா 2008-ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திற்கு எதிரான போட்டியில் கவுடெங் அணிக்காக அறிமுகமானார். மத்திய கள வீரராகக் களிமிறங்கிய இவர் முதல் ஆட்டப் பகுதியில் நான்கு ஓட்டங்கள் எடுத்தார்.

2010/11 ஆண்டில் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். சூப்பர்ஸ்போர்ட் தொடரில், இந்த முதல் பருவத்தில் 4 போட்டிகளில் 60.50 சராசரியுடன் 242 ஓட்டங்கள் எடுத்தார். இதில் நைட்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 124 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். [5] [6]

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]
Bavuma and Starc
2016 ஆம் ஆண்டு அடிலெய்டு ஓவலில் ஆத்திரேலியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான 3வது தேர்வுப் போட்டியின் போது பவுமாவுக்கு மிட்செல் ஸ்டார்க் பந்து வீசுகிறார்.

பவுமா டிசம்பர் 26, 2014 -இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவுக்காக தேர்வுத் துடுபாட்டப் போட்டியில் அறிமுகமானார். [7]

சனவரி 5, 2016-இல், 2015/16 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்த முதல் கருப்பின தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனை படைத்தார். [8]

ஒருநாள்

[தொகு]

செப்டம்பர் 25, 2016-இல் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். அறிமுகமான போட்டியிலேயே நூறு ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம், தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான போட்டியிலேயே நூறு ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆவார். [9] [10]

அணித் தலைவராக

[தொகு]

மார்ச் 4, 2021 -இல், தென்னாப்பிரிக்காவின் வரையறுக்கப்பட்ட நிறைவுகள் கொண்ட போட்டித் தொடருக்கான அணித் தலைவராக பவுமா நியமிக்கப்பட்டார். இவர், குயின்டன் டி காக்கிடமிருந்து தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். [11] இதன்மூலம், தென்னாப்பிரிக்க அணியின் நிரந்தரத் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் கருப்பு ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார். [12] [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Temba Bavuma wants to be more than South African cricket's first black African captain". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2021-07-04.
  2. "South Africa name Dean Elgar Test captain and Temba Bavuma ODI and T20I captain". ESPN Cricinfo. Retrieved 4 March 2021.
  3. "Bavuma ton sets up crushing 206-run win". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2021-07-24.
  4. "Bavuma inspires school assembly". Sport24. 14 January 2016. Retrieved 5 January 2021.
  5. "Knights v Lions at Bloemfontein, Jan 20–23, 2011 – Cricket Scorecard – ESPN Cricinfo". espncricinfo.com. Retrieved 7 November 2016.
  6. "Cricket Records – Records – SuperSport Series, 2010/11 – Lions – Batting and bowling averages – ESPN Cricinfo". espncricinfo.com. Retrieved 7 November 2016.
  7. "West Indies tour of South Africa, 2nd Test: South Africa v West Indies at Port Elizabeth, Dec 26–30, 2014". ESPN Cricinfo. Retrieved 26 December 2014.
  8. Hopps, David (5 January 2016). "Historic Bavuma ton helps SA achieve parity". ESPNcricinfo (ESPN Sports Media). https://www.espncricinfo.com/series/england-tour-of-south-africa-2015-16-800431/south-africa-vs-england-2nd-test-800463/match-report-4. பார்த்த நாள்: 5 January 2021. 
  9. "Ireland tour of South Africa, Only ODI: South Africa v Ireland at Benoni, 25 Sep 2016". ESPN Cricinfo. Retrieved 25 September 2016.
  10. Moonda, Firdose (25 September 2016). "Bavuma ton sets up crushing 206-run win". ESPNcricinfo. Archived from the original on 26 September 2016. Retrieved 25 September 2016.
  11. "South Africa name Dean Elgar, Temba Bavuma as new captains". www.icc-cricket.com (in ஆங்கிலம்). Retrieved 2021-07-25.
  12. "South Africa name Dean Elgar Test captain and Temba Bavuma ODI and T20I captain". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2021-07-25.
  13. "SA name Dean Elgar, Temba Bavuma as new captains". cricket.yahoo.net. Retrieved 2021-07-25.

வெளி இணைப்பு

[தொகு]

தெம்ப பவுமா கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெம்ப_பவுமா&oldid=4293183" இலிருந்து மீள்விக்கப்பட்டது