சதாப் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சதாப் கான்

சதாப் கான் (Shadab Khan பிறப்பு: அக்டோபர் 4, 1998) ஒரு பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். மேலும் இவர் முதல் தரத் துடுப்பாட்டம் , பட்டியல் அ துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டில் தனது பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் 2016 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச அளவில் பாக்கித்தான் அணியின் சார்பாக விளையாடினார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 1,603 ஓட்டங்களையும் , பட்டியல் அ போட்டிகளில் 2,333 ஓட்டங்களையும் எடுத்தார். மேலும் இவர் 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணி , பாக்கித்தான் அ அணி சார்பாகவும் இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார். .[1] பாகிஸ்தானின் வடமேற்கு பஞ்சாபில் உள்ள மியான்வாலி என்ற நகரத்தில் பிறந்தார். ஆகஸ்ட் 2018 இல், பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் 2018–19 ஆண்டிற்கான மைய ஒப்பந்தத்தை வழங்கிய முப்பத்து மூன்று வீரர்களில் ஒருவராக இருந்தார்.[2][3]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

2016 ஆம் ஆண்டில் இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2016 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் இவர் தொடரில் இவர் விளையாடினார். சூலை 10, வோர்செஸ்டர் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இலங்கை அ துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 8 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 68 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்து பதிரானா பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார்.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 17 ஓவர்கள் வீசி 89 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசி 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அ அணி 8 இலக்குகளில் வெற்றி பெற்றது.[4]

பட்டியல் அ[தொகு]

2016 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 2016 இல் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். ஏப்ரல் 20, பைசாலாபத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற கைபர் பக்துன்வா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 6 ஓவர்கள் வீசி 43 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 29 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இஸ்லாமாபாத் துடுப்பாட்ட அணி இரண்டு இலக்குகளால் வெற்றி பெற்றது.[5]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

இவர் ஏப்ரல் 7, 2017 அன்று மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக பாகிஸ்தானுக்காக தனது ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[6] இவர் ஏப்ரல் 30, 2017 அன்று பாகிஸ்தானுக்காக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[7] அவர் பாகிஸ்தானின் 2017 வாகையாளர் கோபை வென்ற அணியில் இவர் இடம் பெற்றார். செப்டம்பர் 2017 ஆம் ஆண்டில் இவர் பி.சி.பியின் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[8]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாப்_கான்&oldid=3203542" இருந்து மீள்விக்கப்பட்டது