உள்ளடக்கத்துக்குச் செல்

நிதின் மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிதின் மேனன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நிதின் நரேந்தி மேனன்
பிறப்பு2 நவம்பர் 1983 (1983-11-02) (அகவை 40)
இந்தோர், மத்தியப் பிரதேசம்
மட்டையாட்ட நடைவலது கை
பங்குஇலக்குக் கவனிப்பாளர், நடுவர்
உறவினர்கள்நரேந்தி மேனன் (அப்பா)
நடுவராக
தேர்வு நடுவராக3 (2019–2020)
ஒநாப நடுவராக24 (2017–2019)
இ20ப நடுவராக16 (2017–2020)
மூலம்: ESPN Cricinfo, 28 சனவரி 2020

நிதின் மேனன் (Nitin Menon) (பிறப்பு: நவம்பர் 2, 1983) இவர் இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இப்போது நடுவராக இருக்கிறார்.[1] இவர் மத்தியப் பிரதேச துடுப்பாட்ட அணிக்காக விளையாடியவர். பட்டியல் அ துடுப்பாட்டம் மத்திய பிரதேசத்தை விளையாடியவர். மேலும் 2015–16 ரஞ்சி கோப்பை [2] மற்றும் ஆத்திரேலியாவில் நடந்த செல்பீல்ட் கோப்பை போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளார். [3] சூன் 2020 இல், நைஜல் லோங்க்கு பதிலாக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவிற்கு பதவி உயர்வு பெற்றார். [4] இவரது தந்தை நரேந்திர மேனனும் ஒரு நடுவராக இருந்தார்.

நடுவராக

[தொகு]

26 சனவரி 2017 அன்று இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் நடுவராக செயல்பட்டார். [5] 15 மார்ச் 2017 அன்று ஆப்கானித்தான், அயர்லாந்து இடையிலான தனது முதல் ஒருநாள் பன்னாடடுத் துடுப்பாட்டப் போட்டியில் நடுவராக செயல்பட்டார். [6]

அக்டோபர் 2018 இல் 2018 பன்னாட்ட்சு மகளிர் உலக இருபதுக்கு 20 பன்னிரண்டு ஆன்-பீல்ட் நடுவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.[7] இயன் கூல்ட் உடன் இணைந்து 2019இல் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் நடுவராக செயல்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Youngest umpire on Emirates ICC Elite Panel of Umpires, Nitin Menon targets consistency". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 29 June 2020.
  2. "Ranji Trophy, Group B: Baroda v Punjab at Vadodara, Nov 15-18, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 November 2015.
  3. "Sheffield Shield, 21st Match: South Australia v Victoria at Adelaide, Feb 14-17, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
  4. "Nitin Menon included in Elite panel of umpires for 2020-21". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 June 2020.
  5. "England tour of India, 1st T20I: India v England at Kanpur, Jan 26, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 January 2017.
  6. "Afghanistan tour of India, 1st ODI: Afghanistan v Ireland at Greater Noida, Mar 15, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017.
  7. "11th team for next month's ICC Women's World T20 revealed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 October 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதின்_மேனன்&oldid=3803839" இலிருந்து மீள்விக்கப்பட்டது