ராசி வான் டெர் டசென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராசி வான் டெர் டசென்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹென்ட்ரிக் எராஸ்மஸ் வான் டெர் டசென்
பிறப்பு7 பெப்ரவரி 1989 (1989-02-07) (அகவை 32)
பிரிட்டோரியா, டிரான்ஸ்வால் மாகாணம், தென்னாப்பிரிக்கா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை நேர் விலகு
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 342)26 டிசம்பர் 2019 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 131)19 ஜனவரி 2019 எ பாக்கித்தான்
கடைசி ஒநாப6 ஜூலை 2019 எ ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 78)9 அக்டோபர் 2018 எ சிம்பாப்வே
கடைசி இ20ப22 செப்டம்பர் 2019 எ இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–தற்போதுஹெவெல்ட் லயன்ஸ்
2012நார்த் வெஸ்ட்
2008–2011டைட்டன்ஸ்
2018ஜோசி ஸ்டார்ஸ்
2018சென்ட் கிட்டிஸ் அண்ட் நெவிஸ் பாட்ரியட்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 1 18 114 106
ஓட்டங்கள் 57 664 7,427 3,892
மட்டையாட்ட சராசரி 28.50 73.77 44.20 47.46
100கள்/50கள் 0/1 0/7 16/42 8/23
அதியுயர் ஓட்டம் 51 95 175 134*
வீசிய பந்துகள் 317 132
வீழ்த்தல்கள் 4 4
பந்துவீச்சு சராசரி 54.50 20.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/39 2/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 9/– 69/– 37/–
மூலம்: Cricinfo, 30 டிசம்பர் 2019

ஹென்ட்ரிக் " ராசி " வான் டெர் டஸ்ஸன் (பிறப்பு: பிப்ரவரி 7, 1989) ஒரு தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர். இவர் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக பன்னாட்டுப் போட்டிகளிலும் உள்ளூர்ப் போட்டிகளில் ஹைவெல்ட் லயன்ஸ் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடி வருகிறார். [1] 2018 தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட ஆண்டுவிழாவில், இவர் ஆண்டின் ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.[2][3] ஆகஸ்ட் 2019இல், கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் விருது வழங்கும் விழாவில் ஆண்டின் பன்னாட்டு ஆண்கள் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டார்.[4][5] அதே மாதத்தின் பிற்பகுதியில், கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அவருக்கு 2019–20 பருவத்துக்கான மைய ஒப்பந்தத்தை வழங்கியது. [6]

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

செப்டம்பர் 2018இல், சிம்பாப்வேக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் பன்னாட்டு இருபது20 (இ20ப) தொடருக்கான அணியில் இவர் இடம்பெற்றார்.[7] அதைத்தொடர்ந்து 9 அக்டோபர் 2018 அன்று நடந்த சிம்பாப்வேக்கு எதிராக போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக இ20ப போட்டிகளில் அறிமுகமானார். [8] 2019 ஜனவரியில், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் பன்னாட்டு (ஒநாப) அணியில் இவர் இடம்பெற்றார்.[9] பிறகு ஜனவரி 19, 2019 அன்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக ஒநாப போட்டிகளில் அறிமுகமானார்.[10] அறிமுகப் போட்டியில், வான் டெர் டசென் தனது முதல் ஒருநாள் நூறைப் பெற ஏழு ஓட்டங்கள் குறைவாக இருந்த நிலையில் 93 ஓட்டங்களுக்கு வீழ்ந்தார்.[11] மூன்று நாட்களுக்குப் பிறகு கிங்ஸ்மீட் அரங்கில் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்கள் எடுத்தார். ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இவர் மொத்தம் 241 ஓட்டங்கள் எடுத்து 120.5 என்ற சராசரியுடன் தொடரை முடித்தார். [1]

மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் வான் டெர் டசென் தக்கவைக்கப்பட்டார். நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இவர் ஒரு அரைநூறு உட்பட 112 ஓட்டங்கள் எடுத்து 56 என்ற சராசரியுடன் தொடரை முடித்தார்.[1][12] ஏப்ரல் 2019இல், 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்காவின் அணியில் இடம்பெற்றார்.[13][14] 2019 டிசம்பரில், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான தென்னாப்பிரிக்காவின் தேர்வு அணியில் அவர் இடம் பெற்றார்.[15] இவர் டிசம்பர் 26, 2019 அன்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.[16]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசி_வான்_டெர்_டசென்&oldid=2883958" இருந்து மீள்விக்கப்பட்டது