பகர் சமான் (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஃபகர் சமான் (Fakhar Zaman (உருது: فخر زمان, பஷ்தூ: فخر زمان; பிறப்பு: ஏப்ரல் 10, 1990) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் முன்னாள் பாக்கித்தானிய கப்பற்படை அதிகாரி ஆவார்[1] .இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் அபோதாபாத் ஃபால்கன்ஸ், ஹபிப் வங்கி லிமிடட், கராச்சி புளூஸ், கராச்சி டால்பின்ஸ், கராச்சி செப்ராஸ், கைபர் பக்துன்வா, லாகூர் கலாந்தர்ஸ், மற்றும் பெஷாவர் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[2] சூலை 2018 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் சார்பாக ஒருநாள் போட்டியில் இரண்டு நூறுகள் அடித்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்[3]. சூலை 22 இல் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 1,000 ஓட்டங்களை அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார்.[4] ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[5][6]

சர்வதேச போட்டிகள்[தொகு]

2017 மேற்கிந்தியத் தொடர்[தொகு]

2017 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்தது.[7] அந்தத் தொடருக்கான பாக்கித்தான் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. மார்ச் , 2017 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் இவர் அறிமுகமானார்.[8]

2017 வாகையாளர் கோப்பை[தொகு]

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2017 வாகையாளர் கோப்பைக்கான தொடரில் இவருக்கு இடம் கிடைத்தது. சூன் 7, 2017 இல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 31 ஓட்டங்கள் அடித்தார். இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓட்டங்களாக இருந்த போது குச்சக் காப்பாளரிடம் கேட்சானது. ஆனால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது[9]. அதனைப் பயன்படுத்தி அந்தப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் வாகையாளர் கோப்பை இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[10] அணியின் மொத்த ஓட்டங்கள் 338 ஆக உதவி செய்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 180 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் முறையாக வாகையாளர் கோப்பையினைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினை ஃபகர் சமான் பெற்றார்.[11] இவரும் அசார் அலியும் முதல் இலக்கிற்கு 128 ஓட்டங்கள் எடுத்தனர். இதன்மூலம் வாகையாளர் கோப்பைக்கான போட்டித் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த பாக்கித்தானிய இணை எனும் சாதனையையும் 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக ஓட்டங்கள் அடித்த இணை ஆகிய சாதனைகளைப் படைத்தனர்.[12][13]

2018 – மூன்று நாடுகளுக்கு இடையேயான தொடர்[தொகு]

சூலை 8, 2018 இல் அராரேவில் நடைபெற்ற மூன்று நாடுகளுக்கு இடையேயான தொடரின் இறுதிப் போட்டியில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 91 ஓட்டங்கள் அடித்து அணியினை கோப்பை வெல்வதற்கு உதவினார்.[14][15] இந்தத் தொடரில் ஒரே ஆண்டில் பன்னாட்டு இருபது 20 போட்டியில் 500 க்கும் அதிகமான ஓட்டங்கள் அடித்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[16]

சான்றுகள்[தொகு]

 1. "Meet the new faces in the Pakistan Test squad". International Cricket Council. பார்த்த நாள் 22 May 2018.
 2. "Fakhar Zaman". ESPN Cricinfo. பார்த்த நாள் 1 November 2015.
 3. "Fakhar Zaman - from king of Katlang to pride of Pakistan". ESPNcricinfo. பார்த்த நாள் 21 July 2018.
 4. "Zaman breaks 38-year-old record". The Express Tribune. பார்த்த நாள் 22 July 2018.
 5. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்த்த நாள் 6 August 2018.
 6. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்த்த நாள் 6 August 2018.
 7. "Kamran Akmal returns to Pakistan ODI and T20I squads". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/west-indies-v-pakistan-2017/content/story/1086781.html. பார்த்த நாள்: 15 March 2017. 
 8. "Pakistan tour of West Indies, 2nd T20I: West Indies v Pakistan at Port of Spain, Mar 30, 2017". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/1077948.html. பார்த்த நாள்: 30 March 2017. 
 9. "Zaman feared he would miss final". ESPNcricinfo. பார்த்த நாள் 19 June 2017.
 10. "Fakhar Zaman rewarded for his risk". ESPNcricinfo. பார்த்த நாள் 19 June 2017.
 11. "New champions: Zaman, Amir and Pakistan raze India for title". ESPNcricinfo. பார்த்த நாள் 19 June 2017.
 12. "Zaman, Ali help Pakistan storm into Champion's Trophy final". ESPNcricinfo. பார்த்த நாள் 19 June 2017.
 13. "ICC Champions Trophy 2017: Fakhar Zaman and Azhar Ali record highest ODI opening run stand for Pakistan since 2009" (in en-US). The Indian Express. 14 June 2017. http://indianexpress.com/article/sports/cricket/england-vs-pakistan-fakhar-zaman-and-azhar-ali-record-highest-opening-run-stand-in-champions-trophy-4704442/. 
 14. "Fakhar Zaman's 91 seals record chase to give Pakistan the title". ESPN Cricinfo. பார்த்த நாள் 8 July 2018.
 15. "'A great team effort' – Sarfraz Ahmed". International Cricket Council.
 16. "Fakhar becomes first Pakistani to score 500 T20I runs in calendar year". GEO Tv. பார்த்த நாள் 8 July 2018.

வெளியிணைப்புகள்[தொகு]

கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: பகர் சமான் (துடுப்பாட்டக்காரர்)