சகீன் அஃப்ரிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சகீன் ஷா அஃப்ரிடி (Shaheen Shah Afridi (உருது: شاہین آفریدی; பஷ்தூ: شاهین اپریدی; பிறப்பு: ஏப்ரல்6, 2000) என்பவர் பாக்கித்தானியத் துடுப்பட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காகத் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1][2] இவர் மணிக்கு 90கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடிய திறன் பெற்றவராக அறியப்படுகிறார்[3]. இவர் துடுப்பாட்டத்தில் சகலத் துறையராக அறியப்படுகிறார்.[4][5] ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[6][7]

உள்ளூர்ப் போட்டிகள்[தொகு]

டிசம்பர் 2016 இல் 2016 ஆம் ஆண்டில் ஆசியக் கோப்பை தொடரில் 19 வயதிற்கு உட்பட்ட பாக்கித்தான் அணியில் இவர் இடம்பெற்றார்.[8] சிங்கப்பூர் அணிக்கு எதிரான் முதல் போட்டியில் 27 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 9 இலக்குகளில் வெற்றி பெற்றார் [9]

செப்டம்பர் 2017 இல் வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் தாக்கா டைனமைட்ஸ் அணிக்காக இவர் விளையாட ஒப்பந்தம் ஆனார்.[2][10][11] பின் 2017-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குவைத்-இ-அசாம் தொடரில் கான் ரிசர்ச் லேபாரடரீஸ் அணிக்காக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[12] இதன் இரண்டாவது போட்டியில் 39 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார்.[13] இதன் மூலம் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது.[5][14]

2017 ஆம் ஆண்டில் டிசம்பரில் 19 வயதிர்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்டத் தொடரில் இவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைத்தது[15]. இந்தத் தொடரில் 12 இலக்குகளைக் கைப்பற்றினார்.[16] இதன்மூலம் அதிக இலக்குகளைக் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். அதே ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் என அறிவித்தது.[17]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் சூப்பர் லீக் தொடரில் இவர் லாகூர் கலாந்தர்ஸ் அணிக்காக இவர் இருபது 20 போட்டிகளில் அறிமுகமானார்.[18] அதற்கு அடுத்த தொடரில் முல்தான் சுல்தான் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் லாகூர் அணி 6 இலக்குகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.[19][20]

2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் கோப்பைத் தொடரில் பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) அணியில் இடம்பெற்றார்.[21][22] ஏப்ரல் 25, 2018 இல் பலூசிஸ்தான் அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[23]

சர்வதேசப் போட்டிகள்[தொகு]

2018 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் இவர் அறிமுகமானார்.[24][25] ஏப்ரல் 3 இல் தனது முதல் போட்டியில் விளையாடினார்[26]. ஆசியக் கிண்ணம் 2018 இல் பாக்கித்தான் அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. செப்டம்பர் 21 இல் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[27].[28][29]

2018 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார்.[30]

சான்றுகள்[தொகு]

  1. "Shaheen Afridi". ESPN Cricinfo. பார்த்த நாள் 26 September 2017.
  2. 2.0 2.1 Abdul Ghaffar (10 September 2017). "Khyber Agency's Shaheen Shah signed by Dhaka Dynamites". Dawn. https://www.dawn.com/news/1356815. பார்த்த நாள்: 28 September 2017. 
  3. யூடியூபில் Shaheen Shah Afridi - 6 foot 6 inch 17-year-old Pakistani fast-bowling talent who bowls 90MPH, 25 July 2017
  4. "Talent Spotter: Shaheen Shah Afridi (interview, video etc)". PakPassion (31 July 2017). பார்த்த நாள் 15 October 2017.
  5. 5.0 5.1 Farooq, Umar (29 September 2017). "Shaheen Afridi: the Quaid-e-Azam Trophy's new sensation". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/story/_/id/20848833/quaid-e-azam-trophy-new-sensation. பார்த்த நாள்: 15 October 2017. 
  6. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்த்த நாள் 6 August 2018.
  7. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்த்த நாள் 6 August 2018.
  8. "Tribal player selected for U-19 cricket team". Business Recorder. 5 December 2016. http://fp.brecorder.com/2016/12/20161205110297/. பார்த்த நாள்: 28 September 2017. 
  9. "U19 Asia Cup: Pakistan begin campaign by routing Singapore". Express Tribune. 15 December 2016. https://tribune.com.pk/story/1264216/u19-asia-cup-pakistan-begin-campaign-routing-singapore/. பார்த்த நாள்: 28 September 2017. 
  10. Lakhani, Faizan (10 September 2017). "From Khyber Agency to Dhaka Dynamites: Talented Shaheen Shah signs two-year contract". Geo TV. https://www.geo.tv/latest/157469-talented-shaheen-shah-signs-two-year-deal-with-dhaka-dynamites. பார்த்த நாள்: 28 September 2017. 
  11. "BPL team rosters: Who is playing where". The Daily Star (Bangladesh). 17 September 2017. http://www.thedailystar.net/sports/bangladesh-cricket/bpl-tearm-rosters-who-playing-where-1463437. பார்த்த நாள்: 28 September 2017. 
  12. "Pool B, Quaid-e-Azam Trophy at Rawalpindi, Sep 26-29 2017". ESPN Cricinfo. பார்த்த நாள் 26 September 2017.
  13. "Preview: Afghanistan U19 v Pakistan U19". International Cricket Council. பார்த்த நாள் 12 January 2018.
  14. "Shaheen Afridi follows in some famous footsteps". International Cricket Council. பார்த்த நாள் 10 January 2018.
  15. "Hasan Khan to lead Pakistan Under-19s at World Cup". ESPN Cricinfo. பார்த்த நாள் 5 December 2017.
  16. "ICC Under-19 World Cup, 2017/18 - Pakistan Under-19s: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்த்த நாள் 3 February 2018.
  17. "U19CWC Report Card: Pakistan". International Cricket Council. பார்த்த நாள் 5 February 2018.
  18. "3rd Match (N), Pakistan Super League at Dubai, Feb 23 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 23 February 2018.
  19. "Shaheen Afridi's 5 for 4 ends Lahore's losing streak". ESPN Cricinfo. பார்த்த நாள் 9 March 2018.
  20. "20th Match (D/N), Pakistan Super League at Dubai, Mar 9 2018 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 9 March 2018.
  21. "Pakistan Cup one-day tournament to begin in Faisalabad next week". Geo TV. பார்த்த நாள் 21 April 2018.
  22. "Pakistan Cup Cricket from 25th". The News International. பார்த்த நாள் 21 April 2018.
  23. "(D/N)Pakistan Cup at Faisalabad, Apr 25 2018". பார்த்த நாள் 25 April 2018.
  24. "Asif Ali, Talat and Shaheen Afridi picked for WI T20Is". ESPN Cricinfo. பார்த்த நாள் 26 March 2018.
  25. "Afridi, Talat, Ali bring gush of youth to Pakistan". International Cricket Council. பார்த்த நாள் 28 March 2018.
  26. "3rd T20I, West Indies tour of Pakistan at Karachi, Apr 3 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 3 April 2018.
  27. "2nd Match, Super Four, Asia Cup at Abu Dhabi, Sep 21 2018". ESPN Cricinfo. பார்த்த நாள் 21 September 2018.
  28. "Shaheen Afridi included in Pakistan squad for Asia Cup 2018". International Cricket Council. பார்த்த நாள் 4 September 2018.
  29. "The rapid rise of Shaheen Shah Afridi". International Cricket Council. பார்த்த நாள் 5 September 2018.
  30. "Uncapped Shaheen Afridi, Saad Ali in Pakistan squad for New Zealand Tests". ESPN Cricinfo. பார்த்த நாள் 10 November 2018.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீன்_அஃப்ரிடி&oldid=2714353" இருந்து மீள்விக்கப்பட்டது