மெஹதி ஹசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெஹதி ஹசன் மிராஸ் (Mehedy Hasan Miraz (பிறப்பு:25 அக்டோபர்,1997) வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஒரு சகலத் துறையர் ஆவார்.வ்லது கை மட்டையாளரான இவர் வலது கை புறத்திருப்பப் பந்து வீச்சாளரும் ஆவார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மிராஸ் பரிசல் எனும் இடத்தில் பிறந்தார். தனது இளம்வயதிலேயே தனது குடும்பத்தினருடன் குல்னாவிற்கு இடம்பெயர்ந்தார்.[3] குல்னா நகரில் உள்ள கலிஸ்பூர் இடத்தில் வளர்ந்து வந்தார்.[4] எட்டாவது வயது முதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார்.[5] கசிப்பூர் துடுப்பாட்ட அகாதமியில் இவர் பயிற்சி பெற்றார். பதினான்கு வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.[5]

2016 ,19 வயதிற்குகு உட்பட்டோருக்கான உலகக் கிண்னம்[தொகு]

டிசம்பர் , 2015 ஆம் ஆண்டில் , 2016 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த 19 வயதிற்குகு உட்பட்டோருக்கான உலகக் கிண்னத் தொடரில் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.[6] அந்தத் தொடரில் அரையிறுதி வரை சென்றனர். ஆனால் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியிடம் தோல்வியடைந்தனர். 3 ஆவது இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியினை 3 இலக்குகளால் வெற்றி பெற்றது.[7] இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்றார். விளையாடிய ஆறு போட்டிகளில் 242 ஓட்டங்கள் எடுத்து 12 இலக்குகளையும் வீழ்த்தினார்.[8][9][10]

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

19 வயதிற்குகு உட்பட்டோருக்கான உலகக் கிண்னத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தேர்வுத் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். அக்டோபர் 20, 2016 இல் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமனார். வலதுகை புறத் திருப்ப பந்துவீச்சாளராக இருந்தபோதிலும் இவர் துவக்க வீரராக பந்துவீசினார்[11]. இங்கிலாந்து அணியின் அரிமுக வீரராக களம் இறங்கிய பென் டக்கட்டின் இலக்கினை இவர் வீழ்த்தினார். இவரின் அறிமுகப்போட்டியில் 5 இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் மிக இளம்வயதில் இந்தச் சாதனையைப் புரிந்த வங்காளதேச வீரர் மற்றும் சர்வதேச அளவில் ஏழாவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[12] இரணடாவது போட்டியில் 5 இலக்கினை வீழ்த்தியதன் மூலம் முதல் இரு போட்டிகளில் மூன்று முறை ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் 19 இலக்குகளைக் கைப்பற்றி தொடர்நாயகன் விருதினைப் பெற்றார். இதன்மூலம் அறிமுகப்போட்டியில் தொடர் நாயகன் விருதினைப் பெறும் முதல் வங்காளதேச வீரர் மற்றும் சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[13][14][15]

ஒருநாள் போட்டி[தொகு]

திசெம்பர், 2016 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடருக்கான வங்காளதேசத் துடுப்பாட்ட அணியில் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை[16]. மார்ச், 2017 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றார்[17]. மார்ச் 25, 2017 இல் ரன்கிரி தம்புலா அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். குசல் மெண்டிசு இலக்கினை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் 10 ஒவர்கள் வீசி 43 இலக்குகளை விட்டுக்கொடுத்து 2 இலக்குகளை வீழ்த்தினார்.

பன்னாட்டு இருபது20[தொகு]

ஏப்ரல், 2017 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[18] ஏப்ரல் 6, 2017 இல் தனது முதல் போட்டியில் விளையாடினார்.[19]

சான்றுகள்[தொகு]

  1. "The Home of CricketArchive". cricketarchive.com. July 9, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Mehedi Hasan". ESPN Cricinfo. 9 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The smiling assassin". The Daily Star. October 31, 2016. http://www.thedailystar.net/sports/cricket/england-vs-bangladesh-2016/the-smiling-assassin-1306948. பார்த்த நாள்: 3 November 2016. 
  4. "PM orders building of house for Miraz". Daily Sun. November 3, 2016. Archived from the original on நவம்பர் 4, 2016. https://web.archive.org/web/20161104075631/http://www.daily-sun.com/printversion/details/180487/PM-orders-building-of-house-for-Miraz. பார்த்த நாள்: November 4, 2016. 
  5. 5.0 5.1 "নতুন ক্রিকেট তারকা: কে এই মেহেদী হাসান মিরাজ?". BBC Bangla. 31 October 2019. http://www.bbc.com/bengali/news-37819987. பார்த்த நாள்: 3 November 2016. 
  6. "Mehedi Hasan to lead Bangladesh at U19 WC". ESPNCricinfo. 23 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Bangladesh ace tense chase to secure third place". ESPNCricinfo. 13 February 2016. 14 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Most wickets". ESPNCricinfo. 11 February 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 February 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  9. "Most runs". ESPNCricinfo. 8 February 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 February 2016 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
  10. "ICC Under-19 World Cup, Final: India Under-19s v West Indies Under-19s at Dhaka, Feb 14, 2016". ESPNCricinfo. 14 February 2016. 14 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
  11. "England tour of Bangladesh, 1st Test: Bangladesh v England at Chittagong, Oct 20 ,2016". http://www.espncricinfo.com/ci/engine/match/1029825.html. பார்த்த நாள்: 20 October 2016. 
  12. "Mehedi continues a debut trend, Bairstow's record year". ESPN Cricinfo. 20 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  13. "England's collapse and Mehedi's record series debut". ESPN Cricinfo. 30 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Man of the Series on debut". ESPN Cricinfo. 30 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Mehedi Hasan, Shakib script historic Bangladesh win".
  16. "Mustafizur returns to Bangladesh ODI squad". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/new-zealand-v-bangladesh-2016-17/content/story/1073540.html. பார்த்த நாள்: 20 December 2016. 
  17. "Mehedi Hasan added to Bangladesh ODI squad". ESPN Cricinfo. 23 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  18. "Uncapped Mohammad Saifuddin in Bangladesh T20I squad". ESPN Cricinfo. 1 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  19. "Bangladesh tour of Sri Lanka, 2nd T20I: Sri Lanka v Bangladesh at Colombo (RPS), Apr 6, 2017". ESPN Cricinfo. 6 April 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெஹதி_ஹசன்&oldid=3371352" இருந்து மீள்விக்கப்பட்டது