ஆஷஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஷஸ்
The Ashes
ஆஷஸ் தாழி
நாடு(கள்) இங்கிலாந்து
 ஆத்திரேலியா
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
வடிவம்தேர்வுத் துடுப்பாட்டம்
முதல் பதிப்பு1882/83 (ஆத்திரேலியா)
கடைசிப் பதிப்பு2021-22 (ஆத்திரேலியா)
போட்டித் தொடர் வடிவம்5 போட்டிகள் கொண்ட தொடர்
மொத்த அணிகள்2
தற்போதைய வாகையாளர் ஆத்திரேலியா
அதிகமுறை வெற்றிகள் ஆத்திரேலியா (34 முறை)
அதிகபட்ச ஓட்டங்கள்ஆத்திரேலியா டான் பிராட்மன் (5,028)
அதிகபட்ச வீழ்த்தல்கள்ஆத்திரேலியா ஷேன் வோர்ன் (195)
ஆஸ்திரேலியா

ஆஷஸ் (Ashes) என்பது பழமையான துடுப்பாட்டத் தொடர் ஆகும். தேர்வுத் துடுப்பாட்ட வகையைச் சேர்ந்த இத்தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 1882-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. போட்டிகளின் எண்ணிக்கையில் பல்வேறு மாறுதல்கள் இருந்தாலும் 1998 ஆண்டில் இருந்து ஒரு தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் என்ற அளவில் விளையாடப்பட்டு வருகின்றது. இது ஐக்கிய இராச்சியம் அல்லது ஆத்திரேலியா நாடுகளில் நடைபெறும். ஒருவேளை தொடர் வெற்றி/தோல்வியின்றி சமமாக முடிந்தால் அதற்கு முந்தைய தொடரில் வெற்றி பெற்றிருந்த அணி ஆஷஸ் தாழியைத் தக்கவைத்துக் கொள்ளும்.

இங்கிலாந்து அணித்தலைவர் இவோ பிளைக்குத் தனிப்பட்ட முறையில் பரிசாக வழங்கப்பட்ட ஆஷஸ் தாழி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் உள்ளது. தொடரில் வெல்லும் அணிக்கு வெற்றியின் அடையாளமாக ஆஷஸ் தாழியின் பிரதி வழங்கபடுகிறது. மேலும் 1998-99 தொடரில் இருந்து ஆஷஸ் தொடர்களில் வெற்றிபெறும் அணிக்கு ஆஷஸ் தாழி போன்ற தோற்றத்தில் வாட்டர்ஃபோர்ட் படிகத்தால் செய்யப்பட்ட ஆஷஸ் கிண்ணம் ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இரு நாடுகளும் 2 ஆண்டுகளில் ஒரு முறை தமது நாட்டில் இப்போட்டியை நடத்தும்.

வரலாறு[தொகு]

1882-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் இங்கிலாந்து அணி 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்க ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை 78 ரன்களில் ஆட்டம் இலக்க செய்கின்றனர், எனவே ஆஸ்திரேலியா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிகையான 'த ஸ்போர்டிங் டைம்ஸ்', இங்கிலாந்து துடுப்பாட்டம் இறந்துவிட்டது, இங்கிலாந்து துடுப்பாட்டம் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது என இரங்கல் செய்தியாக அறிவித்தது.[1] இதையடுத்து இங்கிலாந்து அணித்தலைவராக இருந்த இவோ பிளை அடுத்து வரும் குளிர்காலத்தில் ஆஸ்திரேலியா சென்று விளையாடவுள்ள 1882-83 தேர்வுத் தொடரை வென்று சாம்பலை மீட்டுக் கொண்டுவருவோம் என்று சூளுரைத்தார். இதனால் சாம்பலை மீட்கும் சவால் என்று அந்தச் சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டன.

இவோ பிளை தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மூன்று போட்டிகள் கொண்ட 1882-83 ஆஷஸ் தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்க, மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வென்று ஆஸ்திரேலியாவைப் பழிதீர்த்தது. அதற்குப் பரிசாக மெல்போர்னைச் சேர்ந்த மூன்று பெண்கள், இங்கிலாந்து அணித்தலைவர் இவோ பிளைக்கு, மட்பாண்டத்தால் செய்யப்பட்ட தாழியைப் பரிசாக வழங்கினர். அதில் மூன்றாவது போட்டியில் பயன்படுத்தப்பட்ட மரத்துண்டுகளின் சாம்பல் இருப்பதாகக் கருதப்படுகிறது.[2][3] இதுவே ஆஷஸ் தொடர் உருவான வரலாறு ஆகும்.

முடிவுகள்[தொகு]

2021-22 வரை நடைபெற்ற ஆஷஸ் தொடர்களின் முடிவுகள்:[4]

தொடர் முடிவுகள்
தொடர்கள் ஆத்திரேலியா ஆத்திரேலியா வெற்றி இங்கிலாந்து இங்கிலாந்து வெற்றி வெற்றி/தோல்வி இன்றி முடிவு
72 34 32 6
போட்டி முடிவுகள்
போட்டிகள் ஆத்திரேலியா ஆத்திரேலியா வெற்றி இங்கிலாந்து இங்கிலாந்து வெற்றி வெற்றி/தோல்வி இன்றி முடிவு
340 140 108 92

போட்டி நடைபெறும் அரங்குகள்[தொகு]

ஆத்திரேலியா[தொகு]

ஆத்திரேலியாவில் ஆஷஸ் தொடருக்காக பயன்படுத்தப்பட்ட அரங்குகள்

ஆத்திரேலியாவில் ஆஷஸ் தொடருக்காக பயன்படுத்தப்பட்ட அரங்குகள்

1.கப்பா (பிரிஸ்பேன்)

2. அடிலெய்ட் ஓவல் (அடிலெய்ட்)

3. சிட்னி துடுப்பாட்ட அரங்கம் (சிட்னி)

4. மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம் (மெல்போர்ன்)

5.பெல்லரைவ் ஓவல் (ஹோபார்ட்)

6. மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம் (பெர்த்)

7. பிரிஸ்பேன் பொருட்காட்சி திடல் அரங்கம்

ஆத்திரேலியாவில் கோடைகாலத்தில் (டிசம்பர் - சனவரி) நடக்கும் இத்தொடரில், பாரம்பரியமாக , பாக்சிங் தினத்தன்று நடக்கும் போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கிலும், புது ஆண்டில் நடக்கும் முதல் போட்டி சிட்னி துடுப்பாட்ட அரங்கிலும் நடைபெறுகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்[தொகு]

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆஷஸ் தொடருக்காக பயன்படுத்தப்பட்ட அரங்குகள்

ஆஷஸ் is located in இங்கிலாந்து
ப்ரமால் லேன்
ப்ரமால் லேன்
எட்ஜ்பாஸ்டன்
எட்ஜ்பாஸ்டன்
பழைய டிராஃபோர்ட
பழைய டிராஃபோர்ட
ரிவர்சைட்
ரிவர்சைட்
சோஃபியா கார்ட்னஸ்
சோஃபியா கார்ட்னஸ்
டிரென்ட் பிரிட்ஜ்
டிரென்ட் பிரிட்ஜ்
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆஷஸ் தொடருக்காக பயன்படுத்தப்பட்ட அரங்குகள்
  1. பழைய டிராஃபோர்ட அரங்கம் (மான்செஸ்டர்)
  2. ஓவல் அரங்கம் (கென்னிங்டன் , லண்டன்)
  3. லார்ட்ஸ் அரங்கம் ( புனித ஜான்ஸ் வுட் , லண்டன்)
  4. ஹெடிங்லே அரங்கம் ( லீட்ஸ்)
  5. எட்ஜ்பாஸ்டன் அரங்கம் ( பிர்மிங்ஹாம்)
  6. சோஃபியா கார்ட்னஸ் திடல் ( கார்டிஃப்)
  7. ரிவர்சைட் அரங்கம் (டர்ஹாம்)
  8. டிரென்ட் பிரிட்ஜ் அரங்கம் (நாட்டிங்காம்)
  9. ப்ரமால் லேன் (ஷெஃபில்ட்)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷஸ்&oldid=3738482" இருந்து மீள்விக்கப்பட்டது