ஹெடிங்லே துடுப்பாட்டத் திடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெடிங்லே துடுப்பாட்டத் திடல்
அரங்கத் தகவல்
அமைவிடம்ஹெடிங்லே, லீட்ஸ்
ஆள்கூறுகள்53°49′3.58″N 1°34′55.12″W / 53.8176611°N 1.5819778°W / 53.8176611; -1.5819778
உருவாக்கம்1890
இருக்கைகள்18,350[1]
உரிமையாளர்யோர்க்ஷைர் கவுண்டித் துடுப்பாட்ட மன்றம்
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு29 ஜூன் – 1 ஜூலை 1899:
 இங்கிலாந்து v  ஆத்திரேலியா
முதல் ஒநாப5 செப்டம்பர் 1973:
 இங்கிலாந்து v  மேற்கிந்தியத் தீவுகள்
அணித் தகவல்
யோர்க்ஷைர் (1891–தற்போது)
22 ஆகஸ்ட் 2019 இல் உள்ள தரவு
மூலம்: ESPNcricinfo

ஹெடிங்லே துடுப்பாட்டத் திடல் (ஆதரவு காரணங்களுக்காக எமரால்ட்ஸ் துடுப்பாட்டத் திடல் என்று அறியப்படுகிறது) என்பது இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் நகரில் அமைந்துள்ள துடுப்பாட்டத் திடலாகும். 1899இல் இருந்து தேர்வுப் போட்டிகளை நடத்தி வரும் இந்தத் திடலின் மொத்தக் கொள்ளளவு 18,350 ஆகும்.

பதிவுகள்[தொகு]

தேர்வுப் போட்டிகளில், 1993ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆத்திரேலியா அணி எடுத்த 653-4, இங்கு பதிவான அதிகபட்சப் புள்ளிகள் ஆகும். அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள்: டான் பிராட்மேன் (963), ஜெஃப் பாய்காட் (897) மற்றும் ஜான் எட்ரிச் (849). அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள்: ஸ்டூவர்ட் பிராட் (46), பிரெட் ட்ரூமேன் (44) மற்றும் பாப் வில்லிஸ் (40).[2]

ஒநாப போட்டிகளில், மே 19, 2019 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி எடுத்த 351-9, இங்கு பதிவான அதிகபட்சப் புள்ளிகள் ஆகும். அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள்: இயோன் மோர்கன் (477), ஜோ ரூட் (421) மற்றும் மார்கஸ் ட்ரெஸ்கோதிக் (408). அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள்: கிறிஸ் ஓல்ட் (12), ஆதில் ரஷீத் (12), இயன் போத்தம் (11).

மேற்கோள்கள்[தொகு]