ஆஷசு தொடர் 2021–22

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆஷசு தொடர் 2021–22
நாள் 8 திசம்பர் 2021 – 18 சனவரி 2022
இடம் ஆத்திரேலியா
முடிவு 5-தேர்வுத் தொடரில் ஆத்திரேலியா 4–0 என்ற கணக்கில் வென்றது.
தொடர் நாயகன் திராவிசு கெட் (ஆசி)
கொம்ப்டன்–மில்லர் பதக்கம்:
திராவிசு கெட் (ஆசி)
அணிகள்
 ஆத்திரேலியா  இங்கிலாந்து
தலைவர்கள்
பாட் கம்மின்ஸ்[n 1] ஜோ ரூட்
அதிக ஓட்டங்கள்
திராவிசு கெட் (357)
மார்னஸ் லபுஷேன் (335)
டேவிட் வார்னர் (273)
ஜோ ரூட் (322)
டேவிட் மலேன் (244)
பென் ஸ்டோக்ஸ் (236)
அதிக வீழ்த்தல்கள்
பாட் கம்மின்ஸ் (21)
மிட்செல் ஸ்டார்க் (19)
இசுக்கொட் போலண்ட் (18)
மார்க் வுட் (17)
ஸ்டூவர்ட் பிரோட் (13)
ஒலி ரொபின்சன் (11)
2019 2023 →

2021–22 ஆஷசு தொடர் (2021–22 Ashes series) அல்லது வோடபோன் ஆண்கள் ஆஷசு தொடர் (Vodafone Men's Ashes Series)[1] என்பது இங்கிலாந்து, ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற, ஆஷசு கிண்ணத்திற்கான தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். ஆத்திரேலியாவின் ஐந்து இடங்களில் நடைபெறும் இத்தொடர் போட்டிகள் 2021 திசம்பர் 8 இல் ஆரம்பமாகி 2022 சனவரி 18 இல் முடிவடைந்தது.[2] 2017–18 தொடரை ஆத்திரேலியா வென்று, பின்னர் 2019 தொடரை சமப்படுத்தியிருந்தது. இத்தொடர் 2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாகும்.[3]

ஆத்திரேலியா முதல் மூன்று போட்டிகளையும் வென்று ஆஷசு கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.[4] நான்காவது தேர்வுப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஐந்தாவது போட்டியை ஆத்திரேலியா 146 ஓட்டங்களால் வென்று 4–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.[5]

அணிகள்[தொகு]

 ஆத்திரேலியா[6]  இங்கிலாந்து[7]

2017 ஆம் ஆண்டில், களத்திற்கு வெளியே முறையற்ற நடத்தை குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து,[8] டிம் பெயின் ஆத்திரேலியாவின் தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக 2021 நவம்பர் 19 அன்று அறிவித்தார்.[9][10] அதனைத் தொடர்ந்து, பாட் கம்மின்ஸ் ஆத்திரேலியாவின் புதிய அணித் தலைவராகவும்,.[11] ஸ்டீவ் சிமித் துணைத் தலைவராகவும்[12] 2021 நவம்பர் 26 இல் அறிவிக்கப்பட்டனர்.

அரங்குகள்[தொகு]

மே 2021 இல், பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், சிட்னி துடுப்பாட்ட அரங்கம், பேர்த் அரங்கம் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறும் என ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம் அறிவித்திருந்தது.[13] ஆனாலும், 2021 நவம்பரில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக பேர்த் நகரில் போட்டிகள் நடத்துவது குறித்து சந்தேகம் எழுந்தது.[14] தனது மாநிலத்துக்கு வருபவர்கள் 14-நாள் தனைமைப்படுத்தலுக்குள்ளாக்கப்படுவர் என மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு அறிவித்தது.[15] இதனால், ஐந்தாவது போட்டி பேர்த்தில் நடைபெறாது என ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம் திசம்பர் 6 இல் அறிவித்தது.[16] 2021 திசம்பர் 11 இல், ஹோபார்ட், பெல்லரைவ் ஓவல் அரங்கம் ஐந்தாவது போட்டிக்காக அறிவிக்கப்பட்டது.[17] இப்போட்டி பகல்/இரவுப் போட்டியாக நடைபெறுகிறது.[18]

ஆட்டங்கள்[தொகு]

1-வது தேர்வு[தொகு]

8–12 திசம்பர் 2021[n 2]
ஆட்டவிபரம்
147 (50.1 நிறைவுகள்)
ஜோஸ் பட்லர் 39 (58)
பாட் கம்மின்ஸ் 5/38 (13.1 நிறைவுகள்)
425 (104.3 நிறைவுகள்)
திராவிசு கெட் 152 (148)
ஒலி இராபின்சன் 3/58 (23 நிறைவுகள்)
297 (103 நிறைவுகள்)
ஜோ ரூட் 89 (165)
நேத்தன் லியோன் 4/91 (34 நிறைவுகள்)
20/1 (5.1 நிறைவுகள்)
மார்க்கசு ஆரிசு 9* (10)
ஒலி இராபின்சன் 1/13 (3 நிறைவுகள்)
ஆத்திரேலியா 9 இலக்குகளால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: திராவிசு கெட் (ஆசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • முதல் நாளின் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
 • அலெக்சு கேரி (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • நேத்தன் லியோன் (ஆசி) தனது 400-வது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[19]
 • உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.

2-வது தேர்வு[தொகு]

16–20 திசம்பர் 2021 (ப/இ)
ஆட்டவிபரம்
9/473வி (150.4 நிறைவுகள்)
மார்னஸ் லபுஷேன் 103 (305)
பென் ஸ்டோக்ஸ் 3/113 (25 நிறைவுகள்)
236 (84.1 நிறைவுகள்)
டேவிட் மலேன் 80 (157)
மிட்செல் ஸ்டார்க் 4/37 (16.1 நிறைவுகள்)
9/230வி (61 நிறைவுகள்)
திராவிசு கெட் 51 (54)
ஜோ ரூட் 2/27 (6 நிறைவுகள்)
192 (113.1 நிறைவுகள்)
கிறிஸ் வோக்ஸ் 44 (97)
ஜய் ரிச்சார்ட்சன் 5/42 (19.1 நிறைவுகள்)
ஆத்திரேலியா 275 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: மார்னஸ் லபுஷேன் (ஆசி)
 • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முத;லில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மைக்கேல் நேசர் (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • ஸ்டூவர்ட் பிரோட் (இங்) தனது 150-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[20]
 • ஜை ரிச்சார்ட்சன் (ஆசி) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது ஐவீழ்த்தல் சாதனையை நிகழ்த்தினார்.[21]
 • உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.

3-வது தேர்வு[தொகு]

26–30 திசம்பர் 2021
ஆட்டவிபரம்
185 (65.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 50 (82)
நேத்தன் லியோன் 3/36 (14.1 நிறைவுகள்)
267 (87.5 நிறைவுகள்)
மார்க்கசு ஆரிசு 76 (189)
ஜேம்ஸ் அண்டர்சன் 4/33 (23 நிறைவுகள்)
68 (27.4 நிறைவுகள்)
ஜோ ரூட் 28 (59)
இசுக்காட் போலண்டு 6/7 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா ஒரு இன்னிங்சு, 14 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: இசுக்காட் போலண்டு (ஆசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • இசுக்காட் போலண்டு (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • இசுக்காட் போலண்டு (ஆசி) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது ஐவீழ்த்தல் சாதனையை அடைந்தார்.[22]
 • இவ்வாட்ட முடிவை அடுத்து ஆத்திரேலியா ஆஷசு கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.[23]
 • உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.

4-வது தேர்வு[தொகு]

5–9 சனவரி 2022
ஆட்டவிவரம்
8/416 (134 நிறைவுகள்)
உஸ்மான் கவாஜா 137 (260)
ஸ்டூவர்ட் பிரோட் 5/101 (29 நிறைவுகள்)
294 (79.1 நிறைவுகள்)
ஜோனி பேர்ஸ்டோ 113 (158)
இசுக்காட் போலண்ட் 4/36 (14.1 நிறைவுகள்)
6/265 (68.5 நிறைவுகள்)
உஸ்மான் கவாஜா 101* (138)
சாக் லீச் 4/84 (21.5 நிறைவுகள்)
9/270 (102 நிறைவுகள்)
சாக் கிராலி 77 (100)
இசுக்காட் போலண்ட்] 3/30 (24 நிறைவுகள்)
ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி நிறைவு
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக முதல் நாளில் 46.5 ஓவர்களே விளையாடப்பட்டது.
 • ''உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 4, இங்கிலாந்து 4.

5-வது தேர்வு[தொகு]

14–18 சனவரி 2022 (ப/இ)
ஆட்டவிபரம்
303 (75.4 நிறைவுகள்)
திராவிசு கெட் 101 (113)
ஸ்டூவர்ட் பிரோட் 3/59 (24.4 நிறைவுகள்)
188 (47.4 நிறைவுகள்)
கிறிஸ் வோக்ஸ் 36 (48)
பாட் கம்மின்ஸ் 4/45 (13.4 நிறைவுகள்)
155 (56.3 நிறைவுகள்)
அலெக்சு கேரி 49 (88)
மார்க் வுட் 6/37 (16.3 நிறைவுகள்)
124 (38.5 நிறைவுகள்)
சாக் கிராலி 36 (66)
இசுக்கொட் போலண்ட் 3/18 (12 நிறைவுகள்)
ஆத்திரேலியா 146 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரைவ் ஓவல் அரங்கம், ஹோபார்ட்
நடுவர்கள்: ரொட் டக்கர் (ஆசி), பவுல் வில்சன் (ஆசி)
ஆட்ட நாயகன்: திராவிசு கெட் (ஆசி)
 • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • முதல் ஆட்டத்தில் மழை காரணமாக 59.3 நிறைவுகள் மட்டுமே விளையாட முடிந்தது.
 • சாம் பில்லிங்ஸ் (இங்) தன்து முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
 • உலக தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து 0.

புள்ளிவிபரம்[தொகு]

மட்டையாட்டம்[தொகு]

பெயர் இன்னிங்சு ஆட்டமிழக்காதவை ஓட்டங்கள் பந்துகள் நிமி. 4கள் 6கள் சராசரி
ஆத்திரேலியா திராவிசு கெட் 6 0 357 415 683 39 4 59.5
ஆத்திரேலியா மார்னஸ் லபுஷேன் 9 1 335 697 1069 34 2 41.88
இங்கிலாந்து ஜோ ரூட் 10 0 322 667 1019 33 0 32.2
ஆத்திரேலியா டேவிட் வார்னர் 8 0 273 538 843 34 2 34.13
ஆத்திரேலியா உஸ்மான் கவாஜா 4 1 255 462 720 25 2 85
மூலம்:[24]

பந்துவீச்சு[தொகு]

பெயர் நிறைவுகள் சுழியங்கள் ஓட்டங்கள் இழப்புகள் சிக்கனம் சராசரி
ஆத்திரேலியா பாட் கம்மின்ஸ் 126 31 379 21 3.01 18.05
ஆத்திரேலியா மிட்செல் ஸ்டார்க் 152.1 32 482 19 3.17 25.37
ஆத்திரேலியா இசுக்கொட் போலண்ட் 81.1 31 172 18 2.12 9.56
இங்கிலாந்து மார்க் வுட் 120.3 15 453 17 3.76 26.65
ஆத்திரேலியா நேத்தன் லியோன் 163.1 47 377 16 2.31 23.56
மூலம்:[25]

குறிப்புகள்[தொகு]

 1. Steve Smith captained Australia for the second Test.
 2. ஒவ்வொரு தேர்வுப் போட்டிக்கும் ஐந்து நாட்கள் ஒதுக்கப்பட்டன, முதலாவது போட்டி நான்கு நாட்களில் முடிவடைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Fixture confirmed for dual Ashes series, Afghan Test". Cricket Australia. மூல முகவரியிலிருந்து 18 May 2021 அன்று பரணிடப்பட்டது.
 2. "England Ashes schedule confirmed for 2021-22". England and Wales Cricket Board. மூல முகவரியிலிருந்து 20 May 2021 அன்று பரணிடப்பட்டது.
 3. "England vs India to kick off the second World Test Championship". ESPN Cricinfo. மூல முகவரியிலிருந்து 5 August 2021 அன்று பரணிடப்பட்டது.
 4. "Australia retain Ashes after Scott Boland heroics". ESPN Cricinfo. மூல முகவரியிலிருந்து 28 December 2021 அன்று பரணிடப்பட்டது.
 5. "Ashes: England crushed by Australia in final Test". BBC Sport.
 6. "Khawaja, Richardson recalled in Australia's Ashes squad". Cricket Australia. மூல முகவரியிலிருந்து 17 November 2021 அன்று பரணிடப்பட்டது.
 7. "England name Men's Test squad for 2021-22 Ashes Tour". England and Wales Cricket Board. மூல முகவரியிலிருந்து 10 October 2021 அன்று பரணிடப்பட்டது.
 8. "Paine quits as Test captain amid off-field scandal". Cricket Australia. மூல முகவரியிலிருந்து 19 November 2021 அன்று பரணிடப்பட்டது.
 9. "Full statement: Tim Paine resigns as Test captain". Cricket Australia. மூல முகவரியிலிருந்து 19 November 2021 அன்று பரணிடப்பட்டது.
 10. "Tim Paine quits as Australia captain after sending explicit messages to female co-worker". ESPN Cricinfo. மூல முகவரியிலிருந்து 19 November 2021 அன்று பரணிடப்பட்டது.
 11. "Pat Cummins confirmed as Australia's new Test captain". ESPN Cricinfo. மூல முகவரியிலிருந்து 26 November 2021 அன்று பரணிடப்பட்டது.
 12. "Cummins confirmed as Test captain, Smith his deputy". Cricket Australia. மூல முகவரியிலிருந்து 26 November 2021 அன்று பரணிடப்பட்டது.
 13. "Dual Ashes series headline Australia's bumper summer schedule". International Cricket Council. மூல முகவரியிலிருந்து 19 May 2021 அன்று பரணிடப்பட்டது.
 14. "Ashes: Doubt over Perth hosting fifth Test because of Covid-19 rules". BBC Sport. https://www.bbc.co.uk/sport/cricket/59473412. 
 15. "WA's hardline border stance puts Perth Test in doubt". Cricket Australia. மூல முகவரியிலிருந்து 30 November 2021 அன்று பரணிடப்பட்டது.
 16. "Ashes finale won't be played in Perth". Cricket Australia. மூல முகவரியிலிருந்து 6 December 2021 அன்று பரணிடப்பட்டது.
 17. "Hobart to host historic day-night Ashes finale". Cricket Australia. மூல முகவரியிலிருந்து 11 December 2021 அன்று பரணிடப்பட்டது.
 18. "Bidding war begins for second day-night Ashes Test". ESPN Cricinfo. மூல முகவரியிலிருந்து 7 December 2021 அன்று பரணிடப்பட்டது.
 19. "A groundsman plucked from obscurity, Lyon’s 400 proves a GOAT can be found in anyone". Fox Sports.
 20. "Ashes: Stuart Broad becomes 10th cricketer to reach 150 Tests". The Indian Express.
 21. "Australia overcome epic Jos Buttler rearguard to seal hefty win". ESPN Cricinfo.
 22. "Scott Boland six-for leads humiliation as Australia romp to Ashes glory". ESPN Cricinfo.
 23. "Ashes: Australia thrash feeble England to retain Ashes at Melbourne". BBC Sport.
 24. "Records: The Ashes 2021/22, Most Runs". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்த்த நாள் 17 January 2022.
 25. "Records: The Ashes 2021/22, Most Wickets". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்த்த நாள் 17 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷசு_தொடர்_2021–22&oldid=3374835" இருந்து மீள்விக்கப்பட்டது