உள்ளடக்கத்துக்குச் செல்

சாம் பில்லிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம் பில்லிங்ஸ்

சாம் பில்லிங்ஸ் (Sam Billings, பிறப்பு: சூன் 15 1991), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபதுக்கு -20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வலதுகை மட்டையாளரான இவர் இங்கிலாந்து அணியின் குச்சக் காப்பாளராகவும் உள்ளார். இவர் இங்கிலாந்து தேசிய அணி தவிர சென்னை சூப்பர் கிங்சு, டெல்லி டேர்டெவில்ஸ், இங்கிலாந்து அ அணி, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இங்கிலாந்து அணி, இச்லாமாபாத் யுனைட்டட் ,கெண்ட் மாகாணத் துடுப்பாட்ட அணி, லூக்பொருக் மரிலபோர்ன் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணி ஆகிய அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். இவர் இங்கில்லந்துத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

முதல்தரத் துடுப்பாட்டம்

[தொகு]

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மரிலபோன் துடுப்பாட்ட சங்க துடுப்பாட்டத் தொடரில் இவர் லூபரோ மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். ஏப்ரல் 2 , நார்தம்ப்டன்ஷயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல்தரத் துடுப்பட்டப்போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 62 பந்துகளில் 20 ஓட்டங்களை எடுத்து இவான்சு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 234 பந்துகளில் 131 ஓட்டங்களை எடுத்து வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.[1]

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஸ்பெக்ஸ் சேவர்ஸ் மாகாண வாகையாளர் துடுப்பாட்டத் தொடரில் இவர் கெண்ட் மாகணத் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். செப்டமபர் 23 கேண்டர்பரியில் ஹேம்ஷயர் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பட்டப் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஐந்து பந்துகளில் ஒரு ஓட்டம் எடுத்து அபாட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.

பட்டியல் அ

[தொகு]

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிளைடஸ்டேல் வங்கி கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் கெண்ட் துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார். சூலை 17 ரோட்டர்டம் மைதானத்தில் நெதர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 12 பந்துகளில் ஒன்பது ஓட்டங்களை எடுத்து மடகச்கர் புகாரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 40 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[2]

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

ஒருநாள் போட்டிகள்

[தொகு]

2015 ஆம் ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.சூன் 9, பிர்மிங்ஹாம் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் ஆறு பந்துகளில் மூன்று ஓட்டங்களை எடுத்து சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி 210 ஓட்டங்களால் வெற்றி பெற்றது[3] 2018 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. சூன் 16, கார்டிஃப் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 18 பந்துகளில் 11 ஓட்டங்களை எடுத்து டை பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[4]

சான்றுகள்

[தொகு]
  1. "Full Scorecard of Loughborough MCCU vs Northamptonshire, Marylebone Cricket Club University Matches, 2nd Innings - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  2. "Full Scorecard of Netherlands vs Kent, Pro40 League (Sunday League / National League), Group A - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  3. "Full Scorecard of England vs New Zealand 1st ODI 2015 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  4. "Full Scorecard of England vs Australia 2nd ODI 2018 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.

வெளி இணைப்பு

[தொகு]

சாம் பில்லிங்ஸ் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_பில்லிங்ஸ்&oldid=3202494" இலிருந்து மீள்விக்கப்பட்டது