2019 ஆஷஸ் தொடர்
ஆஷஸ் தொடர், 2019 | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2019 ஆஷஸ் தொடரின் சின்னம் | ||||||||||||||||
| ||||||||||||||||
அணிகள் | ||||||||||||||||
இங்கிலாந்து | ஆத்திரேலியா | |||||||||||||||
தலைவர்கள் | ||||||||||||||||
ஜோ ரூட் | டிம் பெயின் | |||||||||||||||
அதிக ஓட்டங்கள் | ||||||||||||||||
பென் ஸ்டோக்ஸ் (441) ரோரி பர்ன்ஸ் (390) ஜோ ரூட் (325) |
ஸ்டீவ் சிமித் (774) மார்னஸ் லபுஷேன் (353) மாத்தியூ வேட் (337) | |||||||||||||||
அதிக வீழ்த்தல்கள் | ||||||||||||||||
ஸ்டூவர்ட் பிரோட் (23) ஜோப்ரா ஆர்ச்சர் (22) ஜாக் லீச் (12) |
பாட் கம்மின்ஸ் (29) ஜோஷ் ஹேசல்வுட் (20) நேத்தன் லியோன் (20) | |||||||||||||||
|
ஆஷஸ் தொடர், 2019 (2019 Ashes Series) என்பது 2019 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத் தொடராகும்.[1] இது இங்கிலாந்தின் எட்சுபாசுடன், லார்ட்ஸ், எடிங்கிலி, ஓல்ட் டிராஃபார்ட் மற்றும் தி ஓவல் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.
2017-18 தொடரில் வென்ற ஆத்திரேலியா, ஆஷஸ் தொடரின் நடப்பு வாகையாளராகக் களமிறங்குகிறது. இது 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையில் நடைபெறும் முதல் தொடர் ஆகும்.[2][3] 5 போட்டிகள் இத்தொடர் 2-2 என்ற கணக்கில் வெற்றி/தோல்வியின்றி முடிந்தது. எனவே முந்தைய தொடரின் வெற்றியாளரான ஆத்திரேலிய அணி ஆஷஸ் தாழியைத் தக்கவைத்துக் கொண்டது.
அணிகள்
[தொகு]2019 சூலை 26 அன்று ஆத்திரேலியா தனது 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது.[4] இங்கிலாந்து சூலை 27 இல் தனது அணியை அறிவித்தது.[5]
இங்கிலாந்து[5] | ஆத்திரேலியா[4] |
---|---|
|
|
1 இரண்டாவது தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு மாற்றாக ஜாக் லீச் சேர்க்கப்பட்டார்.[6]
2 4-வது போட்டிக்கு முன்பு காயம் காரணமாக ஜேம்ஸ் அண்டர்சன் இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிரைக் ஓவர்டன் சேர்க்கப்பட்டார்.[7]
ஆட்டங்கள்
[தொகு]1-வது தேர்வு
[தொகு]1–5 ஆகத்து 2019
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- ஸ்டீவ் சிமித் (ஆசி) இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடர்களில் முதலாவது நாளில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.[8]
- ஸ்டூவர்ட் பிரோட் (இங்) தனது ஆஷஸ் தொடர்களில் 100-வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்,[9] அத்துடன் தனது 450-வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[10]
- ரோரி பர்ன்ஸ் (இங்) தனது முதலாவது தேர்வு நூறைப் பெற்றார்.[11]
- ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 25-வது தேர்வு நூறைப் பெற்றார்.[12]
- பாட் கம்மின்ஸ் (ஆசி) தனது 100-வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[13]
- நேத்தன் லியோன் (ஆசி) தனது 350வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[13]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்; ஆத்திரேலியா 24, இங்கிலாந்து 0.
2-வது தேர்வு
[தொகு]14–18 ஆகத்து 2019
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக முதலாம் நாள் ஆட்டமும், மூன்றாம் நாளின் இரண்டாம் பகுதி ஆட்டமும் இடம்பெறவில்லை. ஐந்தாம் நாள் ஆட்டம் மழையால் தாமதமாகத் தொடங்கியது.
- ஜோப்ரா ஆர்ச்சர் (இங்) தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார்.
- நான்காம் நாள் ஆட்டத்தில் மூளையதிர்ச்சி காரணமாக ஸ்டீவ் சிமித் (ஆசி) வெளியேறினார். அவருக்கு மாற்றாக மார்னஸ் லபுஷேன் விளையாடினார். தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் மாற்று வீரர் விளையாடுவது இதுவே முதல்முறை ஆகும்.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்; ஆத்திரேலியா 8, இங்கிலாந்து 8
3-வது தேர்வு
[தொகு]22–26 ஆகத்து 2019
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஜோப்ரா ஆர்ச்சர் (இங்) தனது தேர்வுப் போட்டிகளில் முதன்முறையாக ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார்.[14]
- இங்கிலாந்து எடுத்த 67 ஓட்டங்களானது ஆஷஸ் போட்டி ஒன்றில் 1948 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆத்திரேலியாவுக்கு எதிராக அவ்வணி பெற்ற மிகக்குறைந்த ஓட்டங்களாகும்.[15]
- தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் இங்கிலாந்தின் வெற்றிகரமான இலக்குத் துரத்துதல்களில் இதுவே அதிகபட்ச இலக்காகும்.[16]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்; இங்கிலாந்து 24, ஆத்திரேலியா 0
4-வது தேர்வு
[தொகு]4–8 செப்டம்பர் 2019
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
- முதல் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக 44 நிறைவுகள் மட்டுமே விளையாட முடிந்தது.
- இங்கிலாந்தில் நடந்த தொடர்களில் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஷஸ் தாழியை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்; ஆத்திரேலியா 24, இங்கிலாந்து 0.
5-வது தேர்வு
[தொகு]12–16 செப்டம்பர் 2019
ஓட்டப்பலகை |
எ
|
||
263 (77 நிறைவுகள்)
மாத்தியூ வேட் 117 (166) ஜாக் லீச் 4/49 (22 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஜோ ரூட் (இங்.) தனது தேர்வுப் போட்டிகளில் 7,000வது ஓட்டத்தை எடுத்தார்.
- ஜோனி பேர்ஸ்டோ (இங்.) தனது தேர்வுப் போட்டிகளில் 4,000வது ஓட்டத்தை எடுத்தார்.
- மிட்செல் மார்ஷ் (ஆசி.) தனது தேர்வுப் போட்டிகளில் முதல் ஐவீழ்த்தலை எடுத்தார்.
- 1972க்குப் பிறகு ஒரு ஆஷஸ் தொடர் வெற்றி/தோல்வியின்றி முடிவது இதுவே முதல்முறையாகும்.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை புள்ளிகள்; இங்கிலாந்து 24, ஆத்திரேலியா 0
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "England schedule confirmed for summer 2019" (in en). https://www.ecb.co.uk/news/787146.
- ↑ "Kohli 'excited' about World Test Championship; praises youngsters in ODI, T20I squads". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 July 2019.
- ↑ "FAQs - What happens if World Test Championship final ends in a draw or tie?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 July 2019.
- ↑ 4.0 4.1 "Australia name 17-man Ashes squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
- ↑ 5.0 5.1 "England name squad for first Ashes Test". England and Wales Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 27 July 2019.
- ↑ "Ashes 2019: England drop Moeen Ali, Jack Leach recalled for second Test". BBC Sport (British Broadcasting Corporation). 9 August 2019. https://www.bbc.co.uk/sport/cricket/49292631. பார்த்த நாள்: 9 August 2019.
- ↑ "James Anderson ruled out of Ashes, England call up Craig Overton". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 August 2019.
- ↑ "Smith special takes shine off England's opening day". Cricbuzz. 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
- ↑ "Stats: Steve Smith's record ton on Test comeback inspires Australia to a commanding total". Crictracker. 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
- ↑ "Broad makes Warner 450th Test wicket". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 3 August 2019.
- ↑ "Rory Burns' maiden Test ton gives England Ashes ascendancy". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
- ↑ "Steven Smith's rare twin hundreds in first Test of an away series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 August 2019.
- ↑ 13.0 13.1 "Milestone men Lyon, Cummins breach fortress Edgbaston". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 5 August 2019.
- ↑ "Jofra Archer claims six as Australia are rolled for 179". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 August 2019.
- ↑ "Stats: England succumb to their lowest Test total at home in seven decades". Crictraker. பார்க்கப்பட்ட நாள் 24 August 2019.
- ↑ "Ben Stokes century leads England to epic Ashes-saving win at Headingley". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.