பேச்சு:2019 ஆஷஸ் தொடர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags:, ஆத்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும் தேர்வுத் தொடர் ஆஷஸ் என்ற பெயரிலேயே துடுப்பாட்ட உலகில் பரவலாக அறியப்படுகிறது. இதை ஏன் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2019 பக்கத்துடன் இணைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்? தவிர ஆங்கிலம், இந்தி மற்றும் வங்காளம் ஆகிய மூன்று விக்கிக்களிலும் இவ்வாறு இரு பக்கங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. AakashAH120 (பேச்சு) 10:31, 6 செப்டம்பர் 2019 (UTC)

இது குறித்து ஏற்கனவே உங்களுடன் உரையாடியுள்ளேன். இரண்டு கட்டுரைகளிலும் உள்ள உள்ளடக்கங்கள் ஏறத்தாழ ஒன்று தான். மேலதிகமாக அதிக பயனற்ற பயிற்சி ஆட்டங்கள் குறித்த தகவல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் தனிக் கட்டுரையாக இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமாக ஒவ்வொரு ஆட்டம் பற்றியும் ஒவ்வொரு நாள் ஆட்டம் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்கள். அவ்வாறு விரிவு படுத்தப் போகிறீர்களா? இவ்வாறே உலகக்கோப்பைப் போட்டிகளிலும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் அவர்கள் தனித்தனியே கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அதற்காக வெறுமனே ஒரு சில தகவல்களுக்காக இரண்டு கட்டுரைகள் தேவையற்றவை.--Kanags \உரையாடுக 11:10, 6 செப்டம்பர் 2019 (UTC)
அப்படியென்றால் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2019 என்ற பக்கத்தை நீக்குவதே சிறந்தது என்பது என் கருத்து. ஏனென்றால் இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆடப்படுவது தேர்வுப் போட்டிகள் மட்டுமே. ஒருநாள், இ20 போட்டிகளும் ஆடப்படும் சமயங்களில் மட்டுமே இதுபோன்ற பக்கங்களை உருவாக்க வேண்டும். AakashAH120 (பேச்சு) 14:07, 6 செப்டம்பர் 2019 (UTC)
தகுந்த முடிவின்றி பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 11:21, 6 செப்டம்பர் 2019 (UTC)
@AakashAH120:
  1. // ஆஷஸ் என்ற பெயரிலேயே துடுப்பாட்ட உலகில் பரவலாக அறியப்படுகிறது.// எனில் ஆஷஸ் 2019 எனும் ஒரு வழிமாற்றினை உருவாக்கலாமே.
  2. முதலில் விருப்பம் தெரிவித்துவிட்டு 10 நாட்களுக்குப்பிறகு ஏன் ஆட்சேபனை தெர்விக்கிறீர்கள். அதுவும் நீங்கள் முடிவு எட்டாமல் புதிய கட்டுரை உருவாக்கிய பிறகு. ஸ்ரீ (✉) 15:01, 6 செப்டம்பர் 2019 (UTC)
வழிமாற்று உருவாக்கிவிட்டதால் இணைப்பு வார்ப்புருவை நீக்கியுள்ளேன். AakashAH120 (பேச்சு) 01:25, 7 செப்டம்பர் 2019 (UTC)
இணைப்பு வேறு, வழிமாற்று வேறு. இணைப்புக்குத்தான் கோரிக்கை விடப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 01:32, 7 செப்டம்பர் 2019 (UTC)

@Kanags:, தேர்வுப் போட்டிகளுடன் ஒருநாள் அல்லது இ20ப போட்டிகளும் விளையாடப்படும் நேரங்களில் மட்டுமே சுற்றுப்பயணம் என்ற தலைப்பில் பக்கங்களை உருவாக்க வேண்டும். சான்றாக இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2017–18 என்ற பக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். இதில் விளையாடப்படும் தேர்வுப் போட்டிகளைக் குறித்து விரிவாக விளக்க 2017–18 ஆஷஸ் தொடர் என்று தனியாக ஒரு பக்கம் உருவாக்கியுள்ளேன். இதுவே சரியான முறையாகும். 2019 சுற்றுப்பயணத்தில் தேர்வுத் தொடர் (ஆஷஸ்) மட்டுமே விளையாடப்படுகிறது. எனவே 2019 ஆஷஸ் தொடர் என்று இப்பக்கத்தின் தலைப்பை மாற்றக் கோருகிறேன். AakashAH120 (பேச்சு) 03:02, 7 செப்டம்பர் 2019 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

பகுப்பு:ஆஷஸ் தொடர்கள்-- இது பல்வேறு ஆண்டுகளில் நடைபெற்ற ஆஷஸ் தொடர்களின் பகுப்பாகும். அதுபோல் இப்பக்கத்தின் தலைப்பும் ஆஷஸ் என்ற பெயருடன் இருந்தால் தேடுவதற்கு எளிதாக இருக்கும். எனவே 2019 ஆஷஸ் தொடர் என்று தலைப்பை நகர்த்தியுள்ளேன். AakashAH120 (பேச்சு) 02:08, 9 செப்டம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:2019_ஆஷஸ்_தொடர்&oldid=3738568" இலிருந்து மீள்விக்கப்பட்டது