ஜோஷ் ஹேசல்வுட்
ஜனவரி 2018இல் ஹேசல்வுட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜோஷ் ரெஜினால்ட் ஹேசல்வுட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 8 சனவரி 1991 டாம்வெர்த், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ஹொஃப்[1], புல்லட்[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 196 cm (6 அடி 5 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை விரைவு-நடுத்தர | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 440) | 17 டிசம்பர் 2014 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 183) | 22 ஜூன் 2010 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 16 நவம்பர் 2014 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 38 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 62) | 13 பிப்ரவரி 2013 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 31 ஜனவரி 2014 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 38 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–தற்போது | நியூ சவுத் வேல்ஸ் (squad no. 8) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–இன்று | சிட்னி சிக்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020-தற்போது | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 15 டிசம்பர் 2019 |
ஜோஷ் ரெஜினால்டு ஹேசல்வுட் (Josh Reginald Hazlewood, பிறப்பு: 8 சனவரி 1991) என்பவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூ சவுத் வேல்சு அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும், ஆத்திரேலிய அணிக்காகப் பன்னாட்டுப் போட்டிகளிலும் விளையாடுகிறார். நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் டாம்வெர்த் என்ற நகரில் பிறந்த ஹேசல்வுட் நியூ சவுத் வேல்சு அணிக்காக விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2010 சூன் 22 இல் ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் ஆத்திரேலிய அணியில் விளையாடினார். இவரே அவ்வணியில் வயதில் குறைந்த துடுப்பாட்ட வீரர் ஆவார்.[3] இவரின் துல்லியமான பந்துவீச்சினால் இவர் முன்னாள் விரைவு வீச்சாளரான கிளென் மெக்ராவுடன் ஒப்பிடப்படுகிறார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.[4] இவர் டிசம்பர் 2019இல் நடைபெற்ற ஐ.பி.எல்.2020 தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.[5]
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற போடர்-காவஸ்கர் கோப்பைத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 23 நிறைவுகள் வீசி 68 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜின்க்யா ரகானே, மகேந்திரசிங் தோனி, மற்றும் ரவிச்சந்திரன் அசுவின் ஆகிய ஐந்து மட்டையாளர்களை வீழ்த்தினார். இதில் 6 நிறைவுகளை வெறுமையாக வீசினார். மட்டையாட்டத்தில் 50 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்தார். இதில் 7 நான்குகளும் அடங்கும். பின்னர் இரண்டாவது ஆட்டப்பகுதியில் செதேஷ்வர் புஜாரா மற்றும் வருண் ஆரோன் ஆகிய மட்டையாளர்களை வீழ்த்தினார். இதில் 16 நிறைவுகள் வீசி 74 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 மட்டையாளர்களைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 4.62ஆக இருந்தது.[6]
ஜனவரி 30, 2017 இல் ஓக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியில் 10 நிறைவுகள் வீசி 48 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 மட்டையாளரை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 4.80ஆக இருந்தது. இந்தப் போட்டியில் 6 இழப்புகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் ஆத்திரேலிய அணியில் இடம்பெற்றார். பின் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 4 மட்டையாளர்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
நவம்பர் 2015இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் பகல்-இரவு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் மார்ட்டின் கப்டிலை முன்னங்கால் இடைமறிப்பு முறையில் வீழ்த்தினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 17 நிறைவுகள் வீசி 66 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். இதில் 2 நிறைவுகளை வெறுமையாக வீசினார். இதில் கப்டில், வட்லிங் ,மற்றும் சௌத்தி ஆகிய மூன்று மட்டையாளர்களை வீழ்த்தினார். மட்டையாட்டத்தில் 9 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 24 நிறைவுகள் வீசி 70 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 நிறைவுகளை வெறுமையாக வீசினார். இதில் 6 மட்டையாளர்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி 3 இழப்புகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஹேசல்வுட் பெற்றார். இதன்மூலம் முதல் பகல்-இரவு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது பெற்றவரானார்.[7][8] இவர் தனது 12ஆவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 50ஆவது மட்டையாளரை வீழ்த்தினார். இதன்மூலம் ஆத்திரேலிய வீரர்கள் ஷேன் வோர்ன், கிளென் மெக்ரா மற்றும் மிட்செல் ஜோன்சன் ஆகியோரை விட விரைவாக 50 மட்டையாளர்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.
சிறந்த செயல்பாடு
[தொகு]பந்துவீச்சாளர் | ||||
---|---|---|---|---|
ஓட்டங்கள் | எதிரணி | இடம் | ஆண்டு | |
தேர்வு | 6/70 | நியூசிலாந்து துடுப்பாட்ட அணி | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | 2015 [9] |
ஒருநாள் போட்டிகள் | 6/52 | நியூசிலாந்து துடுப்பாட்ட அணி | பிர்மின்ஹாம் துடுப்பாட்ட அரங்கம் | 2017 [10] |
இருபதுக்கு 20 | 4/30 | இங்கிலாந்து துடுப்பாட்ட அணி | மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் | 2014 [11] |
முத | 6/50 | வெஸ்டர்ன் ஆத்திரேலியா | ஓவல் மைதானம் | 2014 [12] |
பஅ | 7/36 | தெற்கு ஆத்திரேலியா | பிரிஸ்பன் துடுப்பாட்ட அரங்கம் | 2014 [13] |
இ20ப | 4/30 | இங்கிலாந்து துடுப்பாட்ட அணி | மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம் | 2014 [11] |
சான்றுகள்
[தொகு]- ↑ "Sydney Sixers Player Profiles - Josh Hazlewood". Archived from the original on 2014-12-19. பார்க்கப்பட்ட நாள் 2015-02-15.
- ↑ "Hazlewood soars, Smith back to No.1". cricket.com.au. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
- ↑ Coverdale, Brydon (22 சூன் 2010). "Teenager Hazlewood debuts, Australia bat". CricInfo. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2010.
- ↑ "Hazlewood will be the next McGrath: Younis" (in en-AU). ABC News. 2017-01-06. http://www.abc.net.au/news/2017-01-06/hazlewood-will-be-the-next-mcgrath-younis/8166950.
- ↑ . https://cricketaddictor.com/cricket/chennai-super-kings-rope-in-josh-hazlewood-for-inr-2-crores/.
- ↑ "2nd Test, Border-Gavaskar Trophy at Brisbane, Dec 17-20 2014 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-23
- ↑ "Australia sneak home in tense finish". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
- ↑ "Bowlers dominate early in day-night Test". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 March 2016.
- ↑ "New Zealand tour of Australia, 2015/16 – Australia v New Zealand Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 29 November 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ "ICC Champions Trophy, 2nd Match, Group A: Australia v New Zealand at Birmingham, Jun 2, 2017". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 2 June 2017. பார்க்கப்பட்ட நாள் 3 June 2017.
- ↑ 11.0 11.1 "England tour of Australia, 2013/14 – Australia v England Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 31 January 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ "Sheffield Shield Final, 2013/14 – NSW v WA Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 25 March 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
- ↑ "Matador BBQs One-Day Cup, 2014/15 – NSW v SA Scorecard". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 4 October 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.