ஜேம்ஸ் அண்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் அண்டர்சன்
OBE
JIMMY ANDERSON.jpg
2014இல் அண்டர்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேம்ஸ் மைக்கல் அண்டர்சன்
பிறப்பு30 சூலை 1982 (1982-07-30) (அகவை 40)
பர்ன்லே, லாங்கஷைர், இங்கிலாந்து
பட்டப்பெயர்கிங் ஆஃப் ஸ்விங்[1]
உயரம்6 அடி 2 அங்
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைRight-arm வேகம்-மிதம்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 613)22 May 2003 எ சிம்பாப்வே
கடைசித் தேர்வு1 ஆகத்து 2019 எ ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 172)15 டிசம்பர் 2002 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாப13 மார்ச் 2015 எ ஆப்கானித்தான்
ஒநாப சட்டை எண்9
இ20ப அறிமுகம் (தொப்பி 21)9 சனவரி 2007 எ ஆத்திரேலியா
கடைசி இ20ப15 நவம்பர் 2009 எ தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2000லாங்கஷைர் துடுப்பாட்ட வாரியம்
2002–தற்போதுலாங்கஷைர் (squad no. 9)
2007/08ஆக்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 149 194 246 261
ஓட்டங்கள் 1,181 273 1,822 376
மட்டையாட்ட சராசரி 9.68 7.58 9.64 8.95
100கள்/50கள் 0/1 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 81 28 81 28
வீசிய பந்துகள் 32,359 9,584 49,485 12,730
வீழ்த்தல்கள் 575 269 950 358
பந்துவீச்சு சராசரி 26.94 29.22 24.97 28.57
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
27 2 47 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
3 0 6 0
சிறந்த பந்துவீச்சு 7/42 5/23 7/42 5/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
91/– 54/– 144/– 68/–
மூலம்: ESPNcricinfo, 5 August 2019

ஜேம்ஸ் மைக்கல் அண்டர்சன்: (James Michael Anderson, பிறப்பு: ஜூலை 30, 1982) (பொதுவாக ஜிம்மி அண்டர்சன் என்று அறியப்படுகிறார்) ஓர் முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். அனைத்துக் காலங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முன்னணி பெற்றுள்ள அண்டர்சன், 500 தேர்வு மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் முதல் இடத்தையும், பன்னாட்டு வீரர்கள் வரிசையில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 575 மட்டையாளர்களை வீழ்த்தியுள்ள அண்டர்சன், அனைத்துக் காலங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய தேர்வு பந்துவீச்சாளர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014 ஆம் ஆண்டில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின்போது இவரும் ஜோ ரூட்டும் இணைந்து 198 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 10வது இழப்பில் இணைந்து அதிகபட்ச ஒட்டங்கள் எடுத்தவர்கள் எனும் சாதனையைப் படைத்தனர்.

வலது கை விரைவு வீச்சாளரான இவர் தனது 20 ஆவது வயதில் 2002-2003 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். 2009 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடினார். சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.

சூலை 25, 2016ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடியபோது ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி, இந்தியத் துடுப்பாட்ட அணி, நியூசிலாந்து துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி, பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளுக்கு எதிராக 50 மட்டையாளர்களை வீழ்த்திய முதல் விரைவு வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.[2]முதல் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி அதில் 10 மட்டையாளர்களை 3 போட்டிகளில் வீழ்த்தினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருமுறை ஐந்து மட்டையாளர்ளை வீழ்த்தியுள்ளார்.

ஆகத்து 3, 2017ஆம் ஆண்டில் லங்காஷயர் மாகாணத் துடுப்பாட்ட அணி ஓல்டு டரஃபோர்டு துடுப்பாட்ட அரங்கத்தின் காட்சி மாடத்திற்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் பெயர் சூட்டப்படும் என அறிவித்தது.[3] செப்டம்பர் 8, 2017 ஆம் ஆண்டில் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 500வது மட்டையாளரை வீழ்த்தினார். இதன்மூலம் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் எனும் சாதனை படைத்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜேம்ஸ் ஆண்டர்சன் பர்ன்லி செயின்ட் மேரி மற்றும் செயின்ட் தியோடரின் ஆர்.சி உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். இவர் சிறு வயதிலிருந்தே பர்ன்லி துடுப்பாட்ட சங்கத்தில் துடுப்பாட்டம் விளையாடினார். இவரது சிறுவயது கனவு ஒரு துடுப்பாட்டம் வீரராக இருக்க வேண்டும் என்பதாகும். 17 ஆம் வயதில், ஆண்டர்சன் லங்காஷயர் லீக்கின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தார். [4] "நான் எப்போதுமே விரைவாகவே பந்து வீசினேன், ஆனால் நான் 17 வயதில் இருந்தபோது அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை என்று இவர் கூறினார். [5]

அறிமுகமான சில மாதங்களிலேயே இவர் இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறினார்.சிகை அலங்காரங்கள் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் போன்றவற்றினால் இவர் டேவிட் பெக்காமுடன் ஒப்பிடப்பட்டார்.[6] 2006 ஆம் ஆண்டில், ஹேலின் ஹோலி ஏஞ்சல்ஸின் ஆர்.சி. தேவாலயத்தில், டேனியல் லாயிட் என்பவரை மணந்தார், 2004 ஆம் ஆண்டில் லண்டனில்இருந்தபோது அவரைச் சந்தித்தார். திருமணம் தன்னை "மிகவும் மகிழ்ச்சியான நபராக" ஆக்கியுள்ளது என்று இவர் கூறினார். [7] இந்தத் தம்பதியினர் சனவரி 8, 2009 அன்று, டேனிலா ஆண்டர்சன் லோலா ரோஸ் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். ரூபி லக்ஸ் எனும் இரண்டாவது மகள் 9 டிசம்பர் 2010 ஆம் ஆண்டில் பிறந்தார். [8]

ஆண்டர்சன் 2012 முதல் விளம்பபர மாதிரியாகத் தோன்றினார். ஏப்ரல் 2014 ஆம் ஆண்டில் , லண்டனை தளமாகக் கொண்ட ஆண்கள் ஆடைகள் நிறுவனமான செஸ் லண்டனுடன் தனது முதல் தொழில் வாழ்க்கையினைத் தொடங்கினார். [9] அக்டோபர் 2014 இன் பிற்பகுதியில் இவர் தனது சொந்த ஆண்கள் ஆடை நிறுவனத்தினைத் துவங்கினார்.[10] மேலும் 2015 ஆம் ஆண்டில் ஒரு கடிகாரத்தை வெளியிடுவதற்காக பிரிட்டிஷ் கடிகாரத் தயாரிப்பாளர் ஹரோல்ட் பிஞ்ச்பெக்குடன் இணைந்து பணியாற்றினார். [11]

சமூக ஊடகம்[தொகு]

செப்டம்பர் 2010 இல் பிரிட்டனின் மிகப்பெரிய விற்பனையான ஓரின சேர்க்கை இதழான ஆட்டிடூடிற்கு நிர்வாண புகைப்படத்திற்கு மாதிரியாக இருந்த முதல் துடுப்பாட்ட வீரர் ஆனார் . "ஓரின சேர்க்கை துடுப்பாட்ட வீரர்கள் இருந்தால் அவர்கள் வெளியே வரும் அளவுக்கு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், என அவர் கூறினார்.[12]

முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் மற்றும் பிபிசி ரேடியோ 1 வானொலி தொகுப்பாளர் கிரெக் ஜேம்ஸ் ஆகியோருடன் இனைந்து ஆண்டர்சன் பிபிசி ரேடியோ 5 வில் நாட் ஜஸ்ட் கிரிக்கெட் என்ற துடுப்பாட்ட கருப்பொருள் சார்ந்த வானொலி நிகழ்ச்சியை நடத்துகிறார். வானொலி நிகழ்ச்சி 2013 ஆம் ஆண்டின் சிறந்த வானொலிக்கான அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

15 நவம்பர் 2017 அன்று, ஆண்டர்சன் பெலிக்ஸ் வைட் மற்றும் கிரெக் ஜேம்ஸ் ஆகியோருடன் சேர்ந்து 'டைலெண்டர்ஸ்' நிகழ்ச்சியைத் தொடங்கினார். இது ஆரம்பத்தில் 2017-18 ஆஷஸ் தொடரை உள்ளடக்கியதாக இருந்தது.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 4

சாதனைகள்[தொகு]

முதல் 25 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி அதில் 10 மட்டையாளர்களை 3 போட்டிகளில் வீழ்த்தினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருமுறை ஐந்து மட்டையாளர்ளை வீழ்த்தியுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். சொந்தமண்ணில் 300 மட்டையாளர்களை வீழ்த்திய முதல் விரைவு வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்தார்.[13] 2017 ஆம் ஆண்டில் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 62வது முறையாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் கொட்னி வோல்சுவின் சாதனையை முறியடித்தார். 500 தேர்வுத் துடுப்பாட்ட மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிக இலக்குகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்களின் வரிசையில் முதல் இடத்தையும், பன்னாட்டு அளவில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளார். அதிக வீரர்களை இழப்பு வீச்சு மூலம் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார்.[14]

சான்றுகள்[தொகு]

 1. Scyld Berry (6 January 2011). "The Ashes: James Anderson, the king of swing, earns his place among England's fast-bowling greats". The Daily Telegraph (London). https://www.telegraph.co.uk/sport/cricket/international/theashes/8244183/The-Ashes-James-Anderson-the-king-of-swing-earns-his-place-among-Englands-fast-bowling-greats.html.  Retrieved on 27 June 2008.
 2. Scott Heinrich (31 December 2002). "Anderson on fast track". BBC Online. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/2282874.stm.  Retrieved on 26 June 2008.
 3. https://www.bbc.co.uk/sport/cricket/40823606
 4. Emma John (19 September 2003). "Lessons in life". ESPNcricinfo. Retrieved on 29 May 2008.
 5. .  Retrieved on 8 August 2016.
 6. Emma John (19 September 2003). "Lessons in life". ESPNcricinfo. Retrieved on 29 May 2008.
 7. Emma John (October 2007). "How the pin-up grew up". ESPNcricinfo. Retrieved on 10 December 2007.
 8. Lancashire County Cricket Club (12 January 2009). "Jimmy's Finest Delivery". ESPNcricinfo. 16 June 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. Retrieved on 12 January 2009.
 9. .  Retrieved on 13 August 2014
 10. "Archived copy". 17 October 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 October 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-10-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-12-24 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Naked Lancashire cricketer James Anderson in Attitude". BBC News. 20 September 2010. https://www.bbc.co.uk/news/uk-england-lancashire-11377673. பார்த்த நாள்: 20 September 2010. 
 13. "Amla's latest landmark, and Anderson's home comforts". cricinfo. 2017-04-11 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Anderson's hard yards set new record". ESPNcricinfo. http://www.espncricinfo.com/story/_/id/23007257/anderson-hard-yards-set-new-record. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_அண்டர்சன்&oldid=3573379" இருந்து மீள்விக்கப்பட்டது