உள்ளடக்கத்துக்குச் செல்

கொட்னி வோல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொட்னி வோல்சு
பிறப்பு30 அக்டோபர் 1962 (அகவை 61)
விருதுகள்Order of Jamaica

கொட்னி வோல்சு (கொட்னி வோல்ஷ், Courtney Walsh, அக்டோபர் 30, 1962) மேற்கிந்தியத்தீவுகள் அணியின் குறிப்பிடத்தக்க பந்தாளர். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக 500 இலக்குகளைப் பெற்றவர் இவராவார். 1962 ஒக்ரோபர் 30 ஆம் திகதி பிறந்த வோல்சு ஜமெய்க்காவுக்காக ஆட அரம்பித்து 1984இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பேர்த்தில் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆடினார். இங்கிலாந்தின் குளோசெசுரசயர் அணிக்காகவும் ஆடியுள்ளார். வலதுகை வேகப்பந்தாளரான இவர் மொத்தமாக 519 தேர்வுத் துடுப்பாட்ட இலக்குகளை வீழ்த்தியுள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்னி_வோல்சு&oldid=3990803" இலிருந்து மீள்விக்கப்பட்டது