2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2021–2023 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
நாட்கள்ஆகத்து 4, 2021 – மார்ச்சு 31, 2023
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்தேர்வுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்League and Final
மொத்த பங்கேற்பாளர்கள்9
அலுவல்முறை வலைத்தளம்ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
2023–2025 →

2021–23 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2021-23 ICC World Test Championship) என்பது ஐசிசி நடத்தும் உலகத் தேர்வு துடுப்பாட்ட வகையின் இரண்டாம் பதிப்பு ஆகும். இவ்வாகையானது 4 ஆகத்து 2021 தொடக்கி 31 மார்ச் 2023 வரை நடைப்பெற உள்ளது[1] .

போட்டி முறை[தொகு]

69 போட்டிகள் கொண்ட இத்தொடரில் ,அனைத்து அணிகளும் 6 தேர்வு துடுப்பாட்ட தொடர்களை (Series) விளையாடும். 3 தொடர்களைத் தம் நாட்டிலும் , பிற 3 தொடர்களை வெளிநாடுகளிலும் விளையாடும் .

புள்ளிகள் வழங்கும் முறை[தொகு]

ஒவ்வொரு போட்டியிலும் , அணிகள் 12 புள்ளிகளுக்காக போட்டியிடும் . ஒரு போட்டியை வெல்லும் அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும் .ஆட்டம் சமனாகும் (Tie) பட்சத்தில் இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகள் வழங்கப்படும். ஆட்டம் டிரா (Draw) ஆகும் பட்சத்தில் , இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்படும். தோல்வித் தழுவும் அணிக்கு புள்ளிகள் கிடையாது. புள்ளிப்பட்டியலில் அணிகள், போட்டியிட்ட புள்ளிகளில் , பெற்ற புள்ளிகளின் சதவீதத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்[2].

புள்ளிகள் வழங்கும் முறை
போட்டி முடிவு கிடைக்கும் புள்ளிகள் போட்டியிட்ட புள்ளிகள் புள்ளிகள் சதவீதம்
வெற்றி 12 12 100
சமன் (Tie) 6 12 50
டிரா (Draw) 4 12 33.33
தோல்வி 0 12 0

அணிகள்[தொகு]

தொடரில் பங்குபெறும் ஐசிசியின் 9 முழுநிலை உறுப்பினர்கள்[3]:

அட்டவணை[தொகு]

பின்வரும் அட்டவணையில் ஒவ்வொரு அணியும் மோதவுள்ள மொத்த போட்டிகளும் அவை மோதாத அணிகளின் பட்டியலும் உள்ளது.

அணி போட்டிகள் மோதாத அணிகள்
மொத்தம் சொந்த நாட்டில் வெளி நாடுகளில்
ஆத்திரேலியா ஆஸ்திரேலியா 18 10 8  வங்காளதேசம்,  நியூசிலாந்து
 வங்காளதேசம் 12 6 6 ஆத்திரேலியா ஆஸ்திரேலியா,  இங்கிலாந்து
 இங்கிலாந்து 22 11 11  வங்காளதேசம்,  இலங்கை
 இந்தியா 19 9 10 பாக்கித்தான் பாக்கிஸ்தான்,  மேற்கிந்தியத் தீவுகள்
 நியூசிலாந்து 13 6 7 ஆத்திரேலியா ஆஸ்திரேலியா,  மேற்கிந்தியத் தீவுகள்
பாக்கித்தான் பாக்கிஸ்தான் 13 7 6  இந்தியா,  தென்னாப்பிரிக்கா
 தென்னாப்பிரிக்கா 15 7 8  இலங்கை, பாக்கித்தான் பாக்கிஸ்தான்
 இலங்கை 13 6 7  இங்கிலாந்து,  தென்னாப்பிரிக்கா
 மேற்கிந்தியத் தீவுகள் 13 7 6  இந்தியா,  நியூசிலாந்து

குழுநிலைப் போட்டிகள்[தொகு]

புள்ளிப்பட்டியல்[தொகு]

நி. அணி தொடர்கள் போட்டிகள் போ. பு. க. வி. இ.ஒ.வி.
ஆ. வெ. தோ. மு.இ. ஆ. வெ. தோ மு.இ. ச.
1 Flag of Australia.svg ஆஸ்திரேலியா 2* 1 0 0 6 4 0 2 0 72 56 0 77.77 1.370
2 Flag of Pakistan.svg பாக்கிஸ்தான் 3* 1 0 1 5 3 1 1 0 60 40 0 66.66 1.927
3  இலங்கை 2* 1 0 0 3 2 1 0 0 36 24 0 66.66 0.992
4  தென்னாப்பிரிக்கா 2 1 0 1 5 3 2 0 0 60 36 0 60.00 0.976
5  இந்தியா 4* 1 1 0 10 5 3 2 0 120 65 3[a] 54.16 1.239
6  நியூசிலாந்து 3 0 1 2 6 2 3 1 0 72 28 0 38.88 0.939
7  மேற்கிந்தியத் தீவுகள் 3* 0 1 1 5 1 3 1 0 60 16 0 26.66 0.666
8  வங்காளதேசம் 2 0 1 1 4 1 3 0 0 48 12 0 25.00 0.543
9  இங்கிலாந்து 3* 0 1 0 10 1 6 3 0 120 14 10[b] 11.66 0.724
மூலம்: பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை,[7] ESPNcricinfo[8]
Last updated: 12 March 2022
  • *நடப்பு தொடர்கள்
  •      இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் நிலையில் உள்ள அணிகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "ICC confirms details of next World Test Championship". www.icc-cricket.com (ஆங்கிலம்). 2021-08-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Everything you need to know about World Test Championship 2021-23". www.icc-cricket.com (ஆங்கிலம்). 2021-08-27 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Everything you need to know about World Test Championship 2021-23". www.icc-cricket.com (ஆங்கிலம்). 2021-08-27 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; EngIndPen என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; SAIndPen என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AusEngPen என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. "ICC World Test Championship 2021-2023 Standings". International Cricket Council. 8 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
  8. "ICC World Test Championship 2021–2023 Table". ESPN Cricinfo. 8 December 2021 அன்று பார்க்கப்பட்டது.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found