1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
1900 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அல்லது அலுவல்முறையாக தற்போது இரண்டாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the II Olympiad) பிரான்சின் பாரிசில் 1900ஆம் ஆண்டு மே 14 முதல் அக்டோபர் 28 வரை நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இதில் திறப்புவிழாவோ நிறைவு விழாவோ நடைபெறவில்லை. இந்த ஒலிம்பிக் போட்டிகள் 1900இல் பாரிசில் நடந்த உலகக் கண்காட்சியின் அங்கமாக நடைபெற்றது. 19 பல்வேறு விளையாட்டுக்களில் 997 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல்முறையாக மகளிர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். எலென் டெ பூர்தலேசு என்ற பெண் மாலுமி ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் பெண்மணியாக விளங்கினார். போட்டிகளை ஞாயிறன்று நடத்துவதற்கு அமெரிக்கப் போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்; தங்கள் கல்லூரிகளின் சார்பாக பங்கேற்ற இந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் சமயப்படியான ஓய்வுநாளில் போட்டியிட மறுத்து விலகிக் கொள்ள நேரிட்டது.
1895இல் சோர்போன் மாநாட்டில் பியர் தெ குபர்த்தென் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை 1900இல் பாரிசில் நடத்த முன்மொழிந்தார். அந்த மாநாட்டிற்கு வந்திருந்த சார்பாளர்கள் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க மனமில்லாததால் முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை 1896இல் நடத்த விரும்பினர். இதன்படி முதல் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1896இல் கிரீசின் ஏதென்சில் நடத்தவும் 1900இல் இரண்டாவது ஒலிம்பிக்கை பாரிசில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
1900இல் வென்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்கள் எதுவும் வழங்கப்படவில்லை; கோப்பைகள் அல்லது கிண்ணங்கள் வழங்கப்பட்டன. ஒலிம்பிக் இயக்க வரலாற்றிலேயே சில வழைமையில்லாத விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பெற்றன; இதுவே முதலும் கடைசியாகவும் முடிந்தது. தானுந்து மற்றும் பொறியுந்து பந்தயங்கள்,[2] வெப்பவளி பலூன்கள்,[3] துடுப்பாட்டம்,[4] கிராக்கெட்டு [5] பாசுக்கு பெலோட்டா[6], 200 மீ நீச்சல் தடைப் போட்டி, நீரடி நீச்சல் [7] ஆகியன இடம்பெற்றன. இந்த ஒரு ஒலிம்பிக்கில் மட்டும்தான் துப்பாக்கி சுடும் போட்டியில் உயிருள்ள புறாக்கள் இலக்காக பயன்படுத்தப்பட்டன.[8]
பங்கேற்ற நாடுகள்
[தொகு]பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அலுவல்முறைத் தரவுகளின்படி கீழ்கண்ட 24 நாடுகள் 1900 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டன.
பங்கேற்ற நாடுகள் | ||
---|---|---|
|
|
|
சர்ச்சைக்குட்பட்டவை
[தொகு]கீழ்கண்ட நாடுகளிலிருந்தும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் போட்டியாளர்கள் பங்கேற்றதாக சில ஆதாரங்கள் பட்டியலிடுகின்றன:
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "The Olympic Summer Games Factsheet" (PDF). International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2012.
- ↑ Journal of Olympic History, Special Issue - December 2008, The Official Publication of the International Society of Olympic Historians, p. 8, by Karl Lennartz, Tony Bijkerk and Volker Kluge
- ↑ Journal of Olympic History, Special Issue - December 2008, The Official Publication of the International Society of Olympic Historians, p. 13, by Karl Lennartz, Tony Bijkerk and Volker Kluge
- ↑ Journal of Olympic History, Special Issue - December 2008, The Official Publication of the International Society of Olympic Historians, p. 32, by Karl Lennartz, Tony Bijkerk and Volker Kluge
- ↑ Journal of Olympic History, Special Issue - December 2008, The Official Publication of the International Society of Olympic Historians, p. 33, by Karl Lennartz, Tony Bijkerk and Volker Kluge
- ↑ Journal of Olympic History, Special Issue - December 2008, The Official Publication of the International Society of Olympic Historians, p. 52, by Karl Lennartz, Tony Bijkerk and Volker Kluge
- ↑ Journal of Olympic History, Special Issue - December 2008, The Official Publication of the International Society of Olympic Historians, p. 77, by Karl Lennartz, Tony Bijkerk and Volker Kluge
- ↑ Carmichael, Emma (July 27, 2012). "Gawker's Guide to the Olympic Sports You're Pretty Sure Don't Exist: Shooting". Gawker.
- ↑ Adolphe Klingelhoeffer was the son of a Brazilian diplomat. Although he was born and raised in Paris, he had Brazilian citizenship in 1900 and maintained this citizenship until at least the 1940s per French athletics historian Alain Bouille. As this was discovered in late 2008, his participation is usually attributed to France. [1] பரணிடப்பட்டது 2012-05-05 at the வந்தவழி இயந்திரம். Accessed 2009-07-22. 2009-07-24.
- ↑ The winner of the மாரத்தான்—Michel Théato—was a Luxembourger. However, this was discovered only decades later, and, so, his participation and victory are usually attributed to France.
- ↑ "New Zealand at the 1900 Paris Summer Games". Sports Reference. Archived from the original on பெப்பிரவரி 6, 2013. பார்க்கப்பட்ட நாள் November 30, 2013.