1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
1976 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மொண்ட்ரியால் நகரில் சூலை 17 முதல் ஆகத்து 1 வரை 1976ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பாகும். இது XXI ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. இதுவே கனடாவில் நடந்த முதல் ஒலிம்பிக் ஆகும்.
நியூசிலாந்தின் ரக்பி அணி தடைவிதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ததால் நியூசிலாந்தை இவ்வொலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகம் ஏற்காததால் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் இப்போட்டியை புறக்கணித்தன. செனிகலும் கோட் டிவாரும் இப் புறக்கணிப்பில் பங்கேற்க வில்லை. ஈராக்கும் கினியும் புறக்கணிப்பில் பங்கேற்றன. இப்புறக்கணிப்பை மக்கள் கொங்கோ குடியரசு தலைமையேற்று நடத்தியது.
கயானா, மாலி, சுவாசிலாந்து ஆகியவை தொடக்க விழாவில் பங்கு பெற்று பின் காங்கோ தலைமையிலான புறக்கணிப்பில் பங்குபெற்றன. [1]
இதற்கு தொடர்பற்ற இன்னொரு புறக்கணிப்பு சீன குடியரசால் நடத்தப்பட்டது. கனடா அரசு மக்கள் சீன குடியரசை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டதால் சீன குடியரசு என்ற பெயரில் போட்டியிட மறுப்பு தெரிவித்ததால் அந்நாடு போட்டியை புறக்கணித்தது.
அந்தோரா, அன்டிகுவா பர்புடா (ஆண்டிகுவா என்ற பெயரில்), கேமன் தீவுகள், பப்புவா நியூ கினி ஆகியநான்கு நாடுகள் முதன்முதல் கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்குபெற்றன.
போட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவு
[தொகு]ஆம்ஸ்டர்டாம் நகரில் மே 2, 1970 ல் நடத்த ஒலிம்பிக் ஆணையகத்தின் 69 வது அமர்வில் மொண்டிரியால் தேர்வு பெற்றது[2].
1976 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்s[3] | ||||||
---|---|---|---|---|---|---|
நகரம் | நாடு | சுற்று 1 | சுற்று 2 | |||
மொண்ட்ரியால் | கனடா | 25 | 41 | |||
மாசுக்கோ | சோவியத் ஒன்றியம் | 28 | 28 | |||
லாஸ் ஏஞ்சலஸ் | ஐக்கிய அமெரிக்கா | 17 | — |
பதக்கப் பட்டியல்
[தொகு]போட்டையை நடத்தும் நாடு கனடா
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | சோவியத் ஒன்றியம் | 49 | 41 | 35 | 125 |
2 | கிழக்கு ஜேர்மனி | 40 | 25 | 25 | 90 |
3 | ஐக்கிய அமெரிக்கா | 34 | 35 | 25 | 94 |
4 | மேற்கு செருமனி | 10 | 12 | 17 | 39 |
5 | சப்பான் | 9 | 6 | 10 | 25 |
6 | போலந்து | 7 | 6 | 13 | 26 |
7 | பல்கேரியா | 6 | 9 | 7 | 22 |
8 | கியூபா | 6 | 4 | 3 | 13 |
9 | உருமேனியா | 4 | 9 | 14 | 27 |
10 | அங்கேரி | 4 | 5 | 13 | 22 |
11 | பின்லாந்து | 4 | 2 | 0 | 6 |
12 | சுவீடன் | 4 | 1 | 0 | 5 |
13 | ஐக்கிய இராச்சியம் | 3 | 5 | 5 | 13 |
14 | இத்தாலி | 2 | 7 | 4 | 13 |
15 | பிரான்சு | 2 | 3 | 4 | 9 |
16 | யுகோசுலாவியா | 2 | 3 | 3 | 8 |
17 | செக்கோசிலோவாக்கியா | 2 | 2 | 4 | 8 |
18 | நியூசிலாந்து | 2 | 1 | 1 | 4 |
19 | தென் கொரியா | 1 | 1 | 4 | 6 |
20 | சுவிட்சர்லாந்து | 1 | 1 | 2 | 4 |
21 | ஜமேக்கா | 1 | 1 | 0 | 2 |
வட கொரியா | 1 | 1 | 0 | 2 | |
நோர்வே | 1 | 1 | 0 | 2 | |
24 | டென்மார்க் | 1 | 0 | 2 | 3 |
25 | மெக்சிக்கோ | 1 | 0 | 1 | 2 |
26 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1 | 0 | 0 | 1 |
27 | கனடா | 0 | 5 | 6 | 11 |
28 | பெல்ஜியம் | 0 | 3 | 3 | 6 |
29 | நெதர்லாந்து | 0 | 2 | 3 | 5 |
30 | போர்த்துகல் | 0 | 2 | 0 | 2 |
எசுப்பானியா | 0 | 2 | 0 | 2 | |
32 | ஆத்திரேலியா | 0 | 1 | 4 | 5 |
33 | ஈரான் | 0 | 1 | 1 | 2 |
34 | மங்கோலியா | 0 | 1 | 0 | 1 |
வெனிசுவேலா | 0 | 1 | 0 | 1 | |
36 | பிரேசில் | 0 | 0 | 2 | 2 |
37 | ஆஸ்திரியா | 0 | 0 | 1 | 1 |
பெர்முடா | 0 | 0 | 1 | 1 | |
பாக்கித்தான் | 0 | 0 | 1 | 1 | |
புவேர்ட்டோ ரிக்கோ | 0 | 0 | 1 | 1 | |
தாய்லாந்து | 0 | 0 | 1 | 1 | |
மொத்தம் | 198 | 199 | 216 | 613 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Complete official IOC report. Part I (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 October 2012.
{{cite book}}
: Invalid|url-status=no
(help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-25. பார்க்கப்பட்ட நாள் 2014-03-09.
- ↑ "Past Olympic host city election results". GamesBids. Archived from the original on மார்ச்சு 17, 2011. பார்க்கப்பட்ட நாள் March 17, 2011.