1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக மூன்றாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the III Olympiad) அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் செயின்ட். லூயிசில் ஆகத்து 29 இலிருந்து செப்தெம்பர் 3, 1904 வரை நடைபெற்ற பன்னாட்டுப் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இது சூலை 1 முதல் நவம்பர் 23, 1904 வரை நடைபெற்றுவந்த விரிவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் அங்கமாக அமைந்திருந்தது. இது செயின்ட் லூயிசில் இருந்த வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தற்போது பிரான்சிசு தடகளம் என அறியப்படும் தடகள அரங்கில் நடைபெற்றது. ஆங்கிலம் பெரும்பான்மையாக பேசப்படும் நாடொன்றில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாக இருந்தது. அவ்வாறே ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளும் இதுவே ஆகும்.[2]

இந்த ஒலிம்பிக் போட்டிகள் லூசியானா கொள்முதல் கண்காட்சியின் (Louisiana Purchase Exposition) அங்கமாக இருந்தது. விளையாட்டு நிகழ்வுகள் திறனாக திட்டமிடப்படவில்லை; இதனால் இந்த ஒலிம்பிக் ஒரு தோல்வியாகவே கருதப்பட்டது.[3]

பங்குபெற்ற நாடுகள்[தொகு]

பங்கு பெற்றவர்கள்.
நீலம் = முதன்முதலாக பங்கேற்றவர்கள்
பச்சை = முன்னதாக பங்கேற்றவர்கள்.
மஞ்சள் சதுரம் நடத்துகின்ற நகரமான (செயின்ட் லூயிஸ்)
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கலந்துகொண்ட போட்டியாளர்கள்

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 12 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.[4] செயின்ட் லூயிசிற்கு வருவதற்கு ஏற்பட்ட தடங்கல்களாலும் உருசிய-சப்பானியப் போரினாலும் வட அமெரிக்காவைத் தவிர்த்த பிற நாடுகளிலிருந்து 52 போட்டியாளர்களே கலந்து கொண்டனர்.

அமெரிக்க மிதிவண்டியாளர் பிராங்க் பிசோனி இத்தாலியின் போட்டியாளராகவும் கருதப்பட்டார்.[5] அவ்வாறே அமெரிக்க மற்போர் வீரர்கள் சார்லசு எரிக்சனும் பெர்னோஃப் ஆன்சனும் நோர்வேஜியப் போட்டியாளர்களாகக் கருதப்பட்டனர்.[6]

பதக்கப் பட்டியல்[தொகு]

1904 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற முதல் 10 நாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.

1904 ஒலிம்பிக்கில் 800 மீ ஓட்டப்பந்தயத்தில் வழங்கப்பட்ட வெள்ளி பதக்கம்.
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா (போட்டி நடத்திய நாடு) 78 82 79 239
2  செருமனி 4 4 5 13
3  கியூபா 4 2 3 9
4  கனடா 4 1 1 6
5  அங்கேரி 2 1 1 4
6  ஐக்கிய இராச்சியம் 1 1 0 2
 கலவை அணி 1 1 0 2
8  கிரேக்க நாடு 1 0 1 2
 சுவிட்சர்லாந்து 1 0 1 2
10  ஆஸ்திரியா 0 0 1 1

மேற்சான்றுகள்[தொகு]

  1. "The Olympic Summer Games Factsheet" (PDF). International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 5, 2012.
  2. Christen, Barbara S.; Steven Flanders (நவம்பர் 2001). Cass Gilbert, Life and Work: Architect of the Public Domain. W. W. Norton & Company. பக். 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-393-73065-4. http://books.google.com/books?id=_a7CkRmc8oIC&pg=PA257&dq=%221904+Summer+Olympics%22&ei=7yVMSIqCMIfQigGW-t3OCg&sig=t_bej9ZBdpnb7NbiOeL73TvdAQc. பார்த்த நாள்: சூன் 8, 2008. 
  3. Zarnowski, C. Frank. "A Look at Olympic Costs," பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம் Citius, Altius, Fortius (US). Summer 1992, Vol. 1, Issue 1, p. 19 [4 of 17 PDF]; retrieved 2012-7-24.
  4. Mallon, Bill (1998). "1904 Olympic Games — Analysis and Summaries" (PDF). LA84 Foundation. Archived from the original (PDF) on ஜூலை 8, 2011. பார்க்கப்பட்ட நாள் August 8, 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. SR/Olympics, "Italy at the 1904 St. Louis Summer Games" பரணிடப்பட்டது 2017-11-07 at the வந்தவழி இயந்திரம்; "http://www.sports-reference.com/olympics/athletes/bi/frank-bizzoni-1.html "Frank Bizzoni" பரணிடப்பட்டது 2017-11-07 at the வந்தவழி இயந்திரம்; retrieved 2012-7-23.
  6. SR/Olympics, "Norway at the 1904 St. Louis Summer Games" பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்; "Charles Ericksen" பரணிடப்பட்டது 2012-12-16 at the வந்தவழி இயந்திரம்; "Bernhof Hansen" பரணிடப்பட்டது 2011-09-15 at the வந்தவழி இயந்திரம்; retrieved 2012-7-23.

மேலும் அறிய[தொகு]

பிற வலைத்தளங்கள்[தொகு]