1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முனிச் நகரில் ஆகத்து 26 முதல் செப்டம்பர் 11 வரை 1972ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பாகும். இது XX ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. இது மேற்கு செருமனியின் முனிச் நகரத்தில் நடக்கும் இரண்டாவது ஒலிம்பிக்காகும். முதல் ஒலிம்பிக் 1932ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்தது.

இப்போட்டி முனிச் படுகொலையால் பாதிக்கப்பட்டது. இப்படுகொலையில் 11 இசுரேலிய வீரர்களும் பயிற்சியாளர்களும் காவல்துறையினரும் ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் மூவர் உயிருடன் பிடிபட்டனர்.[1]

பதினொரு நாடுகள் முதன்முறையாக முனிச் ஒலிம்பிக்கின் போது பங்கு கொண்டன. அவை அல்பேனியா, சவுதி அரேபியா, சோமாலியா, வட கொரியா, டாகோமெ (தற்போது பெனின்), காபோன், புர்க்கினா பாசோ, டோகோ, மலாவி, லெசோத்தோ, சுவாசிலாந்து. பங்குபெற்ற நாடுகள் செருமன் எழுத்து முறைப்படி வந்தன அதனால் எகிப்து முதலில் வந்தது.

போட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவு[தொகு]

ஆகத்து 26, 1966 ல் ரோமில் நடந்த 64வது நடத்த ஒலிம்பிக் ஆணையகத்தின் அமர்வில் முனிச் தேர்வு பெற்றது[2]

1972 ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்[3]
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2
முனிச்  மேற்கு செருமனி 29 31
மாட்ரிட்  எசுப்பானியா 16 16
மொண்ட்ரியால்  கனடா 6 13
டெட்ராய்ட்  ஐக்கிய அமெரிக்கா 6

பதக்கப் பட்டியல்[தொகு]

பங்கு கொண்ட நாடுகளில் 48 பதக்கம் பெற்றன.       போட்டையை நடத்தும் நாடு மேற்கு செருமனி

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  சோவியத் ஒன்றியம் 50 27 22 99
2  ஐக்கிய அமெரிக்கா 33 31 30 94
3  கிழக்கு ஜேர்மனி 20 23 23 66
4  மேற்கு செருமனி 13 11 16 40
5  சப்பான் 13 8 8 29
6  ஆத்திரேலியா 8 7 2 17
7  போலந்து 7 5 9 21
8  அங்கேரி 6 13 16 35
9  பல்கேரியா 6 10 5 21
10  இத்தாலி 5 3 10 18
11  சுவீடன் 4 6 6 16
12  ஐக்கிய இராச்சியம் 4 5 9 18
13  உருமேனியா 3 6 7 16
14  கியூபா 3 1 4 8
 பின்லாந்து 3 1 4 8
16  நெதர்லாந்து 3 1 1 5
17  பிரான்சு 2 4 7 13
18  செக்கோசிலோவாக்கியா 2 4 2 8
19  கென்யா 2 3 4 9
20  யுகோசுலாவியா 2 1 2 5
21  நோர்வே 2 1 1 4
22  வட கொரியா 1 1 3 5
23  நியூசிலாந்து 1 1 1 3
24  உகாண்டா 1 1 0 2
25  டென்மார்க் 1 0 0 1
26  சுவிட்சர்லாந்து 0 3 0 3
27  கனடா 0 2 3 5
28  ஈரான் 0 2 1 3
29  பெல்ஜியம் 0 2 0 2
 கிரேக்க நாடு 0 2 0 2
31  ஆஸ்திரியா 0 1 2 3
 கொலம்பியா 0 1 2 3
33  அர்கெந்தீனா 0 1 0 1
 தென் கொரியா 0 1 0 1
 லெபனான் 0 1 0 1
 மெக்சிக்கோ 0 1 0 1
 மங்கோலியா 0 1 0 1
 பாக்கித்தான் 0 1 0 1
 தூனிசியா 0 1 0 1
 துருக்கி 0 1 0 1
41  பிரேசில் 0 0 2 2
 எதியோப்பியா 0 0 2 2
43  கானா 0 0 1 1
 இந்தியா 0 0 1 1
 ஜமேக்கா 0 0 1 1
 நைஜர் 0 0 1 1
 நைஜீரியா 0 0 1 1
 எசுப்பானியா 0 0 1 1
மொத்தம் 195 195 210 600

மேற்கோள்கள்[தொகு]

  1. மூனிக் ஒலிம்பிக் படுகொலை: பாலத்தீன இயக்கத்தைப் பழிவாங்கிய இஸ்ரேல்
  2. "IOC Vote History" இம் மூலத்தில் இருந்து 2008-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080525070757/http://www.aldaver.com/votes.html. 
  3. [https://www.webcitation.org/5xFvf0ufx?url=http://www.gamesbids.com/eng/past.html "Past Olympic host city election results"]. GamesBids இம் மூலத்தில் இருந்து 17 மார்ச் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5xFvf0ufx?url=http://www.gamesbids.com/eng/past.html. பார்த்த நாள்: 17 March 2011.