1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1908 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், அலுவல்முறையாக நான்காம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the IV Olympiad) இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1908ஆம் ஆண்டில் நடந்த பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளை முதலில் உரோமை நகரத்தில் நடத்துவதாயிருந்தது; 1906இல் வெசுவியசு எரிமலை வெடிக்கத் தொடங்கியதை அடுத்து ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறையால் இது இலண்டனில் நடத்தப்பட வேண்டியதாயிற்று. இது தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நான்காவது பதிப்பாக குறிக்கப்பட்டது; மாற்று நான்காண்டுகளில் ஏதென்சில் நடத்தப்பட்ட இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகள் தனியானவை. இந்த ஒலிம்பிக்கின்போது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைவராக பியர் தெ குபர்த்தென் இருந்தார். மொத்தம் 187 நாட்கள், அல்லது 6 மாதங்கள் 4 நாட்கள், நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகள் தற்கால ஒலிம்பிக் வரலாற்றில் மிக நீண்ட நாட்கள் நடந்த போட்டிகளாகும்.

பங்குபெற்ற நாடுகள்[தொகு]

1908 விளையாட்டுக்களில் பங்கேற்ற போட்டியாளர்கள்
ஒவ்வொரு நாட்டிலும் பங்கேற்ற போட்டியாளர்களின் எண்ணிக்கை

1908 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 22 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் அணிகள் பங்கேற்றன. பின்லாந்து, துருக்கி மற்றும் நியூசிலாந்து (ஆஸ்திரலேசியா அணியின் அங்கமாக) கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டிகளாக இது அமைந்தது. ஐக்கிய இராச்சியம் ஒரே அணியாக பங்கேற்றது சில அயர்லாந்து போட்டியாளர்கள் எதிர்த்தனர். தாங்கள் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இருந்தபோதும் தனி அணியாக போட்டியிட இவர்கள் விரும்பினர். அயர்லாந்து புறக்கணிப்பிற்கு பயந்து ஐக்கிய இராச்சிய அணி என்றில்லாமல் பெரிய பிரித்தானியா/அயர்லாந்து அணி எனப் பெயரை மாற்றினர். மேலும் இரண்டு விளையாட்டுகளில், வளைதடிப் பந்தாட்டம் மற்றும் போலோ, அயர்லாந்து தனிநாடாக பங்கேற்று இரண்டிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றது.[2]

சர்ச்சைக்குரியவை[தொகு]

பதக்க எண்ணிக்கை[தொகு]

இலண்டன் நகரக் காவல்துறையைச் சேர்ந்த பிரித்தானிய அணி கயிறு இழுக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது.

1908இல் பதக்கங்கள் வென்ற முதல் பத்து நாடுகள்:

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய இராச்சியம் (ஒலிம்பிக் நடத்திய நாடு) 56 51 39 146
2  ஐக்கிய அமெரிக்கா 23 12 12 47
3  சுவீடன் 8 6 11 25
4  பிரான்சு 5 5 9 19
5  செருமனி 3 5 5 13
6  அங்கேரி 3 4 2 9
7  கனடா 3 3 10 16
8  நோர்வே 2 3 3 8
9  இத்தாலி 2 2 0 4
10  பெல்ஜியம் 1 5 2 8

மேற்சான்றுகள்[தொகு]

  1. "The Olympic Summer Games Factsheet" (PDF). International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.
  2. ஐரிஷ் டைம்ஸ், 4 ஆகத்து 2008, கெவின் மல்லோனின் கட்டுரை
  3. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அடங்கிய ஆஸ்திரேலேசியாவாக பங்கேற்றது.
  4. அக்காலத்தில் பின்லாந்தின் குறுமன்னர் உருசிய ஆட்சியின் கீழ் இருந்தபோதும் பின்லாந்து தனிநாடாக போட்டியிட்டது.
  5. முழுமையான நாட்டைக் குறிப்பதாக இருந்தபோதும் நெதர்லாந்து துவக்க கால ஒலிம்பிக்குகளில், முன்னதாக அவ்வாறு பெயரிடப்பட்டிருந்த அதன் கௌன்ட்டிகளில் ஒன்றான "ஆலந்து," எனவேக் குறிப்பிடப்பட்டது; ப.ஒ.கு தற்போது இந்நாட்டை "நெதர்லாந்து" எனக் குறிப்பிடுகிறது.
  6. 1908 ஒலிம்பிக்கில், உதுமானியப் பேரரசை "துருக்கி" எனக் குறிப்பிட்டனர். துருக்கியைச் சேர்ந்த சீருடற் பயிற்சியாளர் போட்டியிட்டதாக பதிகைகளில் இருந்தபோதும் மெய்யாக போட்டிகளில் கலந்துகொண்டதிற்கு சாட்சியமில்லை.