2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (2014 Winter Olympics) அல்லது 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (22nd Winter Olympics) உருசியாவின் சோச்சி நகரில் 2014 பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23 வரை நடைபெற்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அயன அயல் மண்டல நகரமொன்றில் நடப்பது இதுவே முதல்முறையாகும். சூலை 4, 2007இல் குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தில் கூடிய 119வது பன்னாட்டு ஒலிம்பிக் குழு மன்றத்தில் இங்கு நடத்த முடிவெடுக்கப்பட்டது.[2] 1980இல் மாஸ்கோ நகரில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்தியுள்ள உருசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
பங்கேற்கும் நாடுகள்[தொகு]
வான்கூவரில் நடைபெற்ற கடைசி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் 82 நாடுகள் பங்கேற்றிருந்தன; இதனை காட்டிலும் கூடுதலாக 88 நாடுகள் இங்கு விளையாடத் தகுதிபெற்று சாதனை படைத்துள்ளன.[3] ஏழு நாடுகள், டொமினிக்கா, மால்ட்டா, பரகுவை, கிழக்குத் திமோர், டோகோ, தொங்கா, மற்றும் சிம்பாப்வே, குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன்முறையாக விளையாடுகின்றன.[4]
2010ல் பங்கேற்று 2014ல் பங்கேற்காத நாடுகள் | 2010ல் பங்கேற்காமல் 2014ல் பங்கேற்கும் நாடுகள் |
---|---|
![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
இந்தியப் பங்கேற்பு[தொகு]
இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் நடைமுறைகள் குறித்த பிணக்கினால் திசம்பர் 2012இல் இந்தியா பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் இடைநீக்கம் செய்யப்பட்டது. இந்தக் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியபோதும் இத்தேர்தல்கள் நடைபெறாத நிலை இருந்தது. எனவே இந்தியாவின் சார்பாக இப்போட்டிகளில் பங்கேற்கும் மூவர் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றனர். இவர்களது சாதனைகளும் சுயேச்சை ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள் என பட்டியலிடப்படும் என்பதாக அறிவிக்கப்பட்டது.[5][6] இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு நடைமுறைப்படி தேர்தல் நடந்தது. எனவே சோச்சியில் கூடிய பன்னாட்டு ஒலிம்பிக் குழு, இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடையை நீக்கியது. இதனால் இந்திய வீரர்கள் இனி இந்தியக் கொடியை பயன்படுத்துவர். அவர்களது சாதனைகள் இந்தியாவின் கீழ் பட்டியலிடப்படும்.[7]
ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்[தொகு]
2014 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள் | |||||
---|---|---|---|---|---|
நகரம் | நாடு (தே.ஒ.கு) | சுற்று 1 | சுற்று 2 | ||
சோச்சி | ![]() |
34 | 51 | ||
பியாங்சாங் | ![]() |
36 | 47 | ||
சால்சுபர்க் | ![]() |
25 | — |
விளையாட்டுக்கள்[தொகு]
|
|
|
தொலைக்காட்சி ஒளிபரப்பு[தொகு]
தெற்காசியாவில் 7 நாடுகளில் நேரடி ஒளிபரப்பினை செய்வதற்குரிய உரிமையினை ஸ்டார் இண்டியா தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. [8]
- இந்தியாவில் STAR Sports 2, STAR Sports 4 எனும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடி ஒளிபரப்பினை காண இயலும்.
பதக்கப் பட்டியல்[தொகு]
இறுதி பதக்கப் பட்டியல்:[9]
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ![]() |
13 | 11 | 9 | 33 |
2 | ![]() |
11 | 5 | 10 | 26 |
3 | ![]() |
10 | 10 | 5 | 25 |
4 | ![]() |
9 | 7 | 12 | 28 |
5 | ![]() |
8 | 7 | 9 | 24 |
6 | ![]() |
8 | 6 | 5 | 19 |
7 | ![]() |
6 | 3 | 2 | 11 |
8 | ![]() |
5 | 0 | 1 | 6 |
9 | ![]() |
4 | 8 | 5 | 17 |
10 | ![]() |
4 | 4 | 7 | 15 |
11 | ![]() |
4 | 1 | 1 | 6 |
12 | ![]() |
3 | 4 | 2 | 9 |
13 | ![]() |
3 | 3 | 2 | 8 |
14 | ![]() |
2 | 7 | 6 | 15 |
15 | ![]() |
2 | 4 | 2 | 8 |
16 | ![]() |
2 | 2 | 4 | 8 |
17 | ![]() |
1 | 4 | 3 | 8 |
18 | ![]() |
1 | 3 | 1 | 5 |
19 | ![]() |
1 | 1 | 2 | 4 |
20 | ![]() |
1 | 0 | 1 | 2 |
21 | ![]() |
1 | 0 | 0 | 1 |
22 | ![]() |
0 | 2 | 6 | 8 |
23 | ![]() |
0 | 2 | 2 | 4 |
24 | ![]() |
0 | 2 | 1 | 3 |
25 | ![]() |
0 | 1 | 0 | 1 |
26 | ![]() |
0 | 0 | 1 | 1 |
மொத்தம் | 99 | 97 | 99 | 295 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sochi 2014 Reveals its Slogan". Sochi 2014 Olympic and Paralympic Games Organizing Committee. 25 September 2012. Archived from the original on 24 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181224013936/https://www.olympic.org/news. பார்த்த நாள்: 29 September 2012.
- ↑ «Sochi Elected as Host City of XXII Olympic Winter Games». International Olympic Committee, July 4, 2007
- ↑ "Record 88 nations to participate in Winter Games". Global News. Associated Press (சோச்சி, உருசியா). 2 பெப்ரவரி 2014. http://globalnews.ca/news/1123578/record-88-nations-to-participate-in-winter-games/. பார்த்த நாள்: 2 பெப்ரவரி 2014.
- ↑ MacKenzie, Eric (16 சனவரி 2014). "Sochi Spotlight: Zimbabwe's first Winter Olympian". Pique Newsmagazine (Whistler, British Columbia, கனடா). http://www.piquenewsmagazine.com/whistler/sochi-spotlight-zimbabwes-first-winter-olympian/Content?oid=2542948. பார்த்த நாள்: 16 சனவரி 2014.
- ↑ "Sochi Games: Four Indian skiers to go as independent athletes". Zee news. 31 திசம்பர் 2013. Archived from the original on 2014-01-02. https://web.archive.org/web/20140102160545/http://zeenews.india.com/sports/others/sochi-games-four-indian-skiers-to-go-as-independent-athletes_777046.html. பார்த்த நாள்: 31 திசம்பர் 2013.
- ↑ "Sochi Olympics starts today sans Tricolour; two babus arrive to mentor three athletes". டிஎன்ஏ இந்தியா. 8 பெப்ரவரி 2014. 8 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Olympic ban on India lifted: Official statement of International Olympic Committee". Ndtv. 2014-03-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ioc awards broadcast rights for seven countries in south asia". Olympic.org. 31 ஜூலை 2013. 7 பெப்ரவரி 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-02-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-08 அன்று பார்க்கப்பட்டது. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-02-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-08 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிப்பயணத்தில் Sochi 2014 Olympic and Paralympic Games என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
- அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2014-08-07 at the வந்தவழி இயந்திரம்
- Sochi 2014 (IOC)
- Olimpstroy state corporation பரணிடப்பட்டது 2011-06-09 at the வந்தவழி இயந்திரம்
- Galina Masterova Sochi: an Olympic makeover பரணிடப்பட்டது 2012-07-11 at the வந்தவழி இயந்திரம் Russia Now, 23 February 2010
- Sochi (Google satellite image, latitude: 43.404, longitude: 39.953)