லூஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூஜ்
2010 ஒலிம்பிக்கில் புறப்படும் செருமானிய லூஜ் போட்டியாளர்
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புFédération Internationale de Luge de Course
முதலில் விளையாடியது1870கள்
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்புஇல்லை
அணி உறுப்பினர்கள்ஒருவர் அல்லது இருவர் அணி
இருபாலரும்ஆம், ஆனால் வழமையாக தனித்தனிப் போட்டிகளில்
பகுப்பு/வகைகுளிர்கால விளையாட்டு, நேரக் கெடு
கருவிகள்இசுலை, தலைக்கவசம், தனியாடை, கண் நிழலி, கையுறைகள், விரல் கூர்முனைகள், பனிக் காலணிகள்
விளையாடுமிடம்லூஜ் தடகளம்
தற்போதைய நிலை
ஒலிம்பிக்1964 முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் அங்கம்

லூஜ் (Luge) குளிர்கால விளையாட்டுக்களில் இடம்பெறும் உடல் திறன் விளையாட்டு ஆகும். இப்போட்டிகளில் ஒருவர் அல்லது இருவர் பயணிக்கத்தக்க சிறு இசுலையில் மல்லாந்து படுத்தவாறு (தலை மேலாகவும் கால்கள் முன்புறம் நீட்டியவாறும்) செல்வர். கால்களால் இசுலையின் கைப்பிடிகளை வலித்தும் அல்லது எதிர் தோள்பட்டையில் அழுத்தம் கொடுத்தும் செல்லும் திசையை மாற்றவியலும். பந்தய இசுலைகள் ஒற்றையருக்கு 21–25 கிலோகிராமாகவும் (46–55 பவு) ஆகவும் இரட்டையருக்கு 25–30 கிலோகிராமாகவும் (55–66 பவு) உள்ளது.[1] இவ்வாறான இசுலைகளில் சறுக்கும் மூன்று விளையாட்டுக்களான பாப் இசுலெட், எலும்புக்கூடு பனிச்சறுக்கு மற்றும் லூஜில் இதுவே மிகவும் விரைவானதும் அபாயகரமானதும் ஆகும். இதில் போட்டியாளர்கள் 140 மணிக்கு கிமீ (87 மை/மணி) பயணிக்க இயலும். 2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு முன்னதாக கனடாவில் நடந்த போட்டியொன்றில் ஆத்திரியாவைச் சேர்ந்த மானுவல் ப்ஃபிஸ்டர் மிக விரைவான சாதனையாக 154 மணிக்கு கிமீ (95.69 மை/மணி) எட்டியுள்ளார்.[2]வான்கூவரில் நடந்த 2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போது தடகளம் மிகவும் விரைவான ஒன்றாக கூறப்பட்ட முறையீடுகளிடையே சியார்சியாவின் போட்டியாளர் பயிற்சியின்போது உயிரிழந்தார்.

லூஜ் என்ற சொல் முதன்முதலில் 1905இல் பயன்படுத்தப்பட்டுள்ளது; இதன் மூலம் சுவிட்சர்லாந்தின் பிரான்சிய வழக்கிலிருந்து சிறு பனிச்சறுக்கு ஊர்தி எனப் பொருள்படும் கால்லிய வேரிலிருந்து வந்துள்ளதாக அறியப்படுகிறது. [3]


Luge sled, with steel runners removed.
A young luger on the start ramp at the Utah Olympic track.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Rules & Policies". usaluge.org. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.
  2. "Whistler's fast luge track poised risky". News.xinhuanet.com. 2010-02-13. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.
  3. "Online Etymology Dictionary". Etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூஜ்&oldid=3093484" இலிருந்து மீள்விக்கப்பட்டது