2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
தோற்றம்
| குறிக்கோள் | "Welcome Home" in Greek: "Καλως Ήλθατε Σπίτι" |
|---|---|
| பங்கேற்கும் நாடுகள் | 201[1] |
| பங்கேற்கும் போட்டியாளர்கள் | 10,625 (6,296 ஆடவர், 4,329 மகளிர்)[2] |
| நிகழ்ச்சிகள் | 301 in 28 sports |
| அலுவல்முறை துவக்கம் | கிரீசின் அரசுத் தலைவர் கான்சுடான்டினோசு இசுடெஃபனோபோலசு |
| போட்டியாளர் உறுதிமொழி | சொய் டிமோசுசாக்கி |
2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது கோடைகால ஒலிம்பிக் ஆகும். இது கிரேக்க தலைநகரான ஏதென்சில் ஆகத்து 13 முதல் 29 வரை நடைபெற்றது. இது அதிகாரபூர்வமாக XXVIII ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இதில் 201 நாடுகள் பங்கு பெற்றன. 10,625 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்[1], இதில் ஆண்கள் 6,296 பெண்கள் 4,329 ஆவர். இதில் 28 போட்டிகள் நடைபெற்றது அதில் 301 நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் முறையாக பெண்களுக்கான மல்யுத்தமும் வாள் வீச்சும் இதில் இடம் பெற்றன. இப்போட்டிகளுக்கு 10 மில்லியன் யூரோ செலவானதாக சூன் 2004 ல் பிபிசி தெரிவித்தது. நவம்பர் 2004 கிரேக்க தூதரகம் இப்போட்டிக்கு 8.954 மில்லியன் யூரோ செலவானதாக கூறியது. இதில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட 1.08 மில்லியன் யூரோ அடக்கம்.
போட்டி நடத்தும் நாடு தெரிவு
[தொகு]
| 2004 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள் | ||||||
|---|---|---|---|---|---|---|
| நகரம் | நாடு | சுற்று 1 | Run-off | சுற்று 2 | சுற்று 3 | சுற்று 4 |
| ஏதென்சு | 32 | — | 38 | 52 | 66 | |
| ரோம் | 23 | — | 28 | 35 | 41 | |
| கேப் டவுன் | 16 | 62 | 22 | 20 | — | |
| இசுட்டாக்கோம் | 20 | — | 19 | — | — | |
| புவெனசு ஐரிசு | 16 | 44 | — | — | — | |
பதக்கப் பட்டியல்
[தொகு]பங்குகொண்டவைகளில் 74 நாடுகள் பதக்கம் பெற்றன.
மேற்சான்றுகள்
[தொகு]- 1 2 "Athens 2004". International Olympic Committee. olympic.org. Retrieved 19 January 2008.
- ↑ "The Olympic Summer Games Factsheet" (PDF). International Olympic Committee. Retrieved 5 August 2012.